உணவு பொருட்களில் கலப்படம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன் றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்கக் கோரி வக்கீல் வினீத்தண்டா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தார்.
அதில், ‘‘உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்க தற்போதுள்ள சட்டம் வலுவானதாக இல்லை. இதனால் உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வருகிறது.
கலப்படம் செய்யப்படும் நிறுவனங்களை மூட அரசுக்கு உத்தர விட வேண்டும். ரசாயன கலப்பில்லாமல் சர்வதேச தரத்தில் உணவுப் பொருட்களை தயாரிக்கவும், கலப்பட பொருட்களை பறிமுதல் செய்து அழிக்க கடுமையான விதிமுறைகள் வகுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண் டும் ’’ என கூறியிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல் தத்து, நீதிபதிகள் அருண் குமார் மிஸ்ரா, அமித்தவாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்ட னர்.

2 comments:
நல்லதொரு உத்தரவு...
நல்லதொரு உத்தரவு...
பகிர்வுக்கு நன்றி சார்...
Post a Comment