இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday 2 November, 2014

மதுரையில் மனம் மயக்கிய பதிவர் திருவிழா.


மதுரையில் திருவிழா போவாமா வாருங்கள் என்றே  வாஞ்சையுடன் அழைத்தார் அன்பு தம்பி மகேந்திரன் பன்னீர்செல்வம்.  தீபாவளியைத் தொடர்ந்து வருகிறதே என்றே  எண்ணிக்கொண்டு சென்ற எங்களுக்கு திகைப்புத்தான்  மிஞ்சியது.


26.10.14 நிகழ்ச்சிக்கு, 25.10.14 சனிக்கிழமை  இரவே  சென்றுவிட்டோம். சித்திரைத்திருவிழாவிற்கு பத்துநாட்கள் முன்பே சுற்றத்தார் வீட்டில் வந்து தங்குவது போல,  நட்பூக்கள்  பலரும்  முதல்நாளே மதுரையில் சங்கமித்திருந்தனர்.  முதல் நாளே வருகை தரும் வலை நட்புக்கள் தங்க தனித்தனி அறை ஏற்பாடு செய்திருந்தனர். நக்கீரர்  இந்தமுறை சற்றே சாந்தமாகத்தான் இருந்தார். அருமையான இரவு உணவு கொடுத்தனர். நன்றாய் நாங்கள் ருசித்து உண்டோம். 
                   உண்ட உணவு செரிக்க, திருவிழா நடைபெறும் கீதா நடன கோபால நாயகி மந்திர் பள்ளி வளாகத்தை பார்வையிட சென்றோம். விரிவான ஏற்பாடுகள் அங்கும் சிறப்பாய் பண்ணியிருந்தனர். சற்றேறக்குறைய ஒரு மணி நேரம் அங்கிருந்துவிட்டு அறைக்கு திரும்பினோம். தம்பி மகேந்திரன் மறுனாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ராப்பாடம் தயார் செய்துகொண்டிருந்தார். அந்த உழைப்பின்  உன்னதம், மறுநாள்  மகேந்திரனின் சிறப்பான அறிமுக உரைகளில் உணர முடிந்தது.



                         விழா காலை பத்து மணியளவில் இனிதே தொடங்கியது. மேடையில், சித்திரை நகரின்  முத்திரைப்  பதிவர்கள் நால்வருடன் (திரு.சீனா ஐயா,திரு.ரமணிஐயா,திரு.சரவணன்,திருமதி.துளசி)  நானும் அமர்ந்திருந்தேன். 





வருவாய் இறைவா
வரமெனக்கு அருள்வாய்
வான்மழைபோல் நின் ஆசிகளை
வாரி என்மேல் பொழிவாய்
உனை மனதில் நிறுத்தி
வந்தேன்,நின்றேன், வரவேற்கின்றேன்.”



இமைக்கும் பொழுதுகளில், இணையில்லாக் கருத்துக்களை, இணையத்தில் அரங்கேற்றும் பதிவுலக பிரம்மாக்களின் சந்திப்பை கடந்த 2011ம் ஆண்டில் நடத்திய, நடத்து உதவிட்ட உள்ளங்களையும், அதே ஆண்டில் ஈரோட்டில் இணையில்லாத்திருவிழா நடாத்திய பதிவுலக பிரம்மாக்களையும்,2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில்  தமிழகத் தலைநகரில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பாக நடாத்திய  நல்லுள்ளங்களையும் நன்றியோடு  நினைத்து  வரவேற்புரையில் சபையோரை வரவேற்று அமைந்தேன்.


தொடர்ந்து, பதிவர்கள் சுய அறிமுகம், அன்பு மகன்  பிரபுகிருஷ்ணா, திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ்  போன்ற தொழில்நுட்ப வழிகாட்டுதல் தரும் பதிவர்களுக்கு பாராட்டு என அரங்கம் களைகட்டியது. வந்திருந்த அனைவருக்கும் மதுரை ஸ்பெஷல்  ஜில் ஜில் ஜிகிர்தண்டா வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்திலியே,     சுவையான மதிய உணவு சுட சுட வழங்கப்பட்டது.


பதிவர்கள்  பள்ளிக்குழந்தைகள் போல் ஆங்காங்கே நின்று கொண்டு அளவளாவிக்கொண்டிருந்தனர். காலையில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பேராசிரியர்  திரு. தா. கு. சுப்பிரமணியன் அவர்கள் வரமுடியாமல் போனது அனைவருக்கும் சிறிது  ஏமாற்றத்தை தந்தது.  பிற்பகல்,     நாவல் ஆசிரியர்  திரு.இந்திரா சௌந்தரராஜனின் உரை அந்த ஏமாற்றத்தை துடைத்தெறிந்தது. 

திரு.பகவான்ஜிக்கு பாராட்டு.
            
