இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 3 November, 2015

இந்தியாவின் விடிவெள்ளி விசாலினி -இன்றளவில் ஏற்படுத்தியுள்ள சாதனைகள்-3


                        

முதல் பகுதி வாசிக்க: 
இரண்டாம் பகுதி வாசிக்க:


இவரது திறமையை அறிந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருமாறு விசாலினிக்கு அழைப்பு விடுத்தது. .அங்கு  உலக அளவிலான IOB  GM தலைமையிலான IT professional களுக்கு  1/2  மணிநேரம்  வகுப்பு எடுக்கச்  சொன்னார்கள்.   ஆனால் விசாலினியோ மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.   அப்போது  விசாலினிக்கு வயது 12 தான்.   இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்  தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.நரேந்திரா  உடனே விசாலினியை நேரில் பாராட்டினார் .

இத்தோடு நிற்கவில்லை விசாலினியின் சாதனைப் பயணம்.

சர்வதேச அளவில் நடைபெறும் கணினி மாநாடுகளில் தலைமை விருந்தினராக உரையாற்ற அழைக்கப்பட்டபோது,  விசாலினிக்கு வயது 11.
சர்வதேச கணினி மாநாடுகளில் பன்னாட்டு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கூட பார்வையாளராக மட்டும் செல்வதற்கே அதாவது attend பண்ணவே 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால் விசாலினியோ 11 வயது குழந்தையாக இருக்கும் போதே ஒவ்வொரு சர்வதேச கணினி மாநாடுகளிலும் 70 முதல் 80 நாட்டு அறிஞர்கள் மத்தியில் தலைமை உரையாற்றிய பெருமைக்குரியவர்.
 இதுவரை டெல்லி, சென்னை,மத்திய பிரதேசத்தின் போபால், கர்நாடகவின் பெங்களுர், மங்களூர், குடகுமலை என இந்தியா  முழுவதும் 10 சர்வதேச கணினி மாநாடுகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு, Computer Networking குறித்த பல்வேறு நுணுக்கங்கள்சிறப்பம்சங்கள்குறித்து உரை   ஆற்றி உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியுள்ளார் விசாலினி. 
11  வயதில்,  உலகின்  எந்த  ஒரு  நாட்டுக்குக்  குழந்தையும்  செய்யாத  சாதனை  இது.
அடுத்தது நாம் அன்றாடம் பயன்படுத்தும்  Google.
கடந்த மே- 2ம் தேதி டெல்லியில் நடைபெற்ற  Google  நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில்  Cloud Computing in Google apps for education என்ற தலைப்பில்  ஒரு  மணி  நேரம்  சிறப்புரை  ஆற்றிய  விசாலினியைப் பார்த்து  பன்னாட்டு  அறிஞர்கள்  வாயடைத்துப் போயினர்.  அங்கு  The Youngest Google Speaker என்ற பட்டமும் பெற்றார் விசாலினி.


அதுமட்டுமா,    தன்  11 வயதில்,   TEDx   சர்வதேச மாநாட்டில்  தலைமை உரை ஆற்றிய  விசாலினி   The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார்.


HCL  நிறுவனம்  The Pride of India - Visalini   என பாராட்டிய போது  அவருக்கு  வயது 11.


இது   World Records University, London   Dean - தாமஸ்பெய்னிடம் பாராட்டு பெற்ற போது.

அது மட்டுமா ?
நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்டது ஆஸ்திரேலியாவின் முன்னணி செய்தி நிறுவனம் SBS ஆஸ்திரேலியா.   இது உலகின்  74 மொழிகளில் 174 நாடுகளில் செய்திகளை ஒலிபரப்புகிறது,  கடந்தாண்டு செப்டம்பரில் விசாலினியின்  அரை மணி  நேர  பேட்டியை  ஒலிபரப்பி  கௌரவப் படுத்தியது  SBS ஆஸ்திரேலியா.முன்னாள்  குடியரசுத்தலைவர்  திரு  A .P .J .அப்துல் கலாம் அவர்களின் பாராட்டை தன் வயதிலேயே  பெற்றவர்  நம்  விசாலினிAmerica, Canada,UK, France, Australia, Italy, Belgium, South Korea, South Africa, Sri Lanka, Netherland, Indonesia, Thailand, Singapore, Dubai, Saudi Arabia, Malaysia என உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி  நம் இந்தியாவின்  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
ஆம்.!  நெல்லை மண்ணின் மகள் இவள்.
அல்வாவுக்கு  மட்டுமல்ல ,   அறிவுக்கும் திருநெல்வேலி தான் என்று ,  உலக அரங்கில்  உரக்கச் சொல்லியவர்.

திருநெல்வேலி  மாநகராட்சி   மேயர்  திருமதி. விஜிலா சத்யானந்த் The Pride of Tirunelveli  city - Visalini  என  பாராட்டினார்.


TamilNadu Book of Records நிறுவனமோ  இவரது பெயரை தன்னிடம் இணைத்துக் கொண்டது.

