இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 17 December, 2012

கால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் உணவு பாதுகாப்பு உரை  

              
அறிமுகம்
                   சென்னை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால்வளத்தொழில் நுட்பக்கல்லூரியில், உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகள் குறித்து உரையாற்ற அக்கல்லூரி முதல்வர்  அழைப்புக்கடிதம் அனுப்பியிருந்தார். அத்துடனே, அலைபேசியிலும் அன்பாய் அழைத்திருந்தார்.

                     கடந்த 13.12.12ல், சென்னை சென்று, கோடுவள்ளியிலுள்ள அந்தக்கல்லூரிக்குச் சென்றேன். அக்கல்லூரியில், உணவு மற்றும் பால்வளத்தொழில்கள் குறித்து தமிழகமெங்குமிருந்து வந்து கலந்துகொண்டுள்ள தொழில்முனைவோர்க்கு நடைபெற்று வரும் 30  நாட்கள் பயிற்சி முகாமில், உணவு பாதுகாப்பு சட்டம், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி உரையாற்றினேன்.

கல்லூரி வளாகத்தில் Dr.திரு.கார்த்திகேயனுடன் நான்.
                      கல்லூரி வளாகம் சென்றதும், முகமும் அகமும் மலர வரவேற்றார் டாக்டர். திரு, கார்த்திகேயன். அந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள தொழில் முனைவோரிடம் அவர் என்னை அறிமுகம் செய்துவைத்தார். ஒரு மணிநேரம் எனக்கு ஒதுக்கப்பட்டது. 

சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட டின் உணவின் பாதிப்புகள்.
               சட்டத்தையும், விதிகளையும் மட்டும் சொல்லினால், பயனாளிகள் பயந்துவிடக்கூடாதென்பதற்காக, உணவின் தரம் எவ்வளவு முக்கியம், தரமற்ற உணவினால் விளையும் கேடுகள், அவற்றை எவ்வாறு நாம் முறியடிக்கலாம் என்பன போன்றவற்றை ஒருங்கிணைத்து  கொண்டு சென்றிருந்தேன்.

உணவைக்கெடுக்கும் காரணிகள்


                           ஒரு மணி நேரத்தில் முடிக்கவேண்டுமென துவக்கப்பட்ட உரை, ஒன்றரை மணி நேரத்தையும் கடந்து சென்று கொண்டிருந்தது. மதிய உணவிற்குச் செல்வதையும் மறந்து அமர்ந்து உரையினைக்கேட்டு, இறுதியில் கொடுக்கப்பட்ட கேள்வி நேரத்தில் கணைகளைத்தொடுத்துக்கொண்டிருந்தனர்.
என் கேள்விக்கென்ன பதில்?
                 அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் உணவு குறித்த பிரச்சனைகளை எடுத்து சொன்னபோது, அதனை அறிந்து கொள்வதில் ஆர்வம் மிகக் காட்டினர்.

உணவு உரிமம் பெறும் நடைமுறைகள்
                         தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பயிற்சிக்காக வந்திருந்தனர். அதில் ஒருவர் நெல்லை மாவட்டம் என்பதால், நம் மாவட்டத்திலிருந்து ஒருவரா என மகிழ்ச்சியில் திளைத்தார். 
சுட்ட பழமா சுடாத பழமா!
                     நிகழ்ச்சியில் நிறைவில், கரூர் மாவட்டத்திலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர், எங்கள் ஊருக்கு வந்து, இத்தகைய உரையாற்ற வேண்டுமென அன்பு வேண்டுகோள் விடுத்தார். என் நண்பர் திரு. கொண்டல்ராஜ் அருகிலிருக்கிறார், அழைத்துக்கொள்ளுங்கள் என்றேன்.
பஜ்ஜியிலிருந்து எண்ணெயை நீக்குகிறேன் என்று
 காரீயத்தை கபளீகரம் செய்கிறோமா!

       பயிற்சியில் பங்குபெற்றவர்களுள் கவிஞர் ஒருவரும் உண்டு. ஒன்றரை மணி நேர உரை முடிந்தவுடன், தாளொன்றை என்னிடம் தந்தார். அழகிய கவிதையொன்று. இன்ஸ்டண்டா எழுதிகொண்டுவந்து கொடுத்தார். 
சட்டம் என்ன சொல்கிறது?
                  ரசிக்கும்படியாகவும், படிப்பவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருந்ததால், அதனை இங்கு பகிர்ந்துள்ளேன்.

Follow FOODNELLAI on Twitter