இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 14 March, 2013

உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் மீறல்- தண்டனை.

நன்றி: தினமலர், நெல்லை.14.03.13
       
   
            உண்ணும் உணவு நம் உடலுக்கு நன்மை விளைவிப்பதாயிருக்க வேண்டும். நாமென்ன செய்யலாம் அதற்கு? இயற்கை உணவுகளை இனி தேடித்தேடி விரும்பி உண்ணலாம். இது இயந்திர உலகம். இயற்கை உணவு தேடி அலைந்தாலும் கிடைப்பது அத்தனை சுலபமல்ல. பாக்கெட்டுகளில் அடைத்த பதப்படுத்தப்பட்ட உணவுகளே இன்றைய நாட்களில் செல்லும் கடையெங்கும் நிறைந்திருக்கிறது. என்னவெல்லாம் பார்க்க வேண்டும் அந்த பாக்கட் உணவுகள் மீது?

                   உணவுப்பொருளின் பெயர் இருக்க வேண்டும். அதனை தயாரித்த தேதி அல்லது பாக்கிங் செய்த தேதி, எந்த தேதி வரை பயன்படுத்தலாம் என்ற விபரம், பாட்ச் எண், சைவ/அசைவ வகை குறியீடு, தயாரிப்பாளர்/பேக் செய்தவரின் முழு விலாசம், எடையளவு என இத்தனையும் இருக்க வேண்டும். இவை குறைந்த பட்ச தேவைகளே. இதில் ஒன்று இல்லையென்றாலும், இம்சைதான், அதனை விற்பவருக்கு. 
Courtesy: THE HINDU,14.03.13

                       நான் கடந்த 30.09.2010ல், திருநெல்வேலி மாநகராட்சி உணவு ஆய்வாளராகப் பணியாற்றியபோது, நெல்லை சந்திப்புப் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஷாப்பிங் செண்டரில் ஆய்வு செய்யச்சென்றேன். அங்கிருந்த துவரம்பருப்பு பாக்கட்கள் மீது சந்தேகம்.  பகுப்பாய்விற்கு எடுத்து அனுப்பினால், பாக்கட்மீது குறிப்பிட வேண்டிய எந்த விஷயமும் இல்லையென்று அறிக்கை செய்தனர். 

நன்றி: தினத்தந்தி, நெல்லை.14.03.13

                          நெல்லை, நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டது.  விசாரணை முடிவில், கடை உரிமையாளர் செய்த தவறு நிரூபிக்கப்பட்டது. இதில், அசராமல் வழக்கை நடத்திய அரசு உதவி வழக்கறிஞர் திருமதி.ஜெபஜீவாவின் பங்கு பாராட்டத்தக்கது. 

நன்றி: தினகரன்,நெல்லை. 14.03.13


Follow FOODNELLAI on Twitter