இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 30 September, 2015

எச்சரிக்கையா இருங்க!

எச்சரிக்கை! சமையல் எண்ணெய் வாங்கும் போது
உங்கள் கண்ணே உங்களை ஏமாற்றும்......!
சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளின் மேல் உள்ள
படத்தைக் கண்டு ஏமாற வேண்டாம்...!

சமையல் எண்ணெய்யில் 20% சதவிகித அளவிற்கு பிற உணவு எண்ணெய்களை  சேர்த்து Blended vegetable Oil என்ற பெயரால் விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  சமையல் எண்ணெய்யுடன் பிற சமையல் எண்ணெய்களை அவ்வாறு சேர்க்கும்போது சேர்க்கப்பட்ட ஒரு எண்ணெயின் அளவு 20% அளவிற்கு  குறையாமல் இருக்க வேண்டும்.
இத்தகைய எண்ணெய் பாக்கெட்டுகள்அக்மார்க்தர குறியீட்டுடன்தான் விற்பனை செய்யப்பட வேண்டும். மேலும் எவ்வளவு சதவீத  அளவிற்கு மற்ற எண்ணெய்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது லேபிளில்  குறிப்பிடப்பட வேண்டும்.

எண்ணெய் பாக்கெட்டுகள் மேற்கூறியவாறு  “கலக்கப்பட்ட  வெஜிடேபிள் சமையல் எண்ணெய்என்பதை லேபிளில் வெளிப்படையாக உறுதி செய்ய வேண்டும். லேபிளில் உண்மைக்கு  மாறான குறியீடோ அல்லது படமோ இடம் பெறக்கூடாது.
எண்ணெய் பாக்கெட்டுகளில் கீழ்கண்ட குறியீடுகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

எண்ணெயின் பெயர்

உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி

பேட்ச் எண்

எண்ணெயின் எடை(Weight)/ கொள்ளளவு (Volume)

உற்பத்தி செய்யப்பட்ட நாள்

சிறந்த பயன்பாட்டு நாள்

வெஜிடேரியன் குறியீடு

உணவுப்பாதுகாப்பு மற்றும் தர விதிகள் 2011ன்- படி குறிப்பிடப்பட வேண்டிய சட்ட ரீதியான உறுதிமொழிகள்:

 “ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படம் இல்லைஎன்ற சட்ட ரீதியான உறுதியினை லேபிளில் கொண்டிருக்க வேண்டும்.

உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் படி உண்மைக்கு புறம்பாக லேபிள் அச்சிட்டு விற்பனை செய்பவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்படும்.
அண்மையில், CONSUMER ASSOCIATION OF INDIA என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம்,  தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விற்பனை ஆகும் உணவு எண்ணெய்கள்கடலை எண்ணெய்என்ற பெயரில் விலை குறைந்த பாமாயில், தவிட்டு எண்ணெய்கள், பருத்தி விதை எண்ணெய்கள் விற்கப்படுவதாக அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில்   மாவட்டங்களிலிருந்து   “கடலை எண்ணெய்என பெயரிடப்பட்ட மாதிரிகளை எடுத்து சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரு சூரிய காந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50% பருத்தி விதை எண்ணெயும்,
50% பாமாயிலும் தான் காணப்பட்டது.
இது முற்றிலும் நுகர்வோரை ஏமாற்றும் செயலாகக் கருதப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட சமையல் எண்ணெயை அதன் சுவைக்காகவும், மணத்திற்காகவும், தரத்திற்காகவும் உட்கொள்ளும் நுகர்வோர் அவர் கொடுத்த விலைக்கு முற்றிலுமாக ஏமாற்றப்படுகிறார். மேலும் அவர் குறிப்பிட்ட எண்ணெயின் சுவை மற்றும் மணத்தை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
தகவல்: Consumer Association of India-Press news.
Follow FOODNELLAI on Twitter

3 comments:

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி சார்.

மஞ்சு அசோக் said...

Thanku n good information



மஞ்சு அசோக் said...

Thanku n good information