உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி-பாகம்-2
மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் பயிற்சி
 |
BIS இயக்குனர் திருமதி.கல்பனா அவர்களின் உரை.
|
மூன்றாம் நாள் சென்னை, BIS இயக்குனர் திருமதி.கல்பனா
அவர்களின் சிறப்பு தொழிற்சாலைகள் ஆய்வு குறித்த உரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிற்பகலில், முதல் குரூப், சென்னையிலுள்ள SARGAM LAB பார்வையிட சென்றனர்.
 |
மெஸ்ஸில், என்னுடன் சுகாதார ஆய்வாளர் பயிற்சி முடித்த முரளியுடன் நான். |
பிற்பகலில், அனைவருக்கும் பயிற்சி நடைபெறும் வளாகத்திலேயே, சுட சுட சாப்பாடு. வெஜ்ஜா /நான் -வெஜ்ஜா எனக் கேட்டு கேட்டு உணவளித்தனர்.
 |
காஞ்சிபுரம் ராமகிருஷ்ணன், என்னுடன் XI,XII ஒன்றாய் பயின்ற ஜாண் சிம்சன். |
மூன்றாம் நாளில், முத்தான ஓர் அனுபவம். என்னுடன் பள்ளி பருவத்தில் பயின்ற நண்பர் ஒருவரை சந்தித்த அருமையான அனுபவம் அமைந்தது. ஆம், என்னுடன் விக்கிரமசிங்கபுரம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில், +1 மற்றும் +2 வகுப்பில் ஒன்றாய் பயின்ற நண்பர் ஜாண் சிம்மனும் அந்த பயிற்சியில் குரூப்-A யில் இருந்துள்ளார். அவர் என்னை சந்தித்து சுய அறிமுகம் செய்து கொண்டபின்னர், பள்ளி நாட்களில் மூழ்கித் திளைத்தோம்.
 |
உணவு மாதிரி எடுத்தல் உரை: திரு. S.S.பாண்டி பெருமாள். |
நான்காம் நாளில், திருவாளர்கள் . பாண்டி பெருமாள் சாரும், சந்தானராஜன் சாரும், உணவு மாதிரி எடுத்தல் குறித்து விரிவான உரையாற்றினார்கள். உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரும்போது , அரசு தரப்பில் தேவைப்படும் பல உயர்நீதிமன்ற ,உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நான் திர ட்டி வைக்க பெரிதும் காரணமாய் இருந்தவர்கள் இருவர். ஒருவர், இன்று கன்னியாகுமரி மாவட்ட குற்ற வழக்குகள் துறையில் துணை இயக்குனராக இருக்கும் மரியாதைக்குறிய அரசு வழக்கறிஞர் திரு.பத்மநாபன் எனில், மற்றொருவர் அப்போது பாளை அரசு பகுப்பாய்வகத்தில், FAC நூல்களை படிக்கத் தந்து, நமக்கு சாதகமான தீர்ப்புகளை திரட்ட உதவிய திரு. பாண்டிபெருமாள் சார். என்றும் நான் நன்றிகளுடன் நினைக்கும் இருவர்.
 |
'அன்னம்' உதவியுடன், சிறு சிறு சோதனைகள் செய்து கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி? விளக்கும் திரு.சந்தானராஜன். அருகில்: குருவுக்கேற் ற சிஷ்யனாய் திரு. சோமசுந்தரம். |
திரு.சந்தானராஜன் சார், அடுத்து வந்து, CONCERT அமைப்பின் பெருமை சேர்க்கும் "அன்னம்" கையடக்க பரிசோதனை KIT குறித்து விளக்கமளித்தார். உண்மையில் சிறிய விலையில், பல கலப்படங்கள் கண்டுபிடிக்க உதவிடும் அருமையான கருவிகள். அத்துடன், நாம் பருகும் நீர் தரமானதுதானா என பரிசோதிப்பது எப்படி என்பதையும் அதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வடிவமைத்துள்ள பாட்டிலை கையாளும் விதம் குறித்தும் விளக்கினார். பாமரரும் பயன்படுத்தும் விதத்தில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த KIT அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் அரசின் மூலம் வழங்க CAI எடுத்து வரும் முயற்சி பாராட்டிற்குரியது.
 |
SARGAM LABORATORY ல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள். |
 |
SARGAM LABORATORY ல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்.
|
பிற்பகல், சென்னையிலுள்ள, NABL accreditation பெற்ற SARGAM LAB ஐ பார்வையிட்டோம். ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களைக் கூட கணிக்க உதவிடும் பல கோடி பெறுமான இயந்திரங்கள் அங்கே இருக்கின்றன. அதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டோம்.
 |
NABL ACCREDITTED LAB மற்றும் உணவு பகுப்பாய்வு
குறித்து விளக்கமளித்த திருமதி. அன்னபூரணி, SARGAM LAB. |
திருமதி. அன்னபூரணி உணவு மாதிரியை பகுப்பாய்வு செய்யும் விதம், பகுப்பறிக்கை அனுப்பும் விதம், பகுப்பறிக்கையில் பார்த்து அறிந்து கொள்ள வேண்டியவை குறித்து அருமையாக விளக்கினார்கள்.
 |
BATCH-B அலுவலர்கள் மெயில் ஐ.டி.
|
 |
BATCH-B அலுவலர்கள் மெயில் ஐ.டி.
 |
BATCH-B அலுவலர்கள் மெயில் ஐ.டி. |
|
 |
BATCH-B அலுவலர்கள் மெயில் ஐ.டி. |
 |
BATCH-B அலுவலர்கள் மெயில் ஐ.டி.
|
நான்கு நாட்களும் பல நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள உதவியது. இன்றைய நிறைவு நாள் பயிற்சி குறித்து இன்னும் எழுதுகிறேன்.