இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 23 May, 2014

மனித மிருகங்கள்!

 18+ ஆண்களுக்கு மட்டும்

              மகள் வீட்டில் இரு தினங்கள் இருந்து வரும் எண்ணத்தில் புதனன்று சென்னைபுறப்பட திட்டமிட்டு, செவ்வாயன்று காலை தட்கலில் முன்பதிவு செய்ய சென்றேன்.

            முகவர் ஒருவரிடம் என் பயண விபரம் நிரப்பிய படிவம் கொடுத்து, டிக்கட் எடுத்து தர சொன்னேன். வரிசையில், இரவே இடம் பிடித்து நின்றவர், சற்று நேரத்தில், பவ்யமாய் வந்து நண்பர் ஒருவரின் பெயரை சொல்லி, அவரும் நாளை சங்கப் பணிகளுக்காக, சென்னை செல்கிறார், அவர் பெயரையும் உங்கள் படிவத்தில் சேர்த்து எழுதிகொள்ள அனுமதி கொடுங்கள் என்றார். சரி என்றபோது, சனி ஏறிக்கொண்டார் என்று எனக்கு தெரியவில்லை.
சற்று நேரத்தில், என் பயணத்தை முன் பதிவு செய்த டிக்கட்டுடன் வந்தார். பார்த்தால், என்னுடன் இன்னும் மூன்று ஆண்கள் பட்டியலில் இருந்தனர். எல்லோரும் அரை நூற்றாண்டு கண்டவர்கள். என்னாங்க, நண்பர் வாறார்னு சொன்னீங்க, இப்ப மூணுபேர் எக்ஸ்ட்ராவா இருக்கே என்றபோது, அவர்களும் சங்க பணிக்காகத்தான் அந்த நண்பரோடு வாராங்க என்றார். நம்பினேன்!

.   புதன் மாலை, பயணம் தொடங்கியது. ஒருவருக்கொருவர் அறிமுகமானபோதுதான் தெரிந்தது, அவர்கள் மூவருக்குள்ளும் எந்த தொடர்புமில்லை என்பது! நால்வரும் பயணிப்பது என் ஐடியில். டிக்கட்சரிபார்ப்பு முடிந்தது
              அந்த பேயில், ஆறு ஆண்கள், சைடு பெர்த்தில் சகோதரிஒருவர், தன் இரு குழந்தைகளுடன். சுமார் அரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்ட ரயில், விருதுநகர் வருவதற்குள், ஆறுபேர், அவரவர் பெர்த்தில் முடங்கினர். நானும், என் ஐடியில் பயணித்த 55 வயது இளைஞர் ஒருவரு(னு)ம் ! கீழ் பெர்த்தில் அமர்ந்திருந்தோம். பேண்டிலிருந்து, லுங்கிக்கு மாறி வந்த அவர் என்னை தூங்கவில்லையா என அக்கறையோடு(!) விசாரித்தார். மதுரையில் பழம் வாங்கி சாப்பிட்டு விட்டு தூங்கணும் என்று சொல்லிவிட்டு, ஜன்னலோரத்தில் அமர்ந்து சற்றே கண்ணயர்ந்து விட்டேன்.
         சார் , உங்க டிக்கட் கொடுங்க என்று பரிசோதகர் வந்து எழுப்பினார். கொடுத்ததும், அருகிலிருந்தவரைக் காட்டி, இவர் உங்களோடு வந்தவரா? ரெண்டு பேரும் வாங்க என்று அடுத்த கோச்சிற்கு அழைத்து சென்றார். ஆஹா, டிக்கட் மேட்டர் தெரிஞ்சு விசாரிக்க கூப்புடாறாரோ என்று பயந்தவாறு சென்றால், அடுத்த கோச்சில் இருந்த பரிசோதகரும் சேர்ந்து, என்னுடன் வந்தவரை அர்ச்சனை செய்த போதுதான், ஏதோ விபரீதம் என்று புரிந்தது. என் ஐடியில் அவர்பயணித்ததால், என்னையும் ஏற இறங்க பார்த்தனர் . ஆபத்பாந்தவனாய், அடுத்த கோச்சிலிருந்து அங்கு வந்த பரிசோதகர், எனக்கு அறிமுகமான நெல்லைக்காரரிடம், முகவர் செய்த தில்லாலங்கடி குறித்து சொன்னேன்.

              நான் ஒரு தப்பும் செய்யவே இல்லையே என்று சாதித்து வந்த அந்த நபர், சரி, மதுரையில் உங்களை போலீசிடம் ஒப்படைக்கிறேன் என்று சொன்னவுடன், நான் மதுரையில் இறங்கி விடுகிறேன், மன்னித்து கொள்ளுங்கள் என்று, கொண்டு வந்த பையுடன் இறங்கி ஓடியும் விட்டார்.
பின்னர் அங்கு வந்த பரிசோதகர், என்னை தனியாக அழைத்து சென்று, விவரித்தபோதுதான், ஏன் அவரை அடிகொடுக்காமல் விட்டுவிட்டோமென்று மனம் வலித்தது. பாவி, சைடு பெர்த் சகோதரி பார்க்கும் வண்ணம், ஆண் உறுப்பை அசைத்து காட்டிருக்கானென்று!

                அடுத்த முறை முகவர் மூலம் முன்பதிவு செய்யும்போது, எச்சரிக்கையா இருக்கனுங்கோ!
Follow FOODNELLAI on Twitter

6 comments:

குட்டிபிசாசு said...

அறியாத நபர்களுக்கு இரக்கப்பட்டு கூட உதவி செய்வது தவறு என்று நினைக்கத்தோன்றுகிறது.

”தளிர் சுரேஷ்” said...

தலைப்பு மிகப்பொருத்தம்! அவனை உதைக்காமல் விட்டீர்களே!

திண்டுக்கல் தனபாலன் said...

அடப்பாவி...!

Unknown said...

வணக்கம்,ஆபீசர் சார்!நலமா?நீஈஈஈஈண்ட கால இடைவேளைக்குப் பின்,........நலம் தானே?///ஜாக்கிரதையாக பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள் ஆபீசர்."சனி" எந்த ரூபத்தில் வருமென்று தெரியாதே?///பார்த்ததில் மகிழ்ச்சி.முக நூல் மறந்து மாதங்களாயிற்று.பதிவு/பகிர்வு களில் சந்திக்கிறேன்,நன்றி வணக்கம்!

MANO நாஞ்சில் மனோ said...

நான் பேஸ்புக்ல மட்டும்தான் பகிர்ந்து இருக்கீங்கன்னு பார்த்தா, அது பதிவா வெளி வந்துருக்கு ஆன் லேட்டு...

இனி நாங்களும் உஷாராக இருப்போம்ல்லா !

MANO நாஞ்சில் மனோ said...
This comment has been removed by a blog administrator.