 மதுரை திருவிழா சிறக்க உதவிய பதிவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.  அனைவருக்கும் அறிவியல் வல்லுனர்கள் படங்களுடன் கூடிய மேஜை காலண்டர் அன்பளிப்பாய் வழங்கப்பட்டது.  மாறா இளமையும், சுறுசுறுப்புமாய் வலம்  வந்த  திரு.ரத்னவேல் ஐயாவின் நட்பு வட்டம் என்னை சற்றே பொறாமை படத்தான் வைத்தது. ஐயாவிற்கு பக்க பலமே அவர்தம் துணைவியாரின் ஈடு கொடுக்கும் ஒத்துழைப்புத்தான். 


முற்பகல் முழுவதும் மேடையில் இருந்ததால், மற்றவர்களிடம் உரையாட சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. என்னருகில்  அமர்ந்திருந்த திரு.ரமணி ஐயாவுடன் மட்டுமே நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். உணவு இடைவேளையில் திரு. தருமி ஐயா மற்றும் திரு.வேல்முருகன் ஆகியோரை சந்தித்து உரையாடினேன்.  இருவரும் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றறிந்து மகிழ்ச்சியுற்றேன்.
திரு.தருமி ஐயாவிற்கு  பாராட்டு.
மாலையில், சூடான வடையும் , சுவையான டீயும் வழங்கப்பட்டது.  அரசன் மேடை ஏறியபோது, தனி ரசிகர் கூட்டமே அரங்கம் அதிர கைதட்டியது. 
திரு.அரசன்ஜிக்கு பாராட்டு.

திருவிழா திக்கெட்டும் புகழ் பரவிடும் வகையில் நிகழ்ந்தேற,   தமிழ்வாசியின் உழைப்பு பாராட்டிற்குரியது. என்றும் இளமை நாயகன் திரு.சீனா ஐயா, பொறுமைக் கடல் திரு. ரமணி ஐயா, புன்னகையால் பல உள்ளங்களைக் கவர்ந்த திண்ண்டுக்கல் தனபாலன், 
பள்ளியிலும்,
 பதிவுலகிலும் சீரிய வழிகாட்டி திரு.சரவணன் சார், மேடையில் சுறு சுறுவென வலம் வந்த திரு. கோவிந்தராஜ், அமைதியே உருவான திரு.பகவான்ஜி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் பாராட்டிற்குரியது. பத்திரிகை, தொலைக்காட்சி நண்பர்களும் பாராட்டியதில் 
நன்றி: தினமலர் 



Follow FOODNELLAI on Twitter

12 comments:

சீனு said...

தீபாவளியை ஒட்டிய வாரம் என்பதால் வருகை குறைவாக இருக்கும் என எதிர்பார்த்தேன்.. நல்லவேளை நம்மவர்கள் நம்மை அப்படியெல்லாம் ஏமாற்றி விடவில்லை :-)

Rathnavel Natarajan said...

மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி சார்.

Yaathoramani.blogspot.com said...

மிகச் சிறப்பான தொகுப்பு
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

மிக்க மகிழ்ச்சி சார் ...

அன்றைய முதல் நாள் இரவின் உறக்கத்தில் கனவாய் வந்து நினைவை அள்ளிச் சென்றீர்கள் மனோ அண்ணன்கிட்ட சொல்லிட்டிருந்தேன் அப்ப தான் அண்ணன் சொன்னார் இன்னைக்கு மதுரையில் பதிவர் திருவிழா அதுதான் உனக்கு கனவா வந்திருக்கு என்றார் ...
ஏதோ கனவிலாவது அனைவருடனும் உலா வந்தேனே என்று மனதை தேக்கி கொண்டேன் ஏக்கங்கள் தான் என்றும் இது போல அங்கே நானும் இருந்தால் தேக்கி வைத்த நீர்போல அடுத்த வருடமாவது முறச்சி செய்கிறேன் சார் என்றாவது கிட்டும் பாக்யம் ....

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான விழாவை சிறந்த முறையில் பகிர்ந்து விழாவுக்கு வராத குறையைத் தீர்த்துவிட்டீர்கள்! நன்றி!

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் உட்பட பலருடனும் நிறைவாக பேச முடியவில்லையே எனும் வருத்தம் உள்ளது... ஆனாலும் மனம் முழுவதும் மகிழ்ச்சி... நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

திக்கெட்டும் புகழ் பரவிடும் வகையில் நிகழ்ந்தேறிய திருவிழா பற்றி நிறைவான பகிர்வுகளும் ,, படங்களும்.பாராட்டுக்கள்.!

தனிமரம் said...

பகிர்வுக்கு நன்றி ஐயா .

'பரிவை' சே.குமார் said...

பதிவர் சந்திப்பு குறித்து படங்களுடன் அருமையான பகிர்வைக் கொடுத்த தங்களுக்கு வாழ்த்துக்கள் சார்.

Unknown said...

அருமையான தருணம்

அடுத்த முறை கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்

அனைவருக்கும் எனது பாராட்டுக்களும்

வாழ்த்துக்களும்

வாழ்க தமிழ்

உணவு உலகம் said...

நன்றி நட்பூக்களே.