’அட்ரா சக்கை’ அதிபனே,
அட்டகாச சைட்களின் அரசனே!
’எட்றா அந்த அருவாளை’
என்ற மனோவின் நேசனே!
லட்டு ஃபிகர்களைப் போட்டு, மிக
லட்சணமாய்ப் பதிவுகளைப் போட்டு
எட்டுத் திக்கும் புகழ் பெற்றாய்,
எட்டாத ‘கனி’க்கெல்லாம் ஆசைப்பட்டாய்!
திருப்பதி உண்டியல் நோட்டுக்கள் போல்
தினம் உன் பதிவிலே ஓட்டுக்கள்,எனினும்,
திருப்தி இன்றி தினம் மூன்று பதிவிட்டாய்!
தி(க)ட்டத் தி(க)ட்ட, பதிவர் சந்திப்பில் பேசிவிட்டாய்!
இண்ட்லி, தமிழ்-10 , தலை மறைவான தமிழ்மணத்திலும்
இருக்கின்ற போட்டிகளுக்கு நடுவில்
அலெக்ஸா ரேங்கிங் எனக்கு ஆசையென்று
அல்லும் பகலும் அரும்பாடு படுவாய்
கண்ணாடி அணிந்த உன் முகம்
கள்ளத்தனம் மறைக்கவோ! இல்லை
கண்களைப் பார்த்தே கள்வனை அறியும்
பெண்களைத் தவிர்க்கவோ!
’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!
உற்ற நண்பர் குழாம் உனக்கதிகம்!
உரலுக்கு ஒரு புறமென்றால்,
உடுக்கைக்கு இருபுறமும் அடி,
உனக்கோ செல்லும் இடமெல்லாம் அடி!
உதறித்தள்ளிவிட்டு ஃபீனிக்ஸ் பறவையாய்
எழுந்து நின்றாய், என்றும் ஜெயித்து நிற்பாய்

பெண்கள் படமென்றால் பேயாய் அலைந்தாய்
பேசும்போதோ பெண்கள் என் தெய்வம் என்பாய்!
திருந்த மனமின்றி, பதிவர் சந்திப்பில், பல
திட்டுக்கள் பெற்றாய், இருந்தும்
மலர்ந்த உன் முகம் கண்டு பதிவுலகம் உன்
மனதைப் படித்தது, மலரைச் சொரிந்தது!
கணக்குப் பாடம் படித்ததாலோ, பல மனங்களைக்
கணக்குப் பண்ணக் கற்றுக்கொண்டாய்.
’விருந்தாளி’யில் தொடங்கியது உன் விறுவிறு விமரிசங்கள்,
சினிப்பிரியன் என்றொரு தளம், சினிமாவின் மீதொரு கரிசனம்.
தொடங்கிய ஆண்டில், பதிவுகள், இருநூறைத் தொட்டன
தொடர்ந்த ஆண்டில் நானூறைத் தாண்டி விட்டன!
தலைப்பு வைப்பதில் தன்னிகரில்லாத் தலைவன்,
தனித்தே ரசிப்பது, வெள்ளிகிழமை விடிகாலைப் படங்கள்!
நினைவாற்றலில் நீ தனித்து நின்றாய்,
நிச்சயம் நீ ஜெயித்திடுவாய்!
இரண்டாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்தாய்,
இனியெல்லாம் உனக்கு ஏற்றம், இனியவனே!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
இனிதே வந்து நீங்களும் வாழ்த்துங்கள்.