இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 30 June, 2013

தண்ணீர் தண்ணீர் கலெக்டர்.

                         

                             மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வருமாயின், அது நீருக்காக வரும் போராயிருக்கும். அத்தகையதோர் போர், உலகம் ஒட்டுமொத்தமாய் அழிந்திட வித்திடும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இது குறித்து உணவு உலகம் வலைத்தளத்தில் வந்த நீருக்காக போர் படிப்பது முன்னுரையாய் அமையும்.

                         இதை எண்ணத்தில் கருக்கொண்டு, உருக்கொணரும் ஓர் முயற்சியே இந்தியாவில் முதல்முறையாக சோதனை முயற்சியாய் மேற்கொள்ளப்பட்டிருப்பதாய் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சாதனை.             
நன்றி: தமிழக அரசியல் வார இதழ்.
                           சிலர் சென்ற இடமெல்லாம் சிறக்கும். நெல்லையில் கலெக்டராக இருந்தபோதே, இவ்ரது புரட்சித்திட்டங்கள் பல இனிக்கும்.  தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும், நெல்லை மாநகரப்பகுதியிலேயே, வாரம் ஒருமுறைதான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நடைமுறை இருந்தது அப்போது, நெல்லை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரை கிணறுகள் அமைந்த மணப்படை வீடு ஆற்றுப் படுகையின் பக்கம் இவர் பார்வை பட்டது.
                                       இரு நாட்கள் அவர் இருந்ததெல்லாம் அந்த ஆற்றுப்படுகையில்தான். ஆற்றுக்குள் இருந்த உரைகிணற்றின் மீதேறி, அங்கு பணியிலிருந்த தொழிலாளிகளிடம் உரையாடி உற்சாகப்படுத்தியன் விளைவு, தியாகராஜநகர் பகுதிக்கு தினசரி குடிநீர் விநியோகம் கிடைத்தது. 
                                  அடுத்து அவர் சென்ற மாவட்டம்தான் திருவாரூர். சென்ற இடத்திலெல்லாம் சிறந்த முத்திரை பதிப்பது அவர் வாடிக்கை.  அப்படி அவர் பதித்த முத்திரைதான் இந்த நீர்மூழ்கி தடுப்பணை. அந்த மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் விழுந்து கிடந்ததை அறிந்த அவர் முதலில் குளஙகளில் தேங்கியுள்ள மழைநீரை, ஆழ்துளை  மூலம் பூமிக்குள் செலுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர முயற்சிகள் மேற்கொண்டார். 
                                  தற்போது, நீடாமங்கலம் அருகே, வெண்ணாற்றின் குறுக்கே,125 மீட்டர் நீளம்,10மீட்டர் அகலத்தில் பள்ளம் தோண்டி, அதில் 8 மீட்டர் ஆழத்தில்,38,000 மணல் மூடைகளை தண்ணீர் புகாத, மக்காத தார்பாயில் அடுக்கி தடுப்பணை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு, ஆற்று நீர் வீணாகி கடலில் கலப்பதை தடுத்து, பூமிக்குள் நீரைச்செலுத்தி தேக்கிவைக்க உதவிடும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
                                    கோடிகள் செலவிட்டு, ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு மாற்றாக, லட்சங்கங்களில் லட்சியத்தை நிறைவேற்றியுள்ளார். என்ன இவர் தண்ணீர்,தண்ணீர் கலெக்டர்தானே! நாளை உலகம் நன்றியுடன் உங்களைத்தொழும்.
நன்றிகளுடன்: காந்திமதி சங்கரலிங்கம்.

Follow FOODNELLAI on Twitter

14 comments:

MANO நாஞ்சில் மனோ said...

நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர் எங்கள் மனங்களில்ன்னு முல்லைப் பெரியார் நாயகனை நாங்கள் சொல்வதுண்டு, இனி கலக்டரையும் அந்த லிஸ்டில் சேர்த்து விட்டோம் வாழ்க அவரின் புரட்சி...!

MANO நாஞ்சில் மனோ said...

நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர் எங்கள் மனங்களில்ன்னு முல்லைப் பெரியார் நாயகனை நாங்கள் சொல்வதுண்டு, இனி கலக்டரையும் அந்த லிஸ்டில் சேர்த்து விட்டோம் வாழ்க அவரின் புரட்சி...!

MANO நாஞ்சில் மனோ said...

ஆபீசர் எட்டடி பாய்ந்தால் அண்ணி பதினாறடி பாயுறாங்க....!

புரட்சி பதிவு....வாழ்த்துக்கள் அண்ணி...!

'பரிவை' சே.குமார் said...

ஒரு நல்ல மனிதரின் நற்செயல் பற்றிய அழகான பகிர்வு...

வாழ்த்துக்கள் அக்கா....

UNAVUMATHI said...

நன்றாய் சொன்னீர்கள்-முல்லைப்பெரியார் நாயகனோடு இந்த(தண்ணீர்)தொல்லை களையும் நாயகரையும் இணைத்து. நன்றி நாஞ்சில் மனோ சகோ.

UNAVUMATHI said...

வாழ்த்துக்கள் சென்று சேர வேண்டிய இடம்: திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம். நன்றி: சே.குமார் சகோ.

Unknown said...

வாழ்த்துக்கள் தொடரட்டும் அவரது நற்பணிகள் அப்படியே உங்களுக்கும்

UNAVUMATHI said...

நன்றி. வாழ்த்தை திருவாரூர் பக்கம் அனுப்புங்க.

அம்பாளடியாள் said...

கோடிகள் செலவிட்டு, ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு மாற்றாக, லட்சங்கங்களில் லட்சியத்தை நிறைவேற்றியுள்ளார்.
இவரது லட்சியம் பல்லாயிரம் மக்களுக்கு உதவும் போது
அந்த மனங்களில் மங்காத புகழோடும் நிலைத்து நிற்பார் .வாழ்த்துக்கள் ஒரு சிறந்த தகவலைப் பகிர்ந்து கொண்ட
உங்களுக்கும் இந்த ஆக்கத்தின் கதாபாத்திரமாக அமைந்த அந்த நல் இதயத்திற்கும் .

cheena (சீனா) said...

அன்பின் சங்கரலிங்கம் - தமிழ் மாட்டில் பல மாவட்ட ஆட்சியர்கள் அமைதியாக நற்செயல்கள் புரிந்து வருகின்றனர் - அனைஅவ்ருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

ஹல்ல்லோ ஆஃப்பீசர் - வீட்ல பதிவு எழுதறாங்களா பலே பலே ! விசாரிச்சேன்னு சொல்லுங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

UNAVUMATHI said...

நமக்குத் தெரிந்ததை நாலு பேரிடம் சொல்லலாமே என்ற எண்ணத்தில்தான் ஐயா.

UNAVUMATHI said...

நன்றி, தங்கள் கருத்துக்களுக்கு.

UNAVUMATHI said...

@அம்பாளடியாள்: ஆக்கமும், ஊக்கமும் தந்தது உங்கள் கருத்துக்கள் சகோதரி. நன்றி.