குற்றாலம் சீர்பெற சமீபத்தில் உயர் நீதிமன்றம் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. குற்றால அருவிகளில் நீராடுபவர்கள் எண்ணை, சோப்பு, சீயக்காய், ஷாம்பூ போன்ற பொருட்களை உபயோகிக்க கூடாது, பிளாஸ்டிக் கவர், டம்ளர், பொருட்களுக்கு தடை, துணி துவைக்க கூடாது, அருவி அருகே குண்டு குழி இருக்க கூடாது என இன்னும் பல வழிமுறைகள் வகுத்துள்ளது.
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணியர்கள் சுத்தமான, பாதுகாப்பான உணவு பெற்றிட, உணவுபாதுகாப்புத்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின்பேரில், மாவட்ட நியமன அலுவலர் தலைமையில், சுழற்சி முறையில் தினசரி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு அங்குள்ள உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அப்துல்காதர், சங்கரலிங்கம், காசிம்,நாகராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் குற்றாலம் மெயின் அருவி பகுதியிலுள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். பெரும்பாலான கடைகளில், உணவு பண்டங்களை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும், தயாரிப்பு தேதி விபரங்கள் அச்சிட்டும் வைத்திருந்தனர். ஸ்வீட் கார்ன் விற்ற ஒரு கடையில் மட்டும் 2011ல் பாக்கட்டில் அடைக்கப்பட்ட ஸ்வீட் கார்ன்களை அவித்து சுடச்சுட விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
குற்றாலத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் நல்ல சூழலை ஏற்படுத்தியுள்ளது ஆரோக்கியமான விஷயம்.
குற்றாலத்தில் தொடரும் உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள்.
குற்றாலத்தில் தற்போது சீசன் உச்ச கட்டத்தில் இருக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர்களுக்கு சுத்தமான பாதுகாப்பான உணவு கிடைக்கவேண்டுமென்பதற்காக தமிழக அரசின் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், சுழற்சி முறையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அங்கு அனுப்பப்பட்டு, உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

4 comments:
ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு நன்றி ஆபீசர் !
Thanks Mano
வணக்கம்,ஆபீசர்!நலமா?///சுற்றுலாத் தளங்களில்/தலங்களில் சுத்தத்துடன்,பாதுகாப்பு ஏற்பாடுகளும் கன கச்சிதமாக இருப்பது அவசியம்.உங்கள் பங்குக்கு,உணவுப் பாதுகாப்பு.நல்ல விடயம்,ஜமாய்ங்க ஆபீசர்!
இதே போல நடவடிக்கை எடுக்கும் ஆபீசர்
எல்லா ஊர்களில் இருந்தால் நல்லா இருக்கும்.
ஆபீசர் வாழ்க வாழ்க
Post a Comment