இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 16 October, 2021

”சற்றே குறைப்போம் உப்பை, சற்றே குறைப்போம் சர்க்கரையை, சற்றே குறைப்போம் கொழுப்பை”

 


2021ம் ஆண்டின், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் கற்றதை கற்றுத்தரும் மாதங்கள் எனலாம். ”சற்றே குறைப்போம் உப்பை, சற்றே குறைப்போம் சர்க்கரையை, சற்றே குறைப்போம் கொழுப்பை” என்ற மூன்று தாரக மந்திரங்களின் அடிப்படையில், Eat Right Tirunelveli திட்டத்தின் கீழ், பள்ளிகள், கல்லூரிகளில் நலக் கல்வி வழங்குவதில் சென்றது உணவு பாதுகாப்பு துறையின் கவனம்.

செப்டம்பர் முதல் நாளே, சங்கர்நகர், சங்கர் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பயணம், RUCO எனும் உணவகங்களில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்து, அதனை பயோடீசல் தயாரிக்கும் மறுசுழற்சிக்கு திரும்ப வாங்குவது குறித்த சிறு செயல்முறை விளக்கம் தனியார் தொலைக்காட்சிக்கு செப்டம்பர்-7ல், சாலையோர வியாபாரிகளுக்கான பயிற்சி முகாம் செப்டம்பர்-8ல், சாராள்தக்கர் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு உணவு பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கம்-செப்டம்பர்-15ல், பிரியாணி கடைகள் ஆய்வுடன் சுகாதாரமாக நடத்த நலக்கல்வி வழங்குதல் செப்டம்பர்-17ல், மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்பேரில் “EAT RIGHT TIRUNELVELI CLUB" துவக்குவது குறித்து சாரதா கல்லூரி முதல்வருடன், செப்டம்பர்-27ல் கலந்தாய்வு, செப்டம்பர்-30ல், நமது அரசு அருங்காட்சியகத்தில்,மதிப்பிற்குரிய காப்பாட்சியர் Siva Sathiyavalli அவர்கள் தலைமையில், சதக்கத்துல்லா கல்லூரி விலங்கியல்துறை பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு”உலக இதய நாள்” சிறப்பம்சமாக, ”இதயத்திற்கு இதமான உணவுகள்” என்ற தலைப்பில் என்னுரை என இனிதே நிறைவடைந்தது செப்டம்பர்-21.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டதிலுள்ள அனைத்து கல்லூரி தலைமையாசிரியர்கள் மற்றும் நோடல் அலுவலர்களுக்கு, “EAT RIGHT TIRUNELVELI CLUB" துவக்குவது குறித்து ஒரு கலந்துரையாடலும், அன்றிரவே, திருநெல்வேலி புறநகர் சுழற்கழகத்தில், உணவு பாதுகாப்பே உயிர் பாதுகாப்பு என்ற என்னுரை, அக்டோபர்-7ல் சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்டபோது.
அக்டோபர்-11ல், புனித இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரியில் “EAT RIGHT TIRUNELVELI CLUB" துவக்கவிழா Zoom மீட்டிங்கில் இனிதே நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர்-12ல், புனித யோவான் கல்லூரியில், “EAT RIGHT TIRUNELVELI CLUB" துவக்கவிழா இனிதே நடந்தது. ”சற்றே குறைப்போம் உப்பை, சற்றே குறைப்போம் சர்க்கரையை, சற்றே குறைப்போம் கொழுப்பை” என கல்லூரி முதல்வருடன் சேர்ந்து மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். மாணவர்கள் பயன்பெற ஒரு Power point Presentation மற்றும் உணவுப்பொருளில் செய்யப்படும் கலப்படங்களை, நம் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி என்ற செய்முறை விளக்கங்களும் சிறப்பாய் இடம்பெற்றது.இனியும் தொடரும் இப்பணிகள் செவ்வனே இன்னுமுள்ள இந்த மாதத்தின் நாட்களில்.
Follow FOODNELLAI on Twitter

No comments: