கடந்த வாரம், வலையுலக நண்பர் ”துபாய் ராஜா”, தன் சொந்த மண்ணில், சொர்க்கத்தின் திறப்பு விழா ஒன்று நடத்தினார். தற்போது அவர் சிங்கப்பூரில், மின் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். சொந்த மண்ணில் (நெல்லைக்கு அருகில் விக்கிரமசிங்கபுரம்)வீடு கட்டி, நடத்திய கிரஹப்பிரவேசத்திற்கு, பதிவுலக சொந்தங்கள் அனைவரையும் அவர் ராஜசபையில் அழைத்திருந்தார்.
யானைக்குட்டி,கருவாலி,அஞ்சாநெஞ்சன் |
அன்றுதான், நான் மாநகராட்சிப்பணியிலிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டு, உணவுப்பாதுகாப்பு துறையில், உணவு பாதுகாப்பு அலுவலராகச் பொறுப்பெடுத்துக்கொண்ட நாளென்பதால், நான், சகோதரிகள் கௌசல்யா மற்றும் ரூஃபினா ஆகியோருடன் சென்று நிகழ்வில் கலந்து கொள்ள போட்ட பிளான் டமால்.
நண்பர் காளிமுத்து,கருவாலி,வெடிவால்,அஞ்சாநெஞ்சன்,உணவு உலகம் |
யானைக்குட்டி ஞானேந்திரனிடம் சொன்னதுதான் தாமதம், அனைவர் பதிவிலும் சென்று, பதிவர் சந்திப்பிற்கு பல விளம்பரம் போட்டுவிட்டார். குழந்தை மனசு அவருக்கு,கடைசியில் இருக்கு பாருங்க,அவர் படம்.
நண்பர் காளிமுத்து,கருவாலி,வெடிவால்,அஞ்சாநெஞ்சன்,மிரட்டும்- மனதோடு மட்டும்,உணவு உலகம்
மினி பதிவர் சந்திப்பு, மாலை 5 மணிக்கெல்லாம் தொடங்கியது. அனைவருக்கும் அலைபேசியில்தான் அழைப்பு சென்றது. முதுபெரும் பதிவர் வடிவேல் சார் வந்து கலந்து கொண்டது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ராஜா தன் துணையோடு வந்து கலந்து கொண்டார். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், பதிவுலகம் சார்ந்த விவாதங்கள் தொடர்ந்தன. கருவாலி ராமலிங்கம், தன் கடமையை முடித்துவிட்டு, கடைசியில் வந்து கலந்து கொண்டார். பதிவர்கள் தம் வலைப்பூவிற்கு பெயர் வைத்த காரணங்கள் பகிர்ந்து கொண்டனர். அதன் விபரங்கள் பார்க்க: நெல்லையில் ஒரு மினி பதிவர் சந்திப்பு.
|
ஆமா, யானைக்குட்டியேதான், ஆனா மேல உள்ள படத்தைப்போல மனசு. |
சுவாமி திவானந்தாவைப் பற்றி தெரியாத நெல்லைப்பதிவர்கள் நம் வட்டத்தில் இருக்க முடியாது. முதல் பதிவர் சந்திப்பிற்கு, திரைக்குப் பின்னால் நின்று தோள் கொடுத்தவர். அடுத்தடுத்த மினி பதிவர் சந்திப்பிற்கெல்லாம் அடைக்கலம்- அவரது ஜன்னத் ஹோட்டல்தான். என் இனிய நண்பர். பல சமூக சேவைகளைச் சத்தம் இன்றி செய்து வருபவர். அவர் வந்து அமர்ந்தவுடன், அனைவர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தெரியும். அந்தளவிற்கு, சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர். அவரும் அன்று, பிஸினஸில் பிஸியாக இருந்ததால்,லேட்டாக வந்து அமர்ந்தார்.
செவ்வாயன்று, மும்பை சென்ற அஞ்சாநெஞ்சன் ஜோதிராஜ்-கௌசல்யா தம்பதியினர், அவர்கள் சென்ற வேலையை முடித்துவிட்டு, இந்த மினி பதிவர் சந்திப்பிற்காக, ப்ளைட் பிடித்து அவசர அவசரமாக நெல்லை திரும்பினர். அஞ்சாநெஞ்சனுக்கு மட்டும் சற்றே ஆதங்கம். 'மனதோடு மட்டும்' கௌசல்யாவிற்கு வந்த அழைப்பு, தமக்கு வரவில்லையே என்று! நாங்கள் இருவரையும் ஒருவராகப் பார்ப்பதால், ஒரு அழைப்பு செய்தி வந்துள்ளது என்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து அமரவைத்தோம்.