Times  Now English  News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து   2  நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The  Amazing  Indian  -  Visalini  என அரை மணி நேர   Documentry படத்தை ஒளிபரப்பியது.

விசாலினியின்  சாதனைப்  பட்டியல்  நீண்டதாலோ  என்னவோ,  தனக்குரிய இணையதளத்தைத்  தானே  வடிவமைத்தார்.தன்  11 வயதில்.  அதுவும்  24 மணி நேரத்தில்  ( ஒரே நாளில்)   
விசாலினியின்  நுண்ணறிவுத்திறன்  பற்றி  அறிந்த  ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம்  பல்கலைக்கழகம்  9ம்  வகுப்பிலிருந்து   நேரடியாக  B.Tech   பயில சிறப்பு  அனுமதி  அளித்துள்ளது.
ஒரு   ஞாயிற்றுக்கிழமை  மாலையில்  விசாலினியின்  தந்தைக்கு வந்தது ஒரு  Phone Call .    Our Prime Minister wants to meet your daughter Visalini - என்று.     கடந்த  September 4th 2015  அன்று  இந்தியப்  பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன்  நேரடியாகப்  பேசும்  வாய்ப்பு  அது. மகிழ்ச்சியில்  திளைத்தார் விசாலினி.
பிரதமரைக்  கண்ட  விசாலினி  எழுந்து  நின்று  தமிழில்  வணக்கம்  என்று சொல்ல,  பதிலுக்கு  தமிழிலேயே  வணக்கம்  என்றார்  பிரதமர் திரு.மோடி.
விசாலினியுடன்  உரையாடிய  போது,    இந்தச்  சிறு  வயதில்,  நீ செய்துள்ள சாதனைகளே  இந்த  நாட்டிற்கான  சேவைதான்  என்று நெகிழ்ந்து பாராட்டினார்  பிரதமர் திரு.மோடி.
பிரதமருடன் பேசியது என் வாழ்வின் பெருமை மிக்க தருணம் என்கிறார் விசாலினி.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் திரு. கருணாகரனோ,  விசாலினி  இந்திய தகவல்  தொழில்  நுட்பத்துறையில்  முக்கியப்  பங்காற்றுவார்  என்று பெருமை  பொங்க  வாழ்த்தினார்.
உலக  அளவில்  பாராட்டு  பெற்றுள்ள  விசாலினிக்கு,  தமிழக  முதல்வரின்  பாராட்டைப்  பெறவேண்டும்  என்பது  மிகப்பெரிய ஆசை.

Google சுந்தர்பிச்சை
Email சிவஅய்யாதுரை
Microsoft சத்யநாதெள்ளா
இந்த வரிசையில்  தமிழ் மகள்  விசாலினி  விரைவில்  இடம் பெறுவாள்தன் அறிவுத்திறனால் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள   சிறுமி விசாலினியின்  தந்தை கல்யாண குமாரசாமி  ஓர்  எலக்ட்ரீசியன். தாத்தா  தமிழ்க்கனல்  வெல்டராக  இருந்து , பின் தமிழாசிரியராகப்   பிரபலமானவர்  

ஆம்! உண்மை தான் !
தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.

ஒரு வேண்டுகோள்

நண்பர்களே,
தன் சொந்த முயற்சியில் மட்டுமே,  சர்வதேச பல்கலைக்கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் முதல் சாதாரண மக்கள்  வரை  தன்  பெயரை உச்சரிக்க வைத்த விசாலினி   ஓர் இந்தியர்  அதுவும் தமிழர்.
 உலகிலேயே  இல்லை ,  இப்படி  ஒரு  குழந்தை  என்று  சாதித்துக்  கொண்டிருக்கும் -- விசாலினி  என்னும்  விருட்சத்தின்  சாதனைகளை  உலகறியச்  செய்யுங்கள்.
இந்தத் தமிழ் மகள் பெருமையை  தரணி எங்கும் பறைசாற்றுங்கள்
முடிந்தவரை அனைவரும் Facebook, Whatsapp ல் share செய்யுங்கள்
இன்னும் பல சாதனைகள் புரிய--வியப்பின்  சிகரம்  விசாலினியைப்  பாராட்டுங்கள்,  ஊக்குவியுங்கள்.

விசாலினியின் இணையதளம் -   www.kvisalini.com
Email id – goldengirlvisalini@gmail.com
Facebook – https://www.facebook.com/visalini.kumaraswamy
Twitter – https://twitter.com/ggvisalini
Linkedin - https://www.linkedin.com/in/ggvisalini

சாதனைகள் தொடரும் என்கிறார் விசாலினி. என் கட்டுரைகளும் தொடரும் என்றேன் நான். இன்னும் இரண்டும் வளரும்,தொடரும் . . . 
Follow FOODNELLAI on Twitter

1 comment:

'பரிவை' சே.குமார் said...

விசாலினியை வாழ்த்துவோம்.