டிஸ்கி:பதிவுலகம் தன்னை மறுபடியும் மீண்டும் ஒரு எழுச்சிக்கு தயார்படுத்த எழும்புவதில் எனக்கு எல்லையில்லா சந்தோசம், காணாமல் போன பதிவர்கள் புத்துணர்ச்சியோடு திரும்பி வருவது மனதுக்கு சந்தோசம், இதில் டெரர் குரூப் தம்பிகள் உற்சாகத்தோடு மீண்டும் எழுத வேண்டும், விக்கி உலகம் விக்கி'யும் பதிவுகள் அதிகம் எழுதவேண்டும் என்பது என் ஆவல்...! -என நம்ம நாஞ்சில் மனோ ஏடாகூடமா அறிமுகம் கொடுத்து, அதுல என்னையும் கோர்த்துவிட்டிருக்காக.
பதிவுலகம் மீண்டும் தழைக்க, என் பங்கையும் ஆற்றாவிட்டால், எனக்கிந்த பிறவிப்பயன் கிடைக்காமல் போய்விடுமென தனியாக ஃபோனிலும் வந்து மிரட்டினார். எனவே, வலையுலக நட்புக்கள் இதனையும் சகித்துகொள்ளவேண்டுமாய் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். எப்படியும் ‘டிஸ்கி’ போட்டு ஆரம்பிச்சுட்டோம்ல, நாமளும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவர்தான்!
அப்புறம் ஒரு வேண்டுகோள்: இப்படியே ஒவ்வொரு ’முதல்’ லையும் எழுத வச்சிராதீங்க. நன்றி நண்பர் விஜயன்.
அப்ப தென்காசியில் வேலை பார்த்துகொண்டிருந்த நேரம். வருடம் 1996 முதல் 1999 வரை. அப்பத்தான், உள்ளாட்சிகளுக்கு அரசு கணினி வழங்கிக்கொண்டிருந்த நேரம்.
ஒரு மெகா சைஸ் மானிடர், அதுக்கு மேட்சா(!) ஒரு CPU என மேஜையில் முக்கால்வாசி இடத்தை ஆக்கிரமிச்சிருக்கும். என்னுடன் பணி புரிந்த நண்பர் திரு.ராஜாமணி கணினி பற்றி கொஞ்சம் அறிந்திருந்ததால், ஆஃபிஸ் டைமெல்லாம் முடிந்த பின், இரவு நேரத்தில் கணினியின் அறிச்சுவடியை எனக்குப்போதித்தார். முதலில், Excel, Word ஃபைல்களை கையாளக்கற்றுக்கொண்டு, எனது பணிசார்ந்த விஷயங்களை கணினியில் பதிவு செய்துவந்தேன். இன்றுவரை கணினி சம்பந்தமாக எந்த ஒரு தனி பயிற்சியும் படித்ததில்லை.
துறை சார்ந்த சில தகவல்களை எறும்பு ராஜகோபால் என்னிடமிருந்து பெற்று, அவர் வலைப்பூவில் வெளியிட்டார். நல்ல வரவேற்பு இருந்தது. நாமும் ஏன் இப்படி ஒரு வலைப்பூ ஆரம்பிக்கக்கூடாதென என்னுள் எழுந்த ஒரு உத்வேகமே இன்று உங்களில் பலரைக் கஷ்டப்படுத்திக்கொண்டிருக்கும் என் வலையுலகப் பிரவேசத்திற்கு நான் எடுத்து வைத்த முதல் அடி. அப்போது, கணினி பற்றி சிறிது அனுபவ அறிவும் இருந்ததால், 1999ல் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், எனக்கு அளிக்கப்பட்ட பாராட்டுச்சான்றிதழ் குறித்து, படத்துடன் இருவரிகள்: “இந்திய நாட்டின் இனிமையான சுதந்திர தினத்தில் எனக்கும் ஒரு பாராட்டு கிடைத்தது. பகிர்ந்து கொள்கிறேன் உங்களிடம்” இப்படி எழுதினேன். இன்றுவரை, அந்த கன்னிப்பதிவை பார்வையிட்டவர்கள் 38பேர் மட்டுமே.
அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக கணினியில் வலைப்பூ சம்பந்தமான அனுபவ அறிவு பெற்றும், கொஞ்சம் வெட்டிப்பேச்சு பேசியும், ஸ்டார்ட் மியூசிக் கேட்டு வாய்பிளந்தும், அகட விகடங்களில் நாட்டுப்பற்று பற்றி நானறிந்தும், நம்ம நாஞ்சில் மனோவிடம் நட்பு கற்றும், நெல்லையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பில் நட்புக்களிடம் அறிமுகமாகி யும் நடைபழகிவந்தேன். இப்ப சின்ன பிரேக். இனி இந்த பதிவுலகம், புத்துயிர் பெறட்டும்.
வாங்க இம்சை அரசன்.

தொடருமா இந்த பதிவு!

20 comments:
அவ்வளவுதானா? விரிவாக எதிர்பார்க்கிறோம்...
சுவாரஸ்யமான பாராட்டுச்சான்றிதழ்...!
பயணம் தொடரட்டும்... தொடர வேண்டும்...
ஆபீசர்... சுருக்கமா சொல்லிடிங்க....
பலரையும் நட்புகளாக்கியது பதிவுலகம்... எனக்கு நீங்களும்!!!!
ஐயா...வணக்கம்...ஆபீசர்....நன்றி...வணக்கம்...!!!!
:-))))))))))))
தென்காசியில தான் உங்க முதல் கணினி அனுபவமா சூப்பர்....
மிக்க நன்றி ஆபீசர்....!
முதல்லையே டிஸ்கியா...அவ்வ்வ்வ்....
நம்ம நாஞ்சில் மனோ ஏடாகூடமா அறிமுகம் கொடுத்து, அதுல என்னையும் கோர்த்துவிட்டிருக்காக//
நீங்க இல்லாத வலையுலகம் ஏடாகூடமா போயிரும் ஆபீசர்....!
ஆக்கப்பூர்வமான ஆக்ஷன் உங்ககிட்டே அல்லவா இருக்கிறது !
மக்களுக்கு நன்மை பயக்கும் உங்கள் பதிவுக்கு முன்பு நாங்க தூசு ஆபீசர்...!
அப்புறம் ஒரு வேண்டுகோள்: இப்படியே ஒவ்வொரு ’முதல்’ லையும் எழுத வச்சிராதீங்க. நன்றி நண்பர் விஜயன்//
இளமையென்னும் பூங்காற்று உங்களையும் நம்மளையும் விடாது கருப்பு ரேஞ்சில கொண்டு போயிரும்னு நினைக்கிறேன் ஹா ஹா ஹா....
நெல்லையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பில் நட்புக்களிடம் அறிமுகமாகி யும் நடைபழகிவந்தேன். இப்ப சின்ன பிரேக். இனி இந்த பதிவுலகம், புத்துயிர் பெறட்டும்.//
நாங்கதான் ஆபீசர் உங்ககிட்டே நடை பழகி வருகிறோம்....!
நெல்லை பதிவர் சந்திப்பு...என் வாழ் நாளில் மறக்க முடியாத அனுபவம்....நன்றி ஆபீசர்....!
பதிவுலகம் மீண்டும் தழைக்க, என் பங்கையும் ஆற்றாவிட்டால், எனக்கிந்த பிறவிப்பயன் கிடைக்காமல் போய்விடு...//
:))
its nothing...
பயணம் தொடரட்டும்...
சுருக்கமாக சொல்லி அசத்திவிட்டீர்கள்! நன்றி!
எல்லாம் சரிதான், நானும் மீண்டும் வந்ததில் எனக்கே புதுசாய் வந்தார் போல ஒரு உணர்வு. பல தடைகள் இருந்தாலும் அவைகளை கடந்து மீண்டும் வரும்போது மனதுக்கு மகிழ்ச்சி தான் மீண்டும் நம் நண்பர்களை சந்திக்கும் மகிழ்ச்சி.
அன்பின் சங்கரலிங்கம் - அருமையான முதல் அனுபவம் பற்றிய பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஆபீசரையே பிடிச்சுக் கொண்டாந்துட்டாங்களே..........வெரி குட்.
நல்ல அனுபவப் பகிர்வு ஆபீசர் சார்!'இம்சை' என்ன சொல்கிறார் பார்க்கலாம்!!!
அன்பின் சங்கரலிங்கம் - பரவா இல்லையே - சுருக்கமா முடிச்சிட்டீங்க - நெரெய எழுதுவீங்கன்னு எதிர் பார்த்தேன். இன்னிக்கு நானும் இந்த தலைப்பில எழுதலாம்னு இருக்கேன் -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பின் தொடர்வதற்காக
Post a Comment