இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 20 July, 2015

அந்திசாயும் வேளையில் ஒரு ஆன்மீகப்பயணம்.



நேற்று மாலை நாங்குநேரி நோக்கி ஒரு பயணம். அந்தி சாயும் வேளையில்,  = வானமாமலை பெருமாளை தரிசிக்க நானும், நண்பர் ரமேஷும், அவர் உறவினர் ஒருவருமாய் புறப்பட்டுச் சென்றோம்.
கோவிலில், தனியார் நிறுவன உதவியுடன், திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மூலஸ்தானத்தில், =தோத்தாத்திரி நாதர்  =தேவி, பூமாதேவி தாயார்களுடன் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றார். மூலவர் சுயம்புவாய் உருவானவர்.
                     
                 கோவிலிலுள்ள எண்ணெய்க்கிணறுதான் அதிசயமான ஒன்று. முன்னாளில் அரசன் ஒருவன் வாரிசு இல்லையே என ஏங்கித்தவித்து, திருக்குறுங்குடி பெருமாளிடம் முறையிட்டபோது, இந்த இடத்தைக்குறிப்பிட்டு, சுயம்புவாய் உருவான பெருமாள் மண்ணில் புதையுண்டு இருப்பதை எடுத்து கோவில் கட்டினால், வாரிசு உருவாகுமென்றருள் பாலித்தார். எறும்பு வட்டமிடுமிடத்தில் தோண்டினால், சுயம்பு வெளிப்படுமென்றும் இறைவன் வழிகாட்டினார்.
                           அவ்வாறே, இந்த இடத்தை அடையாளம் கண்ட மன்னன், எறும்பு வட்டமிட்ட இடத்தை தோண்டி, சுயம்பு பெருமாளை கண்டெடுத்து, கோவிலும் கட்டினான். அவ்வாறு, சுயம்புவை தோண்டி எடுத்தபோது ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாய், இப்பெருமாளுக்கு, தினசரி எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகின்றது. அந்த எண்ணெய்,  கோவிலிலுள்ள கிணறு ஒன்றில் சேமித்து வைக்கப்படுகின்றது.
                              சரும நோய்கள் உள்ளவர்கள், அந்த மருத்துவகுணம் நிறைந்த எண்ணெயினை பயன்படுத்தினால், தீராத தோல்நோய்களும் தீர்ந்துவிடுகின்றன. அந்த எண்ணெய் கிணற்றை பார்வையிட்டோம். எவ்வளவு ஆழமிருக்கும் என்று கேட்டபோது, இர்ண்டு பனை ஆழமிருக்கும் என்றனர். அதில்தான் தினசரி பெருமாளுக்கு அபிஷேகம் ஆகும் மருத்துவகுணம் வாய்ந்த எண்ணெய் சேமித்துவைக்கப்படுகின்றது.
                                பல்லாண்டுகளாய் சேமித்து வைக்கப்படும் அந்த எண்ணெய் கிணற்றில், அபிஷேக எண்ணெயுடன், பாலும் நீரும் சேர்ந்திருந்தாலும், கெட்டுப்போனதற்கான எந்த அறிகுறியோ, வாசனையோ எழவில்லை. திறந்த கிணறு என்பதால், மழைநீரும் அதில் விழும். இருந்தும் அந்த எண்ணெய் அப்படியே இருக்கின்றது.
                                 இன்னல்கள் இடர்கள் அனைவருக்கும் நீங்க, இறைவனின் சன்னதியில் வேண்டி வீடு திரும்பினோம்.
                                
Follow FOODNELLAI on Twitter

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பான சிறப்பான தகவல்... நன்றி...

Yaathoramani.blogspot.com said...

அறியாத கோயில்
அதிசயத் தகவல்
அடுத்தமுறை அந்தப் பகுதி வருகையில்
அவசியம் தரிசித்து விடுவேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

எண்ணெய்க் கிணறு அறியாத தகவல்! அதிசயமாக இருக்கிறது! ஒருமுறை சென்றுவரவேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

உணவு உலகம் said...

நன்றி: திண்டுக்கல் தனபாலன் சார்

உணவு உலகம் said...

வாங்க Ramani ஐயா.
வாங்க ‘தளிர்’ சுரேஷ் சார்.

'பரிவை' சே.குமார் said...

நாங்குநேரி கேள்விப்பட்டிருக்கிறேன்...
ஆனால் சென்றதில்லை...
நல்லதொரு ஆன்மீகப் பயணம் சார்...