இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 28 October 2011

காந்தி ஜெயந்தியில் கன்னியாகுமரியில் கண்ட ஒளி.

கடல்வழிப்பயணத்தினை முடித்துக்கொண்டு,முற்பகல் 11.30 மணியளவில், காந்தி மண்டபத்தை வந்தடைந்தோம். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா ஏற்பாடுகள் விமரிசையாக செய்யப்பட்டிருந்தன.
Follow FOODNELLAI on Twitter

Friday 21 October 2011

முதுமையை மதிப்போம்- மருமகனே மகனான்.

டிஸ்கி: இது கடந்த வருடம், எனது மும்பை பயணத்தின்போது ஏற்பட்ட அனுபவம். மீள் பதிவு. தேர்தல் பணி-செல்கிறேன்.


                            பத்து நாட்களுக்கு முன் பம்பாய் போனேன். என்னுடன் எனது மூத்த சகோதரரும் வந்திருந்தார். இளைய சகோதரரின் மகளுக்கு வளைகாப்பு. நாகர்கோவிலிலிருந்து வந்த ரயிலில் நெல்லையில் ஏறியதும், எடுத்துச் சென்ற உடமைகளை சீட்டிற்கு அடியில், அடுக்கி வைத்து நிமிர்ந்தால்,   எதிர்த்த  சீட்டில் பல்லுப்போன பாட்டியொன்று பாங்காய் அமர்ந்திருந்தாள். அவருக்கருகில் நாற்பதுகளில் ஒரு நளின சகோதாரி. அத்தனை நளினமாய், பாட்டியின் கேள்விகளுக்கு பதில் கூறி வந்தார். இருவரும் பேசுகையில் தெரிந்து  கொண்டோம், இவருக்கவர் உறவில்லையென்பதை.
                                  நெல்லையின் எல்லைகூட தாண்டவில்லை. எங்களுக்குப் பின்பக்க இருக்கையிலிருந்து சுடச்சுட காபி வந்தது. எடுத்து வந்து தந்தது பாட்டியின் மைந்தனாயிருக்க வேண்டும். அறுபதில் ஐந்தைத் தொலைத்திருந்தார் யோசனையுடன் வாங்கி அருந்திய பாட்டியிடம் சந்தோசமில்லை! இரண்டு மணிக்கொரு முறை, இன்முகத்துடன் ஏதேனும் ஒன்றை பாட்டியிடம் கொடுப்பதும், அதை பாட்டி பாதி மனதுடன் வாங்கி உண்பதுமாய்ப் போய்க்கொண்டிருந்த பயணத்தில், பாட்டி ஏதோ முனுமுனுப்பது மட்டும் காதில் விழுந்தது.
                           பிற்பகல் வந்தது. பாட்டிக்கு பாங்காய் உணவும் வந்தது. வந்து கொடுத்ததும் அவர்தான். இப்படியோர்  மகனைப் பெற்றெடுக்க, எத்தனை ஆண்டுகள் தவமிருந்தீர்? மெல்லக் கொக்கியிட்டது என் கேள்வி!
                                பாட்டியின் முகத்தில் பல்லாயிரம் பாவங்கள். இவரு எம்மருமகன். எம்மகா, அடுத்த பக்கமிருக்கா. அங்கிருந்துதான் எல்லாம் வருது. ஆனா! அவ வந்து, முகம் குடுத்து என்ட பேசமாட்டா. பணத்திமிர்  . . . . .  என்று இன்னும் பல. வந்து விழுந்த வார்த்தைகளின் வேகத்திற்கு, வறண்டுவிட்டது என் நாக்கு. அத்தனையும் சோகம்.
                            அடுத்த நாளும் வந்தது. அத்தனை முறையும் உணவும் வந்தது. ஆனால், பாட்டியின் மகள் மட்டும் வந்து எட்டிப்பார்க்கக் கூட இல்லை. பாட்டியின் முனகலும் நிற்கவில்லை.
                              பாட்டி! பாசமில்லாமலா பாங்காய் உணவு வருது என்று சொன்ன  எங்கள்  வார்த்தைகள் எதுவும் எடுபடவில்லை. பாவம், பாசத்திற்கு ஏங்கும் பாட்டி.
                         என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும், மகள் வந்து ஒரு முறையேனும் அந்தத் தாயிடம் பேசியிருக்கலாம். பேசாததால், மருமகனே, அத்தாய்க்கு மகனானான்.
                          பாட்டி இறங்குமிடத்திற்கு முந்திய ரயில் நிலையத்தில், அருகிலிருந்த அந்த நளின சகோதரி  இறங்கும்போது அவரை ஆசிர்வதித்து அனுப்பவும் அந்த பாட்டி மறக்கவில்லை.
                                எத்தனைதான் வீட்டில் மனக்குறைகள் இருந்தாலும், ரயிலில் ஏறும் முன், அதை மூட்டை கட்டியிருக்க வேண்டும். அத்தனைபேர்  மத்தியிலும், அதை காட்டியிருக்கக் கூடாது.
                                   எத்தனை நாள் சுமந்து பெற்றாளோ!  என்றென்றும் முதுமையைப் போற்றுவோம்.
                                   மும்பையில், ரயிலிலிருந்து இறங்கும்வரை, என் சோகம் மட்டும் மாறவில்லை. இன்றைக்கும் என் மனதில் பாட்டியின் முகம் மட்டும் அழியவில்லை.
Follow FOODNELLAI on Twitter

Monday 17 October 2011

விவேகானந்தா கேந்திரத்தில் ஒரு நாள்.
விவேகானந்தர் கேந்திரத்திலுள்ள விவேகானந்தர் சிலை.

               முதல் பகுதி: வார இறுதியில் ஒரு டே-அவுட்.
                            முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில்,கடல் நடுவிலிருந்த பாறை மீது, சுவாமி விவேகானந்தர் 1892ல், டிசம்பர்-25,26&27 தேதிகளில், தியானத்தில் இருந்துள்ளார்.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 11 October 2011

வார இறுதியில் ஒரு டே-அவுட்.

                                           வாரம் முழுவதும் வேலை. வார இறுதியில் ஒரு டே- அவுட்.  அதிக வேலைப்பளு, உடலையும் , மனதையும் ஒரு சேர களைக்க வைத்த சனிக்கிழமை(01.10.11) மாலை. சட்டென்று எடுத்த முடிவில், திட்டமிடாப் பயணமாய் குடும்பத்துடன் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டேன்.(பதிவர் விஜயன் மன்னிப்பாராக-இது திடீர் பயணமென்பதால், சொல்லவும்,சந்திக்கவும் இயவில்லை
Follow FOODNELLAI on Twitter

Friday 7 October 2011

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடலாம் வாங்க

என்ன ஓட்டு போடலாமா?
எங்க போறம்? ஓட்டு சாவடிக்கு.
என்னெல்லாம் இருக்கும்? யாரெல்லாம் இருப்பாங்க?
Follow FOODNELLAI on Twitter

Tuesday 4 October 2011

பதிவர்களின் பரிணாம வளர்ச்சி-சண்டையிலா?சேவையிலா?

                                   பதிவுலகம் போகும் பாதை சரிதானா?
        நாளொரு சண்டையும், பொழுதொரு பிரச்சனையும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. நம் பதிவுலகிலும், உள்குத்துப்பதிவு, ஆபாசப் பதிவு,ஒருவருக்கு- அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறேன் என்று சொல்லி ஓராயிரம் மெயில்கள், மாற்றுக்கருத்து பதிவு செய்தால், ஒடுக்கப்பார்ப்பது, ஒத்து வரவில்லையென்றால், வலைப்பூவை ஹாக் செய்வது
Follow FOODNELLAI on Twitter