இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday, 24 October, 2015

இந்தியாவின் விடிவெள்ளி விசாலினி -இன்றளவில் ஏற்படுத்தியுள்ள சாதனைகள்-2இந்தியாவின் விடிவெள்ளி விசாலினி பற்றி கடந்த 2012 ஜனவரி முதல் தேதியன்று  நான் வெளியிட்ட கட்டுரை இன்றும் Facebook , Whatsapp ல் வலம் வருவது மிக்க மகிழ்ச்சி. பல இடங்களில் படைத்தவர் பெயரில்லாமலேயே வருகின்றது என்று ஒரு சிறு ஆதங்கம் மட்டும் என்னில் உண்டு. ஆனால், ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்து விட்டு  சத்தமே இல்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி வியப்பின் சிகரம் தான், அந்த வலிகளை மறக்கச் செய்கின்றது.  
ஆம் !  வெல்டர்  பேத்தி  World Record Holder  ஆன கதை இது

நம்பித்தான் ஆகவேண்டும் நண்பர்களே,
விசாலினியின் கைகளில் இன்று  5  உலக சாதனைகள்

1. The Highest IQ in the World - IQ level 225
2. The Youngest CCNA World Record holder
3. The Youngest IELTS World Record holder
4. The Youngest CCSA World Record holder
5. The Youngest Exin Cloud computing World Record holder


சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன்  90 முதல் 110 வரை இருக்கும். ஆனால் விசாலினியின் IQ level 225.    உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர்   என்ற உலக சாதனை படைத்த விசாலினி, தன் வீடு முழுவதையும்  சான்றிதழ்கள், பரிசுக் கோப்பைகள், கேடயங்கள், மற்றும் பதக்கங்களால்  நிறைத்து இருக்கிறார்.

சாதனைப் பட்டியலைப் படியுங்கள்.
தமிழனின்  மூளை  தரணியை   வெல்வதைப்  பாருங்கள் 
பள்ளிப்படிப்பில் 2 முறை double promotion வாங்கிய விசாலினியின் கவனம், 10 வயதில் Computer Networking துறையில் திரும்பியது.
B.E , B.Tech, M.Tech முடித்த மாணவர்களே திணறும் மிகவும் கடினமான, உலகின் முன்னணி கணினி நிறுவனங்களான Cisco, Microsoft, Oracle, Checkpoint, EXIN, British Council, IDP Australia. International Software Testing Board நடத்தும் சர்வதேச கணினித் தேர்வுகளை தன் 10 வயதில் எழுதத் தொடங்கினார் விசாலினி.

Doctorate in Networking  தேர்வில் அவர் பெற்ற  மதிப்பெண்  96%
நம்ப முடியவில்லையா ?
CCNA தேர்வில் 12 வயது Pakisthan மாணவர் Iritza Haider சாதனையை, விசாலினி தன்  10 வயதில் முறியடித்து The Youngest CCNA World Record holder என்ற  உலக சாதனை படைத்தார்.

IELTS தேர்வில் 12 வயது Pakisthan மாணவி Sitara Bruj Akbar சாதனையை, விசாலினி  தன் 11 வயதில் முறியடித்து The Youngest IELTS World Record holder என்ற உலக சாதனை படைத்தார்.

CCNA, CCNP, CCIE, MCP, CCSA, EXIN Cloud Computing, ISTQB-ISEB , OCJP, என 13 வயதிற்குள் 12 சர்வதேச கணினிச் சான்றிதழ்கள் விசாலினியின் கைகளில்.

தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர், கற்பிக்கவும் தொடங்கினார்.

11 வயதில்,   25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக சென்று B.E , B.Tech, M.Tech, MCA இறுதியாண்டு மாணவர்களுக்கு Networking தொழிநுட்பம் குறித்து Seminar வகுப்புகளை நடத்தினார் விசாலினி .ஒரு கட்டத்தில் மாணவர்களைத் தொடர்ந்து கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், முதல்வர்களுக்கு Seminar வகுப்பு எடுக்கும் விசாலினிக்கு   Chhota Bheem, Barbie என்றால் உயிர். அவளும் ஒரு குழந்தைதானே! 


                                                                                            சாதனைகள் தொடரும் . . . .
Follow FOODNELLAI on Twitter

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு சாதனைகள்...! விசாலினிக்கு வாழ்த்துகள்...

”தளிர் சுரேஷ்” said...

சாதனைகள் மலைக்க வைக்கிறது! விசாலினிக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!