நூடுல்ஸைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் பவுடர் ஒன்று.
கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுநர், தன்
18 மாதக் குழந்தைக்காக, ஒரு நிறுவனம் தயாரித்த பால் பவுடரை வாங்கினார்.
அதில் புழுக்கள் நெளிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர், கோவையில் உள்ள
உணவு பகுப்பாய்வுக் கூடத்தில், அந்தப் பால் பவுடரை ஆய்வுசெய்யக்
கொடுத்தார். அதில், உயிருள்ள 28 லார்வாக்கள் (Live larvae), 22
அந்துப்பூச்சிகள் (Rice weevils) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காலாவதியாகிவிட்ட
பால் பவுடரில், அதன் தரம் குறைந்திருக்குமே தவிர புழுக்கள் உருவாக
வாய்ப்பில்லை. புழு, புழுக்களின் முட்டைகள் இருக்கிறது என்றால், அந்த
நிறுவனத்தின் பால் பவுடரை பேக் செய்யும் போது, சரியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.
முன்பெல்லாம்
தாய்ப்பாலுக்குப் பிறகு குழந்தைகளுக்கு அன்றாடம் சாப்பிடும் உணவையே,
எண்ணெயும் காரமும் இல்லாமல் கொடுத்தனர். அப்போது பால் பவுடரோ, ஆயத்த பவுடர்களோ கிடையாது. நாம் சாப்பிடும் அன்றாட உணவையே நன்கு
மசித்து புளிப்பு, காரம், எண்ணெய் இல்லாமல் கொடுத்தாலே போதும்.

4 comments:
அடப் பாவிகளா....
எதிலும் தரம் இல்லாமல் போய்விட்டது! வியாபார உலகம் நுகர்வோர் நலனை சிறிதும் மதிப்பது இல்லை!
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப்போனா அங்க ரெண்டு கொடுமை திங் திங்குன்னு ஆடிட்டு இருந்துச்சாம்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க, அது போல இருக்கா @திண்டுக்கல் தனபாலன் சார் & @தளிர் சுரேஷ் சார்?
உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!
Post a Comment