இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 16 July, 2016

துள்ளி விளையாடும் பள்ளிப்பிள்ளைகளையும் விட்டுவிடவில்லை விஷமிகள்

                    
            துள்ளிவிளையாடும் பள்ளிப்பிள்ளைகளையும் விட்டுவைக்க மனமில்லை இந்த விஷமிகளுக்கு.

                        ஆம், போதை வஷ்துக்களை வயது வித்யாசமின்றி    பெரியவர்கள் மத்தியில் விதைத்து வந்த விஷமிகள், பள்ளி செல்லும் குழந்தைகளையும், வளர் இளம் பருவ மாணவர்களையும் குறிவைத்து தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
                                   நம் வீட்டுப்பிள்ளைகளுக்கு “பாக்கட் மணி” கொடுப்பதோடு நின்றுவிடுவதில்லை பெற்றோரின் கடமை. அதை அவர்கள் எப்படி செலவிடுகிறார்கள் என்றும் கவனமாக நாம் பின் தொடராவிட்டால், தொல்லைகள் நம் வீடு தேடி வருமென்பதில் ஐயமில்லை. 

                          ஏனெனில்,  சிறுவர்களுக்கெல்லாம் எட்டா தூரத்திலிருப்பதாக நாம் நினைக்கும் போதை வஸ்துக்கள், அவர்கள் கைகளிலும் தன் ஆக்கிரமிப்பைத் துவங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் ஒரு பள்ளி மாணவன், அவர் பயிலும் பள்ளி அருகிலுள்ள கடையில் விற்ற போதை சாக்லெட் ஒன்றை அதிகளவில் வாங்கிப்பயன்படுத்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட பின்னர், இந்த அவலம் வெளியே தெரியத்துவங்கியது.

                         தமிழக   உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும், பள்ளிக்கருகிலுள்ள உணவு விற்பனை நிலையங்கள், சிற்றுண்டி விடுதிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இயங்கும் கேண்டீன்கள் அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டன.

                     பல கேண்டீன்களில் அடிப்படையான உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் கூட பின்பற்றப்படவில்லை. கல்விநிலையங்களுக்கருகிலுள்ள பல கடைகளில் போதை சாக்லெட்கள் பிடிபட்டன. 


புதிய போதை சாக்லேட் : சென்னை ஆர்.கே.நகரில், 'தரங்' என்ற பெயரிலும், ஆவடியில், 'போலா முனாக்கா' என்ற பெயரிலான போதை பொருட்கள் சிக்கின. இந்த வரிசையில், விழுப்புரம், பூந்தோட்டம் அருகே, கந்தசாமி லே - அவுட்டில் உள்ள, கிடங்கு ஒன்றில், 100 கிலோ 'பான் கேன்டி' என்ற, போதை சாக்லேட் சிக்கி உள்ளது.புதிய போதை சாக்லேட் : சென்னை ஆர்.கே.நகரில், 'தரங்' என்ற பெயரிலும், ஆவடியில், 'போலா முனாக்கா' என்ற பெயரிலான போதை பொருட்கள் சிக்கின. இந்த வரிசையில், விழுப்புரம், பூந்தோட்டம் அருகே, கந்தசாமி லே - அவுட்டில் உள்ள, கிடங்கு ஒன்றில், 100 கிலோ 'பான் கேன்டி' என்ற, போதை சாக்லேட் சிக்கி உள்ளது.                 இந்த வகை போதைகளுக்கு அடிமையாகி மாணவர்கள் உடல்நலம் கெட வாய்ப்புள்ளதால், விழிப்புடன் இருக்கவேண்டிய தருணம் இது.
           
Follow FOODNELLAI on Twitter

3 comments:

'பரிவை' சே.குமார் said...

விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை...
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்...

Yarlpavanan said...

சிந்திக்க வைக்கும்
அருமையான பதிவு
தொடருங்கள்

உணவு உலகம் said...

நல்ல கருத்துக்களுக்கு நன்றி நட்பூக்களே.