காய் கனிகளில் உள்ள நச்சுண்ணிகளும் அதன் பின்விளைவுகளும் :
இப்பல்லாம் பதிவுலகம் பக்கம் வருவதே இல்லை. பல நல்ல பதிவுகள் படிக்கமுடியலை. நேரமின்மை+சோம்பல்+முகநூல் ஈர்ப்பு அப்படின்னு பல காரணங்கள். இந்த மாதம் பதிவே போடலை. என்னா பண்றதுன்னு பார்த்தா, இந்த போஸ்ட்தான் டிராஃப்ட்ல இருந்துச்சு.நாம இன்னும் பதிவர்தான்னு காட்டிக்கணுமேன்னு பப்ளிஷ் பண்ணிட்டேன்.
இப்பல்லாம் பதிவுலகம் பக்கம் வருவதே இல்லை. பல நல்ல பதிவுகள் படிக்கமுடியலை. நேரமின்மை+சோம்பல்+முகநூல் ஈர்ப்பு அப்படின்னு பல காரணங்கள். இந்த மாதம் பதிவே போடலை. என்னா பண்றதுன்னு பார்த்தா, இந்த போஸ்ட்தான் டிராஃப்ட்ல இருந்துச்சு.நாம இன்னும் பதிவர்தான்னு காட்டிக்கணுமேன்னு பப்ளிஷ் பண்ணிட்டேன்.
பூச்சி மருந்து தெளிப்பதால் ஆன நச்சு, பயிர்களால் ஏற்படும் நச்சுண்ணிகள் (aflotoxins, patulin, ochratoxin etc) , இயற்கையாக காணும் நச்சுப் பொருட்கள் , உலோக படிவங்கள் ஆகியன காய் கனிகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களாகும் .
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் தோன்றும் பூச்சி பூஞ்சாள நோய்களை கட்டுப்படுத்த பூச்சிகொல்லிகள் தெளிக்கபடுகின்றன. பயிர்களுக்கு பாய்ச்சப்படும் நீர் மற்றும் உரங்களின் மூலமாக உலோக படிவங்களும்,மண் வகை , விதை, நீர் மூலமாக பூஞ்சாளங்களும் காய் கனிகளில் நச்சாக படிகின்றன.
பூச்சி மருந்துகள் காச நோய் உருவாக்கவும், நுரையீரல் , கல் ஈரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் போன்ற உறுப்புகளை தாக்கும் சக்தி உடையது. சில பூச்சிக்கொல்லிகளால் எடை குறைவு , பசி இன்மை , எரிச்சல் , நன்நடத்தையில் மாற்றம்(behavioural change) , மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படும் அபாயமும் உள்ளது .
காய் கனிகளில் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளான – Aldrin, Chlordane, Endrin, Heptachlor, Ethyl Parathion மற்றும் தேர்வு செய்து உபயோகிக்கும் மருந்துகளான DDT, Endosulfan etc காய் கனிகளில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது .
உலோக படிவங்கள் தோல் சம்பந்தமான நோய் , இருதய நோய் மற்றும் பிற உறுப்புக்களை தாக்கும் வல்லமை உடையது.
நீர் , உரம் மூலம் தவிர்க்க இயலாத பட்சத்தில், பூச்சி தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுபடுத்தலாம். உணவு பாதுகாப்பு சட்டத்திலும் இந்த தொழில்நுட்பத்தை வலியுறுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்நாட்டில் பூச்சி மருந்தின்
நிலை - சில புள்ளியியல் விபரங்கள்
- கொசு ஒழிப்புக்காக DDT 1946 லிருந்து உபயோகத்தில்
உள்ளது .
- ஆண்டிற்கு சராசரியாக DDT -7500 மெட்ரிக் டன் பயன்படுத்தபடுகிறது.
- இந்திய உணவில் 0.27 mg DDT உள்ளது .
- இந்தியர்களிடமே அதிகபடியான அளவு
பதிவு செய்யப்பட்டுள்ளது .
- பூச்சிமருந்து உற்பத்தி சந்தை நிலவரம் 2500-3000 ரூபாய் கோடியில் .
- பயிர்வாரியான பூச்சிமருந்து
உபயோகம் -நெல் 22.8%, சோளம் 8.9%, காய் கனிகள் 7.0%, கோதுமை 6.4%, பயறு வகைகள் 2.8%, பிற பயிர்கள் 7.6%, பருத்தி 44.5%.
- வேளாண்மை 69.4%, பொது சுகாதாரம் 30.6%
- பூச்சிகொல்லிகள் 63.0%, களைகொல்லிகள் 14%, பூஞ்சாள கொல்லிகள் 21%, மற்றவை 2%
- பௌதீக ரீதியாக – Organochlorine 40%, Organophosphate 30%, Carbamates 15%,Synthetic Pyrethroids 10%, Others 5%

29 comments:
பூச்சி மருந்துகளால் இம்புட்டு பாதிப்பு இருக்கா...? ஆஹா ஆபீசர் இவைகளை சாப்பிடவே இப்போ பயமா இருக்கே...!
தெரியாத விஷயங்களை எங்களுக்குத் தெரியப்படுத்தி அடிக்கடி உஷார் படுத்துவதற்கு நன்றிகள் ஆபீசர்...
இனி எந்த பொருள் சாப்பிட்டாலும் பூச்சிகொல்லி மருந்து நியாபகம் தான் வரும்....
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி சகோ
ஆமினா சமையலை விட டேஞ்சராக இருக்கும் போல!!
