
உணவு பாதுகாப்பு
இது நம்ம ஸ்டைலுங்கோ
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.
Saturday, 27 February, 2010
Thursday, 25 February, 2010
விலை கொடுத்து வினையை வாங்குகிறோம்!
பஸ்ஸில் பயணம். பாதி வழியில் பசியின் தாக்கம். பதினைந்து நிமிடம் நிற்கூங்க. சாப்பிடறவங்க சாப்பிடலாம். ஓட்டுனர் விளம்பரம் செய்வார். ஓடிப்போய் சாப்பிட உட்காருவோம் மோட்டலில். சூடிருக்கும். சுவை இருக்காது. சுகாதாரம் சுத்தமாய் இருக்காது. விலை கொடுத்து வினையை வாங்குகிறோம். ஓட்டுனர் -நடத்துனற்கு மட்டும் நல்ல கவனிப்பு தனியே. வண்டியில் ஏறும் மட்டும் பழம், சிகரெட், பாக்கு,அடுத்த நேர உணவு உள்ளிட்ட பார்சல் - பகடைக்காய்களாய்- பலி ஆடுகளாய் நம்மை கொண்டு நிறுத்தியதற்கு! நமக்கோ தவிச்ச வாய்க்கு நல்ல தண்ணீரும் கிடைக்காது.
காசு கொடுக்கலாம். குவாலிடிய எப்ப கொடுப்பீங்க?
பயணிகளை காக்க முதல் முயற்சி எடுத்த கோட்ட மேலாளருக்கு ஷொட்டு . நாமும் கொஞ்சம் கவனமாய் இருப்போம்.

Labels:
பத்திரிக்கை செய்திகள்
Monday, 22 February, 2010
இன்சுவையே எமனாகும்! - மோனோசோடியம் குளுடாமேட்.(MSG)
இது ஒரு மீள் பதிவு. ஓராண்டிற்கு முன், எனது வலைப்பூவில் வந்தது. மீண்டும் உங்கள் பார்வைக்காக:
இனிய மாலைப்பொழுது. இணைந்து குடும்பத்துடன் செல்லும்இடம்-துரித உணவகம். சூடாய் சூப் வகைகள். அறுசுவை உணவு. அத்தனையும்அருமை.
எப்படிக் கிடைக்கிறது இந்த சுவை. பார்த்துப்பார்த்து பாட்டிசமைத்ததில் இல்லா சுவை இதில் எப்படி - சிந்தித்ததுண்டா? மொத்தத்தில், மோனோசோடியம் குளுடாமேட். செய்யும் மோ(ச)டிவித்தைதான் அது.
மோனோசோடியம் குளுடாமேட் ஒரு சுவை கூட்டி. 1909ல்தொடங்கியது இதன் அறிமுகம். அறிமுகமான நாள் முதல் அதைவெல்லஆளே இல்லை - மார்கட்டில்.அறிமுகம் ஜப்பானில். அகில உலக சாப்பாட்டுப்பிரியர்களும் அடிமை இதற்கு. முதலில் கோதுமையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது குளுடாமிக் அமிலம். அதைத்தான் முதலில் ஜப்பானில் சூப்களில் சுவை கூட்ட பயன்படுத்தினார்கள்.
அமொரிக்காவில், "பொதுவாக பாதுகாப்பான பொருள் பட்டியலில்" உப்பு, மிளகு, வினிகர் ஆகியவற்றுடன் மோனோசோடியம் குளுடாமேட்டும் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனிலும் மோனோசோடியம் குளுடாமேட்பாதுகாப்பான உணவுப்பட்டியலில் வருகிறது.
1968ல்தான் மோனோசோடியம் குளுடாமேட்டின் முகத்திரை கிழிந்தது. சீனஉணவகம் ஒன்றில் உணவருந்திய சிலர் வயிற்றில் எரிச்சல், உடலில்மதமதப்பு, உடலின் மேல் பகுதியில் இறுக்கம் ஆகிய உபாதைகளைஉணர்ந்தனர். “சீன உணவக உபாதை” என அதற்கு நாமகரணம் சூட்டப்பட்டது. சீன உணவக உபாதைக்கு மோனோசோடியம் குளுடாமேட்டே காரணம் எனமுடிவு கட்டப்பட்டது. ஆயினும் அதை நிரூபிக்க முடியவில்லை.
ரசல் பிளேலாக் எழுதிய புத்தகமொன்றில், மோனோசோடியம் குளுடாமேட்நியூரான்களை(மூளைத்திசுக்களை)த் தூண்டி சுவையை அதிக அளவில்உணரச்செய்கிறது. ஆனால், அதே மோனோசோடியம் குளுடாமேட்மூளைத்திசுக்கள் இறக்கவும், அல்சிமீர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் நோய்களை அதிகப்படுத்தவும் காரணமாகலாமென எச்சரித்துள்ளார்.
மோனோசோடியம் குளுடாமேட் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருள் பொட்டலங்கள் மீது, “இந்த உணவுப்பொருளில் மோனோசோடியம்குளுடாமேட் பயன்படுத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட வேண்டும். அதேபோல், “மோனோசோடியம் குளுடாமேட்ஒரு வயதிற்குட்பட்டகுழந்தைகுளுக்கு ஏற்றதல்ல” எனவும் குறிப்பிடுவது நம் நாட்டில்கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும்,எச்சரிக்கையாய் இருங்கள். மோனோசோடியம் குளுடாமேட் இருப்பதை “இயற்கை சுவைகூட்டி” என்றும்குறிப்பிட்டிருப்பர். ஏமாந்து விடாதீர்.
உணவை எப்போதும் அதன் இயற்கை வடிவிலே உண்பதுதான் சாலச்சிறந்தது. நம் உடலும் இயற்கை உணவை ஏற்பதுபோல், செயற்கை உணவைஏற்பதில்லை. மோனோசோடியம் குளுடாமேட் சேர்க்கப்பட்ட உணவின்மற்றொரு ஆபத்து- சுவைகூட்டிகள் நாம் உண்ணும் உணவின் அளவைஅதிகரித்து உடல் எடையைக் கூட்டும் - கவனம். எனவே, மோனோசோடியம்குளுடாமேட் போன்ற சுவைகூட்டிகளை ஒதுக்கி வைப்பதே உடலுக்குஉகந்தது.
"மோனோசோடியம் குளுடாமேட்" என்பது இன்று மார்கெட்டில் பிரபலமாக (சிவந்த நிற சிறிய பாத்திர முத்திரையுடன்) விற்கப்படும் ஒரு பொருள். கவனமா இருங்க!
டிஸ்கி-1 : என்னப்பா, மீள்பதிவு வருது.
டிஸ்கி-1 : என்னப்பா, மீள்பதிவு வருது.
டிஸ்கி-2 : தேர்தல் நேரம், தேர்தல் பணி போட்டாச்சு , தேர்தல் முடியும் வரை இப்படி, அப்படி மீள் பதிவு கைகொடுக்கும்!

Labels:
கட்டுரைகள்
Sunday, 21 February, 2010
டீ குடிக்க போறிங்களா?
களைப்பாய் வருகிறது. கண்களில் படுகிறது டீக்கடை. சூடாய் ஒரு டீ. சுறுசுறுப்பு உடலில். சுரீர் என்றொரு வலி வயிற்றில். அத்தனைக்கும் காரணம் கலப்பட தேயிலைதான். மனிதன் மனசாட்சியே இல்லாமல் செய்யும் கலப்படங்கள் கோடி கோடி.
காலையில் எழுந்ததும் டீ அருந்துபவரா நீங்கள். இதோ டீயில் செய்யப்படும் கலப்படங்கள்:
- ஏற்கனவே பயன்படுத்திய தேயிலை சக்கையில் செயற்கை வண்ணங்கள் ஏற்றி புத்தம் புது டீயாக பவனி வரவான ஒரு வகை.
- ஸ்ட்ராங் டீ கேட்பவர்க்கு இது : ஆட்டு சாணத்திலிருந்து நிறத்தை பிரித்தெடுத்து சக்கை தேயிலையில் நிறம் ஏற்றுவது மற்றொரு வகை.
நினைவிருக்கட்டும் . இவையெல்லாம் புற்று நோய் உருவாக்கும் வயிற்றில்.
வாங்க டீ சாப்பிட போகலாமா?
எப்படி கண்டுபிடிப்பது?
மை உறிஞ்சும் தாளில் சிறிது தேயிலையை வைத்து அதன் மீது சில துளி தண்ணீர் விட்டால், நல்ல தேயிலையின் ரெங் மிக மெதுவாக தாளில் பரவும். கலப்பட தேயிலையின் ரெங் தாறுமாறாய் ஓடும்.இது ஈசியான வழிங்க.
என்ன பேப்பரும் கையுமா கிளம்பிட்டிங்களா?
நாங்கள் மட்டும் பார்த்தல் போதாது நீங்களும் விழிப்புடன் இருங்கள்.

Labels:
பத்திரிக்கை செய்திகள்
உணவகங்களில் உண்ணும் உணவு பாதுகாப்பானதா?
வாழ்க்கையே ஓட்டத்தில்! ஓடும் நேரத்தில், உண்ணும் உணவை , நம் உடலும் ஏற்குமோ! நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் பல மைல்கள்.

Labels:
பத்திரிக்கை செய்திகள்
Monday, 15 February, 2010
Tuesday, 9 February, 2010
Thursday, 4 February, 2010
Subscribe to:
Posts (Atom)