இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 29 April, 2013

இது இரண்டாம் கட்ட ஆய்வு- இன்னும் தொடரும்

நன்றி: தமிழ்முரசு.
                                      
                       சென்னை, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் திரு.குமார் ஜெயந்த் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவுப்படி, தமிழகமெங்கும் தரமான தண்ணீர் கிடைத்திட தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.  


THANKS: THE HINDU
             நெல்லை மாநகரில் கடந்த வாரம், இரண்டாம் கட்ட ஆய்வுகள், புதிய பேருந்து நிலையத்தில் திடீரென நடத்தப்பட்டன. மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் திருமதி.தேவிகா தலைமையில், நெல்லை மாநரப் பகுதிக்கு நியமிக்கப்பட்ட குழுவினர் நடத்திய இந்த திடீர் ஆய்வில், ஆவின் பூத்தும் தப்பவில்லை.

நன்றி: தினகரன்

     பல கடைகளில் பாக்கட்களில் அடைக்கப்பட்ட பலவிதமான உணவுப்பொருள்கள் மீது எவ்விதமான விபரமும் இல்லை. என்று தயாரிக்கப்பட்டது, எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது, தயாரிப்பாளர் பெயர் விபரம், என்னென்ன மூலப்பொருள்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது போன்ற விபரங்கள் எதுவுமில்லை.

THANKS: THE NEW INDIAN EXPRESS

        இது உணவுப்பொருள் ஆய்வுதானென்றாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றத்தான் வந்துவிட்டார்களென்று எண்ணி, நடைமேடைகளை ஆக்கிரமித்திருந்த பல கடைகள் தானாய் உள்ளே சென்றிருந்தன. பயணிகள் பலனடைந்தனர். 


நன்றி: தினமணி

        சட்டவிதிமுறைகளைப்பின்பற்றாத பாக்கட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தந்தக் கடைமுன்னரே, கிருமிநாசினி தெளித்து அழிக்கப்பட்டன. 

நன்றி: தினமலர் & தினத்தந்தி

     இத்தகைய ஆய்வுகள், மாநகரப்பகுதி முழுவதும் தொடர்ந்து நடைபெறும்.                    
நன்றி: தமிழ்முரசு& மாலைமுரசு.                                      
                                                     
Follow FOODNELLAI on Twitter

8 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அதிரடி தொடரட்டும் தலைவரே...

திண்டுக்கல் தனபாலன் said...

சேவைகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

கருத்துப் பெட்டி இன்று தான் திறந்துள்ளது... அதற்கும் நன்றிகள் பல...

உணவு உலகம் said...

நன்றி: கவிதை வீதி கவிஞர் அய்யா.

உணவு உலகம் said...

நன்றி: திண்டுக்கல் தனபாலன் சார். தேடிக்கண்டு பிடித்து கொண்டு வருவதற்குள் சற்றே சிரமப்பட்டுவிட்டேன். :)

Unknown said...

அருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com) இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது? வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...மேலும் விவரங்களுக்கு தமிழன் பொது மன்றத்தின் அறிவிப்பு பலகையை பாருங்கள்.

- தமிழன் பொது மன்றம்.

அ. வேல்முருகன் said...

கோக்கோ கோலாவை ஒன்றும் செய்ய முடியாத அதிகாரிகள், கோவணம் கட்டியவன் போண்டா கடையை இடிக்கிறார்கள்.

உணவு உலகம் said...

உணவு பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஆய்வு செய்திகளை பல ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.அதில் பன்னாட்டு நிறுவனங்களும் தப்பவில்லை. இருந்தும் சுய விளம்பரம் தேட கொக்கோகோலா எனப் பிதற்றாதீர்கள். முடிந்தால் ஊக்கம் அளியுங்கள், இல்லையேல் சற்றே தள்ளியிருந்து நடப்பதை நன்றாகக் கவனித்துப்பார்த்துவிட்டு குறைகளை சுட்டிக்காட்டுஙக்ள்.நன்றி.

உணவு உலகம் said...

விரைவில் இணைக்கின்றேன் @ Tamilan Pothu Mandram