இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 8 May, 2013

இது இந்த நிமிஷத்தின் தேவை.

                
                     இன்று, தமிழக சட்டப்பேரவையில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், குட்கா, பான்மசாலா பொருட்கள் தமிழகத்தில் தயாரிக்க,விநியோகிக்க, விற்பனை செய்ய தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். மனமார்ந்த நன்றிகள்.

                   ஒவ்வொரு நாளும், இந்த மெல்லும் புகையிலை பொருட்களை உண்டு, வாய் புற்று நோய் கண்டு, அல்லலுறுபவர் ஆயிரம்,ஆயிரம். நம் நாட்டில் மட்டும், 2010ம் ஆண்டில், 5,56,400 பேர் புற்றுநோயினால் இறந்துள்ளனர். 2010ம் ஆண்டில் நிகழ்வுற்ற மொத்த இறப்புகளில் 8 சதவிகிதம் இறப்புக்கள் புற்றுநோயினால் நிகழ்ந்துள்ளது.

                        நுரையீரல் புற்றுநோயை விட, வாய்புற்று நோயின் தாக்கமும், அதனால் நிகழும் இறப்பும்  இரு மடங்கு அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களையும், கிராமப்புறங்களையும் ஒப்பிட்டுப்பார்க்கையில், கிராமப்புறங்களில்தான் அதிகம் இறப்புக்கள் நிகழ்ந்துள்ளது.
        தேவையா இத்தகைய இன்னல்கள்? சிந்திப்பீர் சில நொடி. விட்டொழியுங்கள் நண்பர்களே இத்தகைய கொ(மெ)ல்லும் புகையிலைப் பழக்கங்களை. 

பல்வேறு பத்திரிக்கை குறிப்புகள்:

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா பொருட்களுக்குத் தடை – DINAMANI PRESS NEWS
சென்னை
First Published : 08 May 2013 12:39 PM IST
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை தயாரிக்கவும் விற்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இதனை அறிவித்தார்.
அதில், புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்று நோய்களை தடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் 1954-ன் கீழ், மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை  19.11.2001  முதல் ஐந்து ஆண்டுகளுக்கு  எனது அரசு தடை செய்து, அறிவிக்கை வெளியிட்டது. ஆனால் தமிழ்நாடு மற்றும் இதர சில மாநிலங்களின் இத்தகைய அறிவிக்கைகள்  குறித்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தில், இதனை தடை செய்யும் அதிகாரம் மத்திய  அரசுக்கு மட்டுமே  உள்ளதாக  கூறி,  2.8.2004-அன்று  அறிவிக்கையை ரத்து  செய்தது.
தற்பொழுது, உணவு கலப்படத் தடைச் சட்டத்திற்கு பதிலாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் என்ற புதிய சட்டத்தை 2006-ல் மத்திய அரசு இயற்றி உள்ளது. இந்த சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் 5.8.2011  முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு  வந்தன.
தமிழக அரசும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த இதற்கென `தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம்என்ற தனித் துறையை ஏற்படுத்தியுள்ளது. 
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் விதிமுறைகளின்கீழ் எந்த ஒரு உணவிலும் சுகாதாரத்தைப் பாதிக்கும் பொருள் இருக்கக் கூடாது என்றும் புகையிலை, அதாவது நிக்கோட்டின் போன்றவற்றை உணவுப் பொருளில் சேர்க்கக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள ஒரு வழக்கு விசாரணையின் போது  குட்கா மற்றும் பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதை பற்றி மாநில அரசுகளால்  என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. 
புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதிக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய மருத்துவ முறையை ஊக்குவிக்கும் வண்ணமும், அரசு மருத்துவமனைகளில் மேம்பட்ட சேவைகள் அளிக்கும் வண்ணமும், என்னால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஒர் ஆரோக்யமான சமுதாயம் உருவாக வழிவகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

குட்கா, பான்பராக்குக்கு தமிழக அரசு தடை – DINAKARAN PRESS NEWS

சென்னை: கடைகளில் விற்கப்படும் குட்கா, பான்பராக்குக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி மெல்லும் புகையிலை பொருள்களுக்கும் தடை விதிக்க இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழகத்தில் பான்மசாலா, குட்காவுக்கு தடை – DINAMALAR  PRESS NEWS

சென்னை: தமிழகத்தில், பான் மசாலா, குட்கா, தயாரிக்க, விற்க, சேகரிக்க தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் அவர், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2.5 கோடி தரப்படும்.ஆண்டுதோறும் இனிமேல் 15 சதவீதம் நிதி உயர்த்தப்படும். அரசு மருத்துவ கல்லூரி இல்லாத இடங்களில் 15 இடத்தில் மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு இந்தாண்டு 10 ஆயிரம் பசுகை வீடுகள் கட்டித்தரப்படும் என கூறினார்.




Follow FOODNELLAI on Twitter

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் தமிழ்நாடு முழுவதும் புகையிலைப் பொருட்கள் ஒழியட்டும்... நல்லதொரு செய்திக்கு நன்றி...

”தளிர் சுரேஷ்” said...

நல்ல செய்தி! அப்படியே டாஸ்மார்க்கையும் இழுத்து மூடிட்டா நல்லா இருக்கும்!

நிலாமகள் said...

அத்தியாவசியமான ஒன்றே. நல்லதை பாராட்டி மகிழ்வோம்.