இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 12 October, 2017

கற்போருக்கு கற்பித்தல்.

                  
            ”உணவுப்பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு” என்ற எங்கள் துறையின் தாரக மந்திரத்தை கல்வி கற்பிக்கும் கல்லூரிகளுக்கே சென்று, ஒவ்வொரு தலைப்பில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர்  உரையாற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பணி, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

                           கடந்த வாரத்தில், நெல்லையிலுள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியில்  கல்லூரியில் அத்தகைய விழிப்புணர்வு முகாம் ஒன்று நடத்தபட்டது. சுமார் 360 மாணவர்கள் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியை, கல்லூரி நிர்வாக அலுவலர் திரு.குமார் முன்னிலையில்,  கல்லூரி முதல்வர் துவக்கி வைக்க வெகு விறுவிறுப்பாய் நடந்தது.
                      

              எப்போதும், சிறப்புரையாற்றும் அறைக்கு மாணவ மாணவியர் வரும்முன்னரே,  கலப்பட உணவுப்பொருட்களை காட்சிப்படுத்தி,அதற்கான விளக்கமளித்து அனுப்பி வைப்பது எங்கள் குழுவின்  வழக்கம். அன்றும் அதுபோன்றே கலப்படப்பொருள்கள், பாதுகாப்பாக உணவுப்பொருட்கள் வாங்குவது எப்படியென்று விளக்கியதை மாணவர்கள்  ஆர்வமுடன் கவனித்து கேள்விகள் பலவும் எழுப்பினர்.

             

                                      


                        முடிவில், எடுத்துரைக்கப்பட்ட உணவுப்பாதுகாப்பு விஷயங்களிலிருந்து, சில கேள்விகள் கேட்கப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்கு, பயனுள்ள பொதுஅறிவுப்புத்தகங்களும், பேனாக்களும் பரிசளித்து வந்தோம்.

Follow FOODNELLAI on Twitter

1 comment:

'பரிவை' சே.குமார் said...


படங்களும் பகிர்வும் அருமை சார்.