இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 23 September, 2013

பொன்விழா ஆண்டில் என்னுரை.         கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஒருநாள் காலைப்பொழுதில் அலைபேசியில் ஒரு அழைப்பு. எடுத்தேன். எதிர்முனையிலிருந்து, சாந்தமாய் ஓர் குரல். நான் கோவை,ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரியிலிருந்து, ஸ்வாமி கரிஷ்டானந்தா பேசுகிறேன், செப்டம்பர் மாதத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் எம் கல்லூரி பொன்விழா ஆண்டு நிகழ்வில், உணவு பாதுகாப்பு குறித்து மூன்று தினங்கள் உரையாற்ற வரமுடியுமா என்று வினவினார். கேட்ட விதமே,சட்டென்று மறுக்க முடியாது. எனினும், நான் என் அலுவலகப்பணிகளை விடுத்து மூன்று தினங்கள் கோவையிலிருப்பது சற்றே சிரமம் என்றேன். சரி, வார நாளில் ஒருநாளும், விடுமுறை நாளில் ஒருநாளும் இங்கிருப்பதுபோல் வாருங்கள் என்றார்கள். 
                 சிறப்புரையாற்றும் நாளன்று காலை கோவை சென்றடைந்தேன். ரயில் நிலையத்தில் இறங்கும்போதே,பேராசிரியர் ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு, வந்துட்டீங்களாண்ணா, நான் உங்களை வரவேற்க நுழைவாயிலருகே காத்திருக்கிறேன் என்றார். எப்படி உங்களை அடையாளம் காண்பது என்றேன். வாங்க, வெள்ளை ஆடையில் வாசலில் நிற்கிறேன் என்றார். முகம் மலர வரவேற்று அழைத்துச் சென்று, கல்லூரி வளாகத்திலுள்ள சாரதா இல்லத்தில் விட்டுச்சென்றார். என்ன ஒரு அருமையான சுற்றுச்சூழல். மாணவர்கள் கல்வி கற்க ஏற்ற சூழல்.

விளையாட்டு மைதானம்
                    அருமையான காலை சிற்றுண்டி, கல்லூரி ஹாஸ்டலில் வழங்கப்பட்டது. மாணவர்களுடன் மாணவனாய் அமர்ந்து உண்டது, என் கல்லூரி நாட்களை நினைவு படுத்தி என்னை இளமையாக்கியது. 
கல்லூரி சாலை
                   செப்டம்பர்-2013ல், 10& 12 முதல் 15 வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், செப்டம்பர்-13ல், மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளிலிருந்தும் சுமார் 1000 மாணவர்கள் மத்தியில் ”உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள்” குறித்த என்னுரையாற்றினேன். 
                                                   

கலந்து கொண்ட மாணவர்கள்
                 
உரைக்கு முன்னர் அரங்கத்தில் நான், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் , பேராசிரியர் சுந்தரம் மற்றும்  சுவாமி கரிஷ்டானந்தா 

                 கொடுக்கப்பட்ட நேரத்திற்குள், உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தேன். இதுவரை உரையாற்றியவற்றில் சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாமென கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. 


                 தற்போது பரவலாகப்பேசப்பட்டு வரும், உணவு பாதுகாப்பு சட்டத்திற்கும், நீங்கள் எடுத்துக்கூறும் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்று வினவினர். நான் சொல்வது, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயச்சட்டம்,2006 என்றும், தற்போது பரவலாக விவாதிக்கப்படுவது, அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் திட்டமென்று விளக்கினேன். அது FOOD SAFETY AND STANDARDS ACT,2006. இப்போது பேசப்படுவது,   FOOD SECURITY BILL .


              கீழிறங்கி வந்து, சுவாமிஜியிடம் உரை எப்படியிருந்தது என்று கேட்டு, அவர் நன்றாக அமைந்திருந்தது என்றவுடன் தேர்வில் தேறிய ஒரு திருப்தி.  அடுத்த நாள், பேராசிரியர்கள் மத்தியில் உரையாற்ற இருப்பதால்,  இன்றைய தகவல்களுடன், புதுத்தகவல்களும் கொண்டு வாருங்கள் என்று வாழ்த்தியனுப்பினார்.                     பிற்பகல், கோவையிலுள்ள பிரபல மாலில், பிரபல பதிவர் ஒருவரைச் சந்தித்தேன். இரண்டாம் நாளில் இன்னும் பல பிரபல பதிவர்களையும் சந்தித்தேன்.  பதிவர்கள் சந்திப்பு பற்றி தனிப்பதிவில் எழுதுகின்றேன்.  இரண்டாம் நாள் சிறப்புரை மட்டும் இங்கு தொடரும் . . . 
              

