வருகின்ற புத்தாண்டிற்கு, நிறமற்ற கேக்குகள்தான் இனி கேரள பேக்கரிகளை அலங்கரிக்கப்போகின்றன என்றொரு தகவல் வந்து, அம்மாநில மக்களின் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை எடுத்துரைக்கின்றது.
ஆம், அம்மாநில, பேக்கரி பொருட்கள் தயாரிப்போர் கூட்டமைப்பு, இத்தகையதோர் வரவேற்கத்தக்க முடிவை சமீபத்தில் எடுத்துள்ளது. நிறமற்ற கேக்குகள் நினைத்துப்பார்க்க கொஞ்சம் வித்யாசமாகத்தான் தெரியுமென்றாலும், செயற்கை நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட கேக்குகள் நீண்ட காலப்பயன்பாட்டில் கொண்டுதரப்போகின்ற பின் விளைவுகளை யோசித்தே இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
கொஞ்சம் வியாபாரம் மந்தமாகலாம். கொஞ்ச காலத்திற்கு, நிறமற்ற கேக்குகள் பழையனவோ என பொதுமக்கள் வாங்க யோசிக்கலாம். நாளடைவில், அதன் நன்மைகள் தெரியத்தெரிய, விற்பனை கூடுமே தவிர குறையாது.
செயற்கை நிறமிகளை நாம் உண்ணும் உணவில் தொடர்ந்து பயன்படுத்திவருவது, நிச்சயம் நல்லதல்ல. அதிலும், உணவுப்பொருட்களில், அனுமதிக்கப்பட்ட நிறமிகள் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன, அல்லது, அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகள் (உ.ம்.: துணிக்கு சாயமிடப்பயன்படும் ரசாயனங்கள்) தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கலப்பட உணவுப்பொருட்களை உண்பதால், முதலில் தோன்றும் அறிகுறி வயிற்றுவலி. அது தீவிரமடைந்தால் குடல் அழற்சி, அதி தீவிரமடைந்தால், வயிற்றுப்புற்று நோய் என வாரி வழங்கும்.
எனவேதான், நிறமற்ற கேக்குகளை உருவாக்கும், கேரளாவின் முயற்சி-நல்ல முயற்சி, நாமும் பாராட்டலாம். குறைந்த பட்சம், நம் வீட்டுக்குழந்தைகளுக்கு இந்த நல்ல பழக்கங்களை இப்போதே கற்றுத்தரலாம்.

5 comments:
நிறமில்லா கேக்குகளை வரவேற்ப்போம்...உடல்நலத்தை காப்போம்.
அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தனும் அண்ணா !!இந்த கலர்களால் வளரும் குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்டிவிட்டி மற்றும் ADHD எல்லாம் ஏற்படுது ..பாராட்டுவோம் கேரளாவை
வரவேற்போம்... வாழ்த்துவோம் சார்.
இந்த விஷயத்தில் கேரளாவின் முடிவு பாராட்டத் தக்கது! நம்ம ஊரிலும் முயற்சித்தால் நன்றாக இருக்கும்! நன்றி!
இந்த திட்டத்தை மனமார வரவேற்கிறேன்...
Post a Comment