இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 6 December, 2013

பாலில் கலப்படம் பாவம் உயிர் போகும்

உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.  ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு நிறுவன பால் பாக்கெட்டுகள், கடைகளில் குளிர்பதன பெட்டியில் வைத்து விற்கப்பட்டாலும், இரண்டு நாள்தான் அதற்கு கெடு. அதற்கு மேல் வைத்து விற்றால் அந்த பால் கெட்டுவிடுகிறது. பாலின் இயல்பும் அதுதான்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பாக்கெட் பால் எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பாலில் ரசாயனங்களை சேர்ப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு ரசாயனம் சேர்க்கப்படும் பால் எளிதில் கெட்டுப்போகாமல் இருப்பதால், பால் பாக்கெட்டுகளை அதிகம் விற்கப்படுகிறது.
யூரியாவுடன் மால்டெக்ஸ் - மால்​டோடெக்ஸ் 
விசாரணையில், இந்த மால்டெக்ஸ் - மால்​டோடெக்ஸ் பவுடரை 1,250 ரூபாய்க்கு வாங்கி 2,000 ரூபாய்க்கு பால் பண்ணைகளுக்கு சப்ளை செய்ததும், ஒரு கிலோ மாவில் 10 லிட்டர் பாலைக் கலந்து 20 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 30 லிட்டர் பால் தயாரிப்பதும்.தெரியவந்தது. 
இந்தப் பவுடர் சோயா பீன்ஸ் மாவில் டெக்ஸ்சோ மோனோ ஹைட்ரேட் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பவுடரில் தண்ணீர், சிறிதளவு யூரியா கலந்தால் பால் போன்ற நிறமும் சுவையும் இருக்கும். 
ஒரு மடங்கு ஒரிஜினல் பாலில், இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து, அது தெரியாமல் இருப்பதற்காகவும், பால் வெண்மையாகவும், கெட்டியாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் வேறு சில ரசாயன பொருட்களை பாலில் கலப்படம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. 
இந்தப் பாலை குடித்தால் என்ன ஆகும்? 
''கலப்பட பாலை தொடர்ந்து குடித்தால் பல பிரச்னைகள் உண்டாகும். குறிப்பாக, டெக்ஸ்சோ மோனோ ஹைட்ரேட் மற்றும் யூரியா கலந்த பாலைத் தொடர்ந்து குடித்தால் அலர்ஜி, வயிற்றுப் போக்கு, தோல் நோய், குறைந்த ரத்த அழுத்தம், கண் பார்வைக் குறைபாடு, சிறுநீரகப் பாதிப்பு போன்றவை ஏற்படும்'' என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில்தான் ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயற்கையான பொருட்கள் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக தொடரப்பட்ட பொதுநலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதா கிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோரடங்கிய அமர்வு, உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்தது. 
உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய பால் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோருக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 6 மாத காலம் மட்டுமே சிறைத்தண்டனை என்று இருப்பது போதுமான தண்டனை அல்ல என்றும், எனவே இத்தண்டனையை இன்னும் கடுமையாக்கும் வகையில், அதாவது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் மேலும் தெரிவித்தனர். 

Follow FOODNELLAI on Twitter

8 comments:

அம்பாளடியாள் said...

பிற உயிர்களோடு விளையாடும் இக் கொடிய செயலுக்கு இந்த
தண்டணைகள் போதாது சகோதரா :( .விழிப்புணர்வு தரும்
இப் பகிர்வு பலரையும் சென்றடைய வாழ்த்துக்கள் .மிக்க
நன்றி பகிர்வுக்கு .

திண்டுக்கல் தனபாலன் said...

பால் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோருக்கு முதலில் "பால் ஊத்த வேண்டும்"...

'பரிவை' சே.குமார் said...

விழிப்புணர்வுப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சார்...

ABUBAKKAR K M said...

நல்ல விழிப்புணர்வான பதிவு , நன்றி & பாராட்டுக்கள்.
நண்பர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கூறியதுபோல கலப்படம் செய்பவர்கள் யாரானாலும் ””பால்”” ஊத்திடவேண்டியதுதான் சரியான தண்டனையாக இருக்கமுடியும் .
கே.எம்.அபுபக்கர்.

Unknown said...

Thanks sir

செங்கோவி said...

குழந்தைகளுக்கு தர்ற பால்ல கலப்படம் பண்றவன் மனுசனாவே இருக்க முடியாது.

MANO நாஞ்சில் மனோ said...

அதாவது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் மேலும் தெரிவித்தனர். //

பச்சிளம் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் இவர்களுக்கு சவுதி தண்டனைதான் சாலசிறந்தது ஆபீசர்.

MANO நாஞ்சில் மனோ said...

பேசாம இனி சொந்தமா மாடு வாங்க வேண்டியதுதானோ ?

மனுஷனை நம்பவேப்டாது போல....!