//ஆமினா சமையலை விட டேஞ்சராக இருக்கும் போல!! //
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
சிவாவின் மனைவி சமையலே தெரியாதவராய் இருந்து சிவாவை கொலையாய் கொல்ல இப்பவே பிரார்த்திக்கிறேன்!
DDT-பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன்.., இந்தியாவில் இந்த அளவு பயன்பாட்டில் இருப்பது கவலை கொள்ளத்தக்கது!
அருமையான விழிப்புணர்வு பதிவு ஆபிசர் சார்!
அருமையான தொரு விழிப்புணர்வுப் பகிர்வு !..மிக்க நன்றி சார் பகிர்வுக்கு .
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது....
மிக்க நன்றி சார்...
//MANO நாஞ்சில் மனோ said...
பூச்சி மருந்துகளால் இம்புட்டு பாதிப்பு இருக்கா...? ஆஹா ஆபீசர் இவைகளை சாப்பிடவே இப்போ பயமா இருக்கே...!//
அத்தனையும் நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் மனோ. பயமெதற்கு, கொஞ்சம் கவனம் மட்டுமே தேவை. :)
//MANO நாஞ்சில் மனோ said...
தெரியாத விஷயங்களை எங்களுக்குத் தெரியப்படுத்தி அடிக்கடி உஷார் படுத்துவதற்கு நன்றிகள் ஆபீசர்...//
வந்து உற்சாகப்படுத்துவதற்கு மிக்க நன்றி மனோ.
//ஆமினா said...
இனி எந்த பொருள் சாப்பிட்டாலும் பூச்சிகொல்லி மருந்து நியாபகம் தான் வரும்....
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி சகோ//
அப்படில்லாம் பயப்படவேண்டாம் சகோ. அடிப்படை விஷயங்கள் அறிந்து கொண்டால், அலர்டா இருக்க இது சிறு உதவி மட்டுமே. நன்றி.
//! சிவகுமார் ! said...
ஆமினா சமையலை விட டேஞ்சராக இருக்கும் போல!!//
இப்பல்லாம் ரொம்ப டேஞ்சராவே இருக்கீங்க போல! இன்னும் மனைவி வந்து காரமா சமைச்சுப்போட்டா, காட்டம் அதிகமாயிடுமே. இது உடம்புக்கு நல்லதில்லை சிவா.
தெரிந்து
கொண்டேன்
ஆபிசர்
அருமையான
தகவல்
நன்றி
//ஆமினா said...
சிவாவின் மனைவி சமையலே தெரியாதவராய் இருந்து சிவாவை கொலையாய் கொல்ல இப்பவே பிரார்த்திக்கிறேன்!//
சமையல் மட்டுமல்ல, சகல வேலைகளும் சிவாவிற்கே சமர்ப்பணம் ஆகணும்னு நான் வழிமொழிகிறேன், சகோ.
//வரலாற்று சுவடுகள் said...
DDT-பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன்.., இந்தியாவில் இந்த அளவு பயன்பாட்டில் இருப்பது கவலை கொள்ளத்தக்கது!
அருமையான விழிப்புணர்வு பதிவு ஆபிசர் சார்!//
நன்றி சார். முடிந்தவரை நம்மாலான விழிப்புணர்வளிப்போம்.
//அம்பாளடியாள் said...
அருமையான தொரு விழிப்புணர்வுப் பகிர்வு !..மிக்க நன்றி சார் பகிர்வுக்கு .//
நன்றி சகோ. தங்கள் வருகைக்கும், ஊக்கமளித்தலுக்கும்.
//திண்டுக்கல் தனபாலன் said...
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது....
மிக்க நன்றி சார்...//
வருகைக்கும், கருத்துப்பதிவிற்கும் மிக்க நன்றி சார்.
// மனசாட்சி™ said...
தெரிந்து
கொண்டேன்
ஆபிசர்
அருமையான
தகவல்
நன்றி//
(நம்) மனசாட்சிக்கே தெரிந்துவிட்டால், பதிவு வெற்றிதான். நன்றி சார்.
அருமையான பதிவு.
நன்றி சார்.
//Rathnavel Natarajan said...
அருமையான பதிவு.
நன்றி சார்.//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா.
thanks thala...
avaciyam intha maathiri post
engalukku kodungal...
/நாய் நக்ஸ் said...
thanks thala...
avaciyam intha maathiri post
engalukku kodungal....//
நிச்சயம் நண்பரே!
உங்கள் பதிவுகள் படித்தேன் அருமை... நான் பதிவு உலக குழந்தை.. எனக்கும் நெல்லை தான், என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்
நெல்லைத்தமிழில் நிறைவான அழைப்பு. அவசியம் தங்கள் வலைப்பூ வருகிறேன் நண்பரே.
Follow pespro.wordpress.com for exclusive coverage of Pest related matters and enrich your knowledge.
One of the most deadliest cancer causing chemical nitrobenzene is being indiscriminatly used in vegetables as Bio/ Orgainic flower booster. It is pity that there is no government agency to check the dubious claims in label by the agrochemical company and protect consumer and farmer
Plant growth regulators needs to be included in hazardous list of Micronutrients as foliar spray and should be included in Fertiliser Control Order, Essential Commodities Act, 1955
அன்புடையீர்,
உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_7.html
தங்கள் தகவலுக்காக!
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
வணக்கம்
இன்று தங்ளின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_7.html?showComment=1389055275351#c7234559865850481387
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment