இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday, 29 June, 2013

மௌனம் பேசியதோ!


”குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.”
              என்ற வள்ளுவன் வாக்கினிற்கேற்பமழலைப் பேசக்கேட்டு 

மகிழ்ந்திடாதோ உள்ளம். பிறவிக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு: 

        பிறவியிலேயே காது கேட்காமலும், வாய் பேசமுடியாமலும் உள்ள 6 

வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, திருநெல்வேலி சந்திப்பு, ம.தி.தா. 


இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து, 30.06.13 காலை 10.00 

மணியளவில் இலவச காக்ளியர் இம்பிளாண்ட் சிகிச்சை முகாம் 


நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி, மாதா 

மருத்துவமனை மருத்துவ அலுவலர் திரு.மு.பரமசிவன் அவர்களும், 


அன்பாலயம் முதியோர் இல்லம் மற்றும் மெட்ராஸ் காது ,மூக்கு, 

தொண்டை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது.


தொடர்பிற்கு: Dr.திரு.M.பரமசிவன்: 9443133428


திரு.S.N.சரவணன்:9976649066
இது சம்பந்தமாக, குறும்படம் ஒன்றும் தயாரித்துள்ளனர்:  ”மவுனமொழி.”

ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி அதைப் பாருங்களேன்.
                        
Follow FOODNELLAI on Twitter

6 comments:

Subramaniam Yogarasa said...

வணக்கம்,ஆபீசர்!நலமா?///நன்றி பகிர்வுக்கு,நாலு பேர் நன்மையடைய வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம் வாழ்க!தொடரட்டும் இணைந்த பணி,வாழ்த்துக்கள்!

s suresh said...

அருமையான பணி! வாழ்த்துக்கள்!

FOOD NELLAI said...

நன்றி: Subramaniam Yogarasa ஐயா.

FOOD NELLAI said...

நன்றி: S Suresh சார். உங்களிருவர் வாழ்த்துக்களை உரியவர்களிடம் சேர்க்கின்றேன்.

சே. குமார் said...

நல்ல முயற்சி ஆபீஸர் சார்.

வாழ்த்துக்கள்...

FOOD NELLAI said...

மிக்க நன்றி @சே.குமார்.