இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 12 April, 2013

கலப்படம்  கண்டுபிடிப்பது முதல் தண்டனை பெற்றுத்தருவது வரை


                         
                             உணவில் கலப்படம் உள்ளபடியே அதிகம்தான். கண்டுபிடிச்சா, அதை நிரூபிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்தான். உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பனும். அதில் கலப்படம் இருக்குன்னு அறிக்கை வரணும். வந்துட்டா, வழக்கு, வாய்தான்னு அலையணும். இதோ ஒரு உணவு மாதிரி எடுத்து அதில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். முதலில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கணும், உயர் அதிகாரிகளிடம், உரிய அனுமதி பெற்று வழக்குத் தொடரணும்.
டிஸ்கி: துறை சார்ந்த அலுவலர்கள், வழக்குத்தொடரும் நடைமுறை அறிந்து கொள்ள ஏதுவாக இங்கு பகிர்ந்துள்ளேன். 



குற்றப்பத்திரிக்கை பக்கம்-1

குற்றப்பத்திரிக்கை பக்கம்-2



குற்றப்பத்திரிக்கை பக்கம்-3

குற்றப்பத்திரிக்கை பக்கம்-4
            இத்தனை விபரமா குற்றப்பத்திரிக்கை தயாரிச்சு, வழக்கு நீதிமன்றத்தில் தொடரணும். ஒவ்வொரு வாய்தாவிலும் வழக்கு நடைபெறும் விபரங்களை கேஸ் கட்டில் குறிச்சு வச்சுக்கணும்.
கேஸ் கட்டு.
                  முதலில் அரசு தரப்பு சாட்சிகளை விசாரிப்பாங்க. உணவு கலப்பட வழக்குகளைப் பொறுத்த வரை, உணவு ஆய்வாளர், வழக்குக்கோப்பைப் பார்க்காம கூண்டில் ஏறி சாட்சி சொல்லணும். அதுக்குப்பிறகு, எதிர்தரப்பு வழக்கறிஞர் உணவு ஆய்வாளரை குறுக்கு விசாரணை செய்வாங்க. அதன்பின்னர், நம்ம தரப்பில உள்ள தனிநபர் சாட்சியை விசாரிப்பாங்க. உணவு மாதிரி எடுக்கும்போது, நம்ம கூடவேதான் அந்த தனிநபர் சாட்சி இருந்திருப்பாரு, ஆனா, வழக்கு விசாரணைக்கு வரும்போது, அப்படியே அந்தர் பல்டி அடிப்பார் பாருங்க. உணவு ஆய்வாளரை யாருன்னே எனக்குத்தெரியாது அப்படிம்பாரு.
                              அதையும் சகிச்சுகிட்டு, அவர் நம்ம கூட இருக்கும்போது, உணவு மாதிரி சம்பந்தமான சில ஆவணங்களில் கையெழுத்துப் போட்டிருப்பாரு, அதை காண்பிச்சு அவரிடம் அரசு வழக்கறிஞர் கேட்டா, இதெல்லாம் நான் போட்ட கையெழுத்துத்தான், ஆனால், நான் ஒண்ணுமே எழுதாத வெற்று பேப்பர்ல, மாநகராட்சிக்குப்போயிருந்தப்ப கையெழுத்து வாங்கிக்கிட்டாங்க என்று ஒரே போடா போட்டு  எதிர்தரப்பிற்கு விசுவாசத்தைக்காட்டுவாரு பாருங்க, அப்ப நமக்குள் வருமே ஒரு உண்ர்ச்சி, அதை வார்த்தைகளால் எழுத முடியாது.
                                  அடுத்து, எதிர்தரப்பில் சாட்சிகளிருந்தா விசாரிப்பாங்க. அதுக்கப்புறமா, நம்ம கட்சிக்கும், எதிர்தரப்பிற்கும் வாதுரை(Argument)   நடக்கும்.  பொதுவா, உணவு கலப்படம் சம்பந்தமான வழக்குகளில், எழுத்து பூர்வமான வாதுரையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விடுவது வழக்கம். அப்படி ஒரு வாதுரைதான் இதோ:             
அரசு தரப்பு வாதுரை:
In the Court of the Judicial Magistrate No.IV, Tirunelveli.
S.T.C.No.10/2012.

