இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 9 January, 2013

இது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பார்வைக்கு.

                                அன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களே,

2013ம் ஆண்டில் நாம் உணவுத்தொழிலிற்கு பதிவுச்சான்றிதழ் வழங்கும்போது:

அதன் பதிவெண் -

2 ** 13 $$$  XXXXXX  என்று வழங்குவோம்.

அதில்  -   2      என்பது பதிவுச்சான்றிதழைக்குறிக்கும்.

                  **  என்பது மாவட்டத்தைக்குறிக்கும்.

                   13   என்பது 2013ம் ஆண்டைக்குறிக்கும்.

                 $$$   என்பது உணவு பாதுகாப்பு அலுவலரின் குறியீட்டு எண்ணாகும்.

  XXXXXX   இது அந்த பதிவுச்சான்றிதழின் வரிசை எண்ணாகும்.

                     இந்த இடத்தில் நம்மில் பலருக்கு வரும் சந்தேகம், 2013ம் ஆண்டில் வரிசை எண் 000001 என்று துவங்க வேண்டுமா என்பதே.

                       fssai மற்றும் நம் துறையின் ஆணையர் அவர்கள் வழங்கியுள்ள வழிகாட்டுதல் உத்தரவுக்களுக்கிணங்க, ஏற்கனவே, கடந்த ஆண்டு, அதாவது 2012ல்,உங்கள் பகுதியில்  123 பதிவுச்சான்றுகள் வழங்கியிருந்தால், இந்த ஆண்டு 2 ** 13 $$$ 000124  என பதிவு எண்ணை துவக்கவேண்டும். இந்த ஆண்டு பதிவு எண் 1லிருந்து துவங்கக்கூடாது. நன்றி. 
                       
Follow FOODNELLAI on Twitter