இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 30 September, 2013

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி பொன்விழாவில் இரண்டாம்நாள் உரை.

இரண்டாம் நாளில் என்னுரை
               இரண்டாம் நாளில், பற்பல கல்லூரிகளிலிருந்தும் வந்து கலந்துகொண்ட பேராசிரியர்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி எடுத்துரைத்தேன்.  முதல்நாளே, ஸ்வாமிஜி இன்னும் நிறைய புதுத்தகவல்களுடன் வரச்சொல்லி வாழ்த்தி அனுப்பினார்களே!   பிற்பகல் 2 மணியளவில்தானே என்னுரை.  இன்னும் பல அருமையான தகவல்களைச் சேர்க்கலாமென்று எண்ணியிருந்தேன்.
                                 
காலை நேர இறைவணக்கம் பாடுமிடம்.

                    எப்படித் தெரிந்ததோ என் எண்ணங்கள், கோவை நேரம் ஜீவாவிற்கு! வாருங்கள் காந்திபுரம் பக்கம் என்று அவசர அழைப்பு விடுத்தார். சென்று அவரையும் இன்னும் சில நண்பர்களையும் சந்தித்து வந்தேன்( அது தனி பதிவில்).  இன்னும் பல தகவல்களை சேர்த்தெடுத்துக்கொண்டு, மதிய உணவிற்குப்பின் இரண்டாம் நாள் உரையாற்றச் சென்றேன். 
பொறுமையுடன் அமர்ந்திருந்த பேராசிரியர்கள்
                       மேடைக்கு அழைத்துச்சென்று அமரவைத்து அறிமுகம் செய்து வைத்து, உரையாற்ற அழைத்தனர். உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆசிரியப்பெருமக்களுக்கு உதவும் பல குறிப்புகளை எடுத்துரைத்தேன்.  
அரங்க மேடையில் அறிமுகப்படலம்
              உரையின் நிறைவில், ஒரு பத்து நிமிடம் கேள்வி நேரமென ஒதுக்கினேன். முதல் நாள் உரையின் முடிவில், பல மாணவர்கள் உணவு பாதுகாப்பு குறித்து வினவினர். இரண்டாம் நாள் உரை முடித்த பின் ஒதுக்கிய கேள்வி நேரத்தில் கேள்வியே எழவில்லை. ஏனோ, தெரியவில்லை. 
நாற்பது நிமிடம் நான் உரையாற்றினேன்
                ஆசிரியரான நாமே எப்படி கேள்வி கேட்பது என்றா, கேள்வி கேட்டால், இவையெல்லாம் நமக்குத்தெரியாது என்று நினைத்துக்கொள்வார்களே என்றா எனக்கு கடைசிவரை விளங்கவேயில்லை.

பேராசிரியர்கள்
             இரண்டாம் நாள் உரை கேட்க, கோவை, ராமகிருஷ்ணா மிஷன் கல்லூரி  நிர்வாக செயலர் உள்ளிட்ட பல ஆன்றோர்கள் வந்து சிறப்பித்தது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.


உரை கேட்க வந்திருந்த மஹராஜ்கள்

கல்லூரி வாரியாக கலருடையில் வந்த பேராசிய்ர்கள்
                  இறுதியில், நினைவுப்பரிசொன்று வழங்கி, விவேகானந்தரின் புத்தகம் ஒன்றையும் வழங்கினார்கள். இரண்டும் இரு பொக்கிஷங்கள். 
எனக்களித்த நினைவுப் பரிசுகள்

Follow FOODNELLAI on Twitter

9 comments:

MANO நாஞ்சில் மனோ said...

கேள்வி கேட்க அவர்களுக்கு தயக்கமாக இருந்துருக்கலாம், நீங்கள் சொல்ல வந்ததை வைத்தே புரிந்து கொண்டு இருப்பார்கள்....!

MANO நாஞ்சில் மனோ said...

ஆபீசருக்கு கிடைத்த பரிசு இரண்டும், விவேகானந்தர் அமேரிக்கா போயி உரையாற்றிய சந்தோசம் எங்கள் மனதில்.....

வாழ்த்துக்கள் ஆபீசர்....

திண்டுக்கல் தனபாலன் said...

பல பெரியோர்கள் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

ராஜி said...

ஆசிரியர்களே தெரியாததை தெரிந்துகொள்ள தயக்கம் காட்டினால் மாணவர்கள் எப்படி கேள்வி கேக்க முன்வருவார்கள்!?

சீனு said...

வாழ்த்துக்கள் ஆபீசர்...

சீனு said...

ஆன்றோரர்கள் முன்னிலையில் உங்களை சான்றோனாகப் பார்த்தது மகிழ்ச்சி

உணவு உலகம் said...

நன்றி: நட்பின் இலக்கணம் நாஞ்சில்
மனோ

திண்டுக்கல் தனபாலன் சார்

அன்புத்தங்கை ராஜி

அன்புத்தம்பி சீனு

திண்டுக்கல் தனபாலன் said...

ஒளிப்பதிவு : ‘ஆபிசர்’ சங்கரலிங்கம்... ???

visit : http://worldcinemafan.blogspot.in/2013/10/blog-post.html

'பரிவை' சே.குமார் said...

தாங்கள் விளக்கமாக சொல்லியிருப்பீர்கள்... அதனால் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் வந்திருக்காது...
வாழ்த்துக்கள் சார்.