இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 30 April, 2015

கூகுள்நிறுவனத்தின்சர்வதேசஉச்சிமாநாட்டில் நெல்லைபள்ளிமாணவிசிறப்புரை

           

             கூகுள்நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாடு வரும்மேமாதம் 2ம்தேதி, சனிக்கிழமை டெல்லியில் நடைபெறஉள்ளதுஇந்த உச்சிமாநாட்டில்உலகசாதனைகள் படைத்தபாளையங்கோட்டை IIPEலட்சுமிராமன்மெட்ரிக் பள்ளியின்   9ம்வகுப்புமாணவி   
K.விசாலினி  (வயது 14),  சிறப்புரைஆற்றஉள்ளார்.
இவர் கணினிதுறையில்,  CloudComputing in Google Apps for Education என்ற தலைப்பில், காலை10.30மணி-11.30  மணிவரை ஒருமணிநேரம் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டு உள்ளார்.
இந்த உச்சிமாநாட்டில் விசாலினியைத் தவிர ஜப்பான் சாகாபல்கலைக்கழகப்பேராசிரியர் ஆன்ட்ருமியர்காப் (AndrewMeyerhoff) மற்றும் பிட்ஸ்பிலானி (BITS Pilani) பல்கலைக்கழககணினி துறைத்தலைவர் Dr.ராகுல்பானர்ஜி ஆகியோரும்உரையாற்றஉள்ளனர்.    
   கூகுள்நிறுவத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் 14 வயது பள்ளி மாணவி சிறப்புரை ஆற்றுவது என்பது இதுவே முதல் முறைஆகும். இதற்கு முன்னதாக விசாலினிமத்தியப்பிரதேச தலைநகர்போபால், கர்நாடகாவின் மங்களூரு, பெங்களூரு மற்றும் சென்னை உட்பட சர்வதேச கணினி மாநாடுகளில் தலைமைவிருந்தினராகக்(ChiefGuest) கலந்துகொண்டு கீநோட் உரையாற்றியுள்ளார்  (Keynote Address) என்பது குறிப்பிடத்தக்கது.  14வயதில், கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் சிறப்புரை ஆற்ற இருக்கும் நெல்லை பள்ளி மாணவி விசாலினிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
Follow FOODNELLAI on Twitter

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விசாலினிக்கு வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” said...

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் மாணவி விசாலினிக்கு எனது வாழ்த்துக்கள்!

Unknown said...

Congrats Vishalini. Miss u ma.

Unknown said...

Congrats Vishalini. Miss u ma.