இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 12 November, 2013

ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் டீன் ஏஜ் பெண்களுக்கான கருத்தரங்கு-தினமலர் செய்தி

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் டீன் ஏஜ் பெண்களுக்கான உணவு பழக்க வழக்கங்களுக்கான சிறப்பு கருத்தரங்கு நடந்தது. 

      தற்போது 90 சதவீத டீன் ஏஜ் பெண்களுக்கு ரத்தத்தில் தேவையான அளவிற்கு ஹீமோகுளோபின் இல்லாததாலும், 40 சதவீத டீன் ஏஜ் பெண்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இல்லாததாலும் டீன் ஏஜ் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியும், நியூட்ரியேசன் கிளப்பும் இணைந்து நடத்திய சிறப்பு கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ரஞ்சித் சிங் தலைமை வகித்தார்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை உமா வரவேற்று பேசி டீன் ஏஜ் பெண்களின் உணவு பழக்க வழக்க முறைகள் பற்றி பேசினார். தற்போது பரோட்டா, நாண், அஜினோமோட்டோ, பாஸ்ட்புட் உணவு வகைகளை பயன்படுத்துவதால் டீன் ஏஜ் பெண்களுக்கு உண்டாகும் ரத்தசோகை, மாதவிலக்கு தள்ளி வருதல், சிறுவயதிலேயே பூப்பெய்தல், ஞாபக மறதி, மூட்டுவலி போன்ற நோய்களை தவிர்ப்பது பற்றியும், கோதுமையை வெள்ளை நிறத்திற்கு கொண்டு வருவதற்காக வேதியியல் பொருட்களை பயன்படுத்துவதால் இந்த வேதியியல் பொருட்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் செயல்விளக்கத்துடன் சிறப்புரை ஆற்றினார். 
                         
பேராசிரியை ரெங்கநாயகி, தனலட்சுமி, காந்திமதி, பாக்கியலட்சுமி உட்பட 222 மாணவிகள் கலந்து கொண்டனர். 6 மாணவிகள் சரிவர உணவு பழக்கம் இல்லாததால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பேராசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.கருத்தரங்கில் பழங்கால உணவு பழக்க வழக்க முறைகளை மேற்கொள்வது பற்றியும் தற்காலத்தில் பொரித்த, ஸ்நாக்ஸ் போன்ற உணவு முறைகளால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும் சிறப்பு விவாதம் நடந்தது. டீன் ஏஜ் பெண்கள் தற்கால பாஸ்ட்புட் உணவு பழக்கங்களை கைவிட்டு விட்டு உடலுக்கு நன்மையை தரும் நல்ல உணவு பழக்கங்களை மேற்கொள்வதென உறுதிமொழி எடுத்தனர்.ஏற்பாடுகளை முதல்வர் ரஞ்சித்சிங் மேற்பார்வையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை உஷா மற்றும் ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு கழகத்தினர் செய்திருந்தனர்.

 நன்றி: தினமலர்-23.08.13
Follow FOODNELLAI on Twitter

1 comment:

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா....ஆபீசர் கலக்கிட்டு இருக்காரே....வாழ்த்துக்கள் ஆபீசர்...