Food Inspector,                                 /     Complainant.
Tirunelveli Corporation.                      /


Mohamad kani                                   /     Accused. 


Written argument notes on behalf of the Complainant under Sec. 314 Cr.P.C.

          The facts of the Prosecution case is that the Complainant Food Inspector has taken “Toor dall”, as food sample from the shop of the accused, Thiru.Mohamad Kani, who was selling the Toor dall in packets in Vasantham Shopping Centre at 102,S.N. High Road, Tirunelveli Junction following the Prevention of Food Adulteration Act & Rules and sent it for analysis. On the basis of the Public Analyst’s report, the accused was charged under Sec.7(ii), 16(1) (a) (i)(ii) r/w 2(ix) (k)  of  the Prevention of Food Adulteration Act,1954 and under the Rules 32(b)(1)(d),(e),(f),(i),42(zzz)17 and 50(1) of the Prevention of Food Adulteration Rules, 1955 for selling the misbranded Toor dall and also under Sec. 7(v) r/w 16(1) (a) (ii) and under the Rule 50(1) of the Prevention of Food Adulteration Rules, 1955 for conducting the trade without licence.  On the complainant side, the following witnesses were cited.
PW-1: Thiru.A.R.Sankaralingam,FoodInspector.

PW-2: Thiru.Sankaranarayanan, Independent witness.

          Totally 15  exhibits were marked. 
                        PW-1, in his evidence has clearly deposed regarding his visit to the place of sampling and lifting the sample from the accused according to the procedures to be complied with and sending of the same for analysis complying the procedures, filing of chargesheet before this Honourable court.
          Now the points for consideration in this case are the following:
                    The defence counsel has raised untenable contentions regarding the lifting of sample by putting forward an imaginary story. The complainant is strongly objecting the same since the contention of the defence counsel is false & vexatious. The PW-1 has complied all the formalities without any flaw in whatsoever manner.
                   The next point put forward by the defence counsel at the time of trial was that the PW-2, the independent witness has turned hostile and there is no corroboration to substantiate the evidence of the PW-1. In this aspect, I humbly invite your Honour’s kind attention to the Judgement of the Honourable Supreme court of India (A.I.R.-1992. S.C. 1121) in which the Honourable Supreme Court has viewed that the corroboration of Independent witness is not necessary.
The next point put forward by the defence counsel at the time of trial was that the accused has not been served with notice under sec.13(2) of the Prevention of Food Adulteration Act,1954. Sec.13(2) it is mandatory to give notice only to the samples reported as Adulterated and not to the samples reported as Misbranded. In this aspect, I humbly invite your Honour’s kind attention to the Judgement of the Honourable High court of Gujarat (Crl.L.J.1117) in which the Honourable High Court has viewed that it is not necessary to give notice for Misbranded samples.          
                     The evidence of the PW-1 from visiting the shop of the accused, lifting the sample, sending the same for analysis to the Public Analyst, and subsequently filing the charge-sheet by PW-1 clearly proves the complainant’s case.
           The Complainant had observed all the mandatory provisions of the PFA Act & Rules and has proved the case beyond all doubts and prays that this Honourable court be pleased to deal with the accused in accordance with law and thus render justice.                                                                         

                                                                                          Assistant Public Prosecutor.

                இத்தனையும் முடிஞ்ச பின்னாடி, தீர்ப்பு வரும். அன்றைய தினம், எதிர்தரப்பிற்கு பி.பி. எகிறுவது போலவே நமக்கும் எகிறும், எப்படி தீர்ப்பு வருமோ என்று! குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சிறை தண்டனை வழங்கப்பட்டது. 





                            
Follow FOODNELLAI on Twitter