இரு தினங்களுக்கு முன் எங்கள் மாவட்ட அலுவலரிடமிருந்து காலை பத்து மணிக்கு மாவட்ட அலுவலகம் வரச்சொல்லி ஒரு திடீர் அழைப்பு. நண்பர்கள் காளிமுத்து, கலியனாண்டி, முத்துக்குமாரசாமி, ரமேஷ் ஆகியோருடன் என்னையும் சேர்த்து ஒரு குழு அமைக்கப்பட்டது.
மாவட்ட நியமன அலுவலர் மரு.திரு.கருணாகரன் அவர்கள் தலைமையில் திடீர் ஆய்விற்குச் சென்ற இடம் ஒரு பள்ளி கேண்டீன்.
பார்த்தவுடன் மனம் பதைபதைத்தது. அத்தனை காலாவதியான உணவுப்பொருட்கள் அங்கே பயன்படுத்தப்ட்டன. பல உணவுப்பொருட்களில் தயாரிப்பு தேதியே இல்லை. பல பாக்கட் பொருட்கள் மிக சமீபத்தில், 2008/2011 ல் தயாரிக்கப்பட்டவை.
உச்சகட்டமாக, குழந்தைகளுக்கு அதிக கேடு விளைவிக்கும் ”மோனோ சோடியம் குளுடாமேட்” அங்கு தயாரிக்கப்படும் உணவில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. நம்ம வீட்டு பிள்ளைகளுக்கு அதை நாம கொடுப்போமா!
சிறு வீடியோ இணைப்பிற்கு இங்கு கிளிக்குங்க:

8 comments:
வணக்கம்,ஆபீசர்!நலமா?///ப(பி)ணம் தின்னிப் பேய்களுக்கு எல்லாமே ஒன்று தான்!சேவை தொடரட்டும்,ஜாக்கிரதையாக!
நன்றி ஐயா.
இது போன்ற பள்ளிகளையும் சீல் வைக்க வேண்டும்!
சட்டரீதியான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கினால் மற்றவர்களுக்கு பாடமாக அமையும்.
பணி சிறக்க குழுவினருக்கு வாழ்த்துக்கள் !!!
படுபாவிகள்..
உங்கள் சேவை தொடரட்டும் ஆபீசர்...
நன்றி நட்புக்களே.
அன்புள்ள அய்யா
வணக்கம். வாழ்த்துகள்,
எனது ‘வலைப்பூ‘ பக்கம் வருகை புரிந்து கருத்திடஅன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
Post a Comment