விக்கிரவாண்டி பகுதியில்
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவில்
பயண வழி
உணவகங்கள் உள்ளன.
இங்கு உணவு
தரமாக வழங்கப்படுவதில்லை, பொருட்களின்
விலை அதிகமாக
உள்ளதாக கூடுதல்
புகார் வந்துள்ளது.
அதன்பேரில்,மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பயிற்சி கலெக்டர் தலைமையில் மாவட்ட நியமன அலுவலர்,உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொழிலாளர் ஆய்வாளர், துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி, வி.சாலை, சித்தணி பகுதிகளில் உள்ள
பயணவழி ஓட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது விக்கிரவாண்டி டோல்கேட் அருகே உள்ள ஓட்டலில் உணவுகள் சுகாதாரமாக செய்யப்படாமல் பயணிகளுக்கு அதிக விலையில் வழங்கப்படுவதும், பிஸ்கட், கூல்ரிங்ஸ் கூடுதல் விலைக்கு விற்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஓட்டலை மூடி சீல் வைத்தனர். இதேபோல் சித்தணி அருகே உள்ள ஓட்டலில் காலாவதியான கூல்டிரிங்சும், சுகாதார மற்ற உணவு கொடுக்கப்படுவதும் தெரிவந்தது. அந்த ஓட்டலையும் மூடி சீல் வைத்தனர்.
இதுகுறித்து பயிற்சி கலெக்டர் கூறுகையில், சாலைகளில் உள்ள பயணவழி உணவகங்களில் பலமுறை ஆய்வு செய்து குறைகளை சுட்டிகாட்டினோம், ஆனால் இதனை அவர்கள் கண்டு கொள்ளலாமல் அலட்சியமாக செயல்பட்டனர்.பயணிகளிடமிருந்து புகாரையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து ஓட்டல்களுக்கு சீல் வைத்ததாக கூறினார்.
தொடரட்டும் இதுபோன்ற நடவடிக்கைகள்.

3 comments:
இதுபோல் எங்கும் நடக்க வேண்டும்...
பாராட்டப் பட வேண்டிய செயல் ,மூடப் பட வேண்டிய மோட்டல்கள் ஏராளம் ..தொடரட்டும் நல்ல பணி!
செவிக்கு உணவில்லாதபோது ஈயப் படும் உணவு இப்படி இருக்கக் கூடாதுதான் :)
பாராட்டுதலுக்கு உரிய செயல்...
Post a Comment