இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 22 April, 2013

கோடைகால தந்திரம் வெல்லும் தரமான தண்ணீர் எனும் தாரக மந்திரம்.


           கோடைக்காலம் தொடங்கியாச்சு, கூடவே குளிர்பான விற்பனையும் கூடிப்போச்சு. ”தாகத்திற்கு தண்ணீர் கொடு”-இது பெரியோர் வாக்கு. இப்ப அதே விஷயத்தை அவங்க சொல்லணும்னா,”தாகத்திற்கு தரமான தண்ணீர் கொடு”ன்னுதான் சொல்லணும். 

அத்தனை விஷயமிருக்கு இந்த பாக்கட்/ பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தண்ணீரில்!




நன்றி: தினமலர்                          


                               சென்னை, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் திரு.குமார் ஜெயந்த் I.A.S., அவர்கள் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும், தண்ணீரின் தரமும், குளிர்பானங்களின் தரமும் திடீர் ஆய்வுகள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.


                நெல்லையிலும், மாவட்ட நியமன அலுவலரின் மேற்பார்வையில், கடந்த வாரம் முதல், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய ஆறு குழுவினர், மாவட்டம் முழுவதுமுள்ள பாக்கட்/பாட்டில் தண்ணீர் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரிடம் பாக்கட்/பாட்டில் தண்ணீர், குளிர்பானங்கள் தரம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இது, நெல்லையில்  நடைபெற்ற சோதனை குறித்த செய்திகள்:
நன்றி: தினத்தந்தி
            நெல்லையில் நடைபெற்ற சோதனையில், அடுத்த மாதம் தயாரிப்புத் தேதி அச்சிட்ட உணவு பண்டங்கள் அடங்கிய பாக்கட்டுகள் பல கண்டுபிடித்து அழிக்கப்பட்டது ரொம்ம ஹைலைட். # என்னமா யோசிக்கிறாங்கப்பா, கூட கொஞ்ச நாள் வச்சு வித்துக்கலாம்ல!
நன்றி: தினமணி

எப்படி தற்காத்துக்கொள்வது?:

  1. இது அவசர யுகம். நன்கு விளைந்த மாங்காய்களைப் பறித்து, அவற்றைப் பழுக்க வைக்க பல வியாபாரிகளுக்கு பொறுமை இருப்பதில்லை.அதனால், விளைந்த, விளையாத மாங்காய்களைப் பறித்து, கந்தகக்கல் (இது கேஸ் வெல்டிங் செய்ய பயன்படும் ரசாயனம்) மூலம் ஒரே இரவில் பழுத்தது போன்ற தோற்றத்தை உருவாக்கி, சந்தைப்படுத்துகின்றனர். அத்தகைய மாங்கனிகள் மீது, சாம்பல் பூத்தது போன்றிருக்கும். சந்தேகம் வந்துட்டா, வாங்கி வந்த பழங்களை, குளிர்சாதனப்பெட்டியிலோ, தண்ணீர் நிரம்பிய பாத்திரத்திலோ, 24 மணி நேரம் வைத்திருந்து உண்ணலாம். அதிலிருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயு வெளியேறிடும். 
  2. செயற்கையான பானங்கள் அருந்துவதை தவிர்த்துவிட்டு, இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய் போன்ற இயற்கை உணவுகள் மூலம் தாகம் தணிக்கலாம்.
        3. வெளியே வெயிலில் சென்று வந்தவுடனோ, அலையும்போதோ, செயற்கையாக குளிர வைக்கப்பட்ட நீரை அருந்துவதைவிட, சிறிது சூடான பானம் அருந்திப்பாருங்கள். தாகம் உடனே தணியும்.


THANKS:THE HINDU                                 
          இத்தகைய சோதனைகள் நெல்லையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கோடையில் விறுவிறுப்பாய் விற்பனயாகும் தண்ணீர் பாக்கட்கள் மட்டுமல்லாது, கந்தகக்கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களும் தப்பவில்லை. பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகள் பாருங்கள்:

தஞ்சாவூர்


சாத்தூர்



புவனகிரி

ராமநாதபுரம்

ஓசூர்

சேலம்


விளாத்திகுளம்
திசையன்விளை

சங்கரன்கோயில்

     இத்தகைய திடீர் ஆய்வுகள் தவறுகளைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமல்ல, பொது மக்கள் மத்தியில் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நன்கு பயன்படுகின்றன.
          அடுத்தமுறை ஐஸ் போட்டு, சர்பத் குடிக்கும்போது, எப்படி ஐஸ் கையாளப்படுதுன்னு இந்தப்படத்தையும் பார்த்திட்டு குடிங்க: 
நன்றி: THE HINDU
Follow FOODNELLAI on Twitter