Follow FOODNELLAI on Twitter

16 comments:

MANO நாஞ்சில் மனோ said...

தற்போது பரவலாகப்பேசப்பட்டு வரும், உணவு பாதுகாப்பு சட்டத்திற்கும், நீங்கள் எடுத்துக்கூறும் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்று வினவினர். நான் சொல்வது, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணயச்சட்டம்,2006 என்றும், தற்போது பரவலாக விவாதிக்கப்படுவது, அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் திட்டமென்று விளக்கினேன். அது FOOD SAFETY AND STANDARDS ACT,2006. இப்போது பேசப்படுவது, FOOD SECURITY BILL .//

எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது ஆபீசர், உங்ககிட்டே கேக்கனும்னு நினச்சிட்டே இருந்தேன், இப்போ பதிவில் தெளிவாக தெரிந்து கொண்டேன்....! நன்றி ஆபீசர்...

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் ஆபீசர்.....

MANO நாஞ்சில் மனோ said...

சரி இனி பதிவர் சந்திப்பு கும்பமேளா ஆரம்பம்பம்பம்பம்.....

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் சார்...

aavee said...

அரங்கத்தின் உள்கட்டமைப்பு பார்க்க நன்றாக இருக்கிறது.

உணவு உலகம் said...

//நாஞ்சில் மனோ:இப்போ பதிவில் தெளிவாக தெரிந்து கொண்டேன்....! நன்றி ஆபீசர்...//
அப்பப்ப எனக்குத்தெரிந்த விஷயங்களைப்ப்கிர்கிறேன். நன்றி

உணவு உலகம் said...

நன்றி: விக்கியுலகம்.

உணவு உலகம் said...

நன்றி: பின்னூட்டப்புயல் திண்டுக்கல் தனபாலன் சார்.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
சரி இனி பதிவர் சந்திப்பு கும்பமேளா ஆரம்பம்பம்பம்பம்.....//
கும்மிருவோம் மனோ-விரைவில்.

உணவு உலகம் said...

//கோவை ஆவி said...
அரங்கத்தின் உள்கட்டமைப்பு பார்க்க நன்றாக இருக்கிறது.//
வித்யாசமான பார்வை உங்களிடம். நன்றி ஆவி.

கார்த்திக் சரவணன் said...

வாழ்த்துக்கள் சார்...

பொன் மாலை பொழுது said...

மன நிறைவாக ஒரு பொறுப்பை ஏற்று அதனை சிறப்பாக செய்துள்ளீர்கள். பொன் விழாமலரில் உங்களின் இந்த பங்களிப்பும் நிச்சயம் இடம்பெறும். அது சரி, தங்களை எப்படி அவர்கள் அறிவார்கள்? பத்திரிக்கை செய்திகளா அல்லது உங்களின் பதிவுகள் வழியாகவா? எப்படியோ தங்களை அழைத்ததே சிறப்பான ஒன்று. வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

//ஸ்கூல் பையன் said...
வாழ்த்துக்கள் சார்...//

நன்றி: வருகைக்கும் வாழ்த்திற்கும்.

உணவு உலகம் said...

// Manickam sattanathan said...
அது சரி, தங்களை எப்படி அவர்கள் அறிவார்கள்? பத்திரிக்கை செய்திகளா அல்லது உங்களின் பதிவுகள் வழியாகவா? எப்படியோ தங்களை அழைத்ததே சிறப்பான ஒன்று. வாழ்த்துக்கள்.//
நான் ஒவ்வொரு ஆண்டும், அக்கல்லூரியில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் செமினாரில், இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி திட்டத்தில் பி.எட், எம்.எட் பயிலும் மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து உரையாற்ற சென்று வருகிறேன்.
எனினும், முதல் அறிமுகம் என் வலைப்பூவைப் பார்த்துத்தான். நன்றி.

Dino LA said...

சிறப்பான பகிர்வு