செவ்வாயன்று, மும்பை சென்ற அஞ்சாநெஞ்சன் ஜோதிராஜ்-கௌசல்யா தம்பதியினர், அவர்கள் சென்ற வேலையை முடித்துவிட்டு, இந்த மினி பதிவர் சந்திப்பிற்காக, ப்ளைட் பிடித்து அவசர அவசரமாக நெல்லை திரும்பினர். அஞ்சாநெஞ்சனுக்கு மட்டும் சற்றே ஆதங்கம். 'மனதோடு மட்டும்' கௌசல்யாவிற்கு வந்த அழைப்பு, தமக்கு வரவில்லையே என்று! நாங்கள் இருவரையும் ஒருவராகப் பார்ப்பதால், ஒரு அழைப்பு செய்தி வந்துள்ளது என்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து அமரவைத்தோம்.
ராஜாவின் துணைவியாரின் பொறுமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், பதிவுலகம் பற்றி சற்றும் அறியாத வீட்டுத்தலைவி அவர். எனினும் தன் துணைவருக்காக, புன்னகையுடன்,அத்தனை விவாதங்களையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
என் நண்பர் காளிமுத்து எப்போதும்போல், ஜன்னத் ஹோட்டலில் என்னைப்பார்க்க வந்து, நடக்கும் கூட்டம் பற்றி புரியாமல், சிறிது நேரம் அமர்ந்து சென்றார்.
இனிய சந்திப்பு, எண்ணங்களின் பரிமாற்றம், உள்ளங்களில் உவகை பூத்திட, மீண்டும் ஒரு இனிய வேளையில், இனியும் சந்திப்போமென்று முடிந்தது, அன்றைய சந்திப்பு.
அப்புறம் அந்த முதல் படம், அடுத்த நெல்லை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் சகோதரிகளுக்கெல்லாம்,அடுத்த வாரம் அயல்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் கௌசல்யா -ஜோதிராஜ் தம்பதியினர்,அன்பளிப்பாகக் கொடுப்பதாக சொல்லியிருக்கும் ’மினி’ மணி பர்ஸ். WISH YOU HAPPY JOURNEY.
இனிய சந்திப்பு, எண்ணங்களின் பரிமாற்றம், உள்ளங்களில் உவகை பூத்திட, மீண்டும் ஒரு இனிய வேளையில், இனியும் சந்திப்போமென்று முடிந்தது, அன்றைய சந்திப்பு.
அப்புறம் அந்த முதல் படம், அடுத்த நெல்லை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் சகோதரிகளுக்கெல்லாம்,அடுத்த வாரம் அயல்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் கௌசல்யா -ஜோதிராஜ் தம்பதியினர்,அன்பளிப்பாகக் கொடுப்பதாக சொல்லியிருக்கும் ’மினி’ மணி பர்ஸ். WISH YOU HAPPY JOURNEY.
46 comments:
யானைக்குட்டி மேக்கி நூடுல்ஸ் சாப்பிடும் குழந்தையா? அப்ப ரொம்ப நல்லவர். ஜன்னத் ஹோட்டலுக்கு பில் கட்டிய உணவு ஆபீசர் வாழ்க. உங்க ஊருக்கு வந்தா எங்களுக்கு சாப்பாடு இலவசம் தானே?
'மனதோடு மட்டும்' மேடம் கோபமா போஸ் தர்றாங்க. ஒரு வேலை அவங்கதான் பில் கட்டுனாங்களா?
மினிபர்ஸ் பரிசா? அதற்குள் 1000 ரூவா கட்டுகளை வைத்து பரிசு தரப்போவதாக இன்று காலை உறுதி அளித்து இருக்கும் கௌசல்யா அக்கா புகழ் ஓங்குக!!
அடுத்தவாட்டி என்னையும் சேர்த்துகுங்க ஐயா!!
படங்களும் பதிவும் மிக மிக அருமை
அப்படியே நேரமிருப்பின் பதிவர்கள்கள்
ஸ்னதிப்பின் போது தெரிவித்த கருத்துக்களைச்
சுருக்கமாக பதிவிட்டால் இன்னும் சிறப்பாக
இருக்கும் என நினைக்கிறேன்
வாழ்த்துக்களுடன்....
சொர்க்கத்தின் திறப்பு விழவாக அருமையான சந்திப்பு.
குழந்தைகள் தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்..
எனக்கு தகவலே சொல்லலை, ஆஃபீசர் கா உங்களோட..
>>அயல்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் கௌசல்யா -ஜோதிராஜ் தம்பதியினர்,அன்பளிப்பாகக் கொடுப்பதாக சொல்லியிருக்கும் ’மினி’ மணி பர்ஸ். WISH YOU HAPPY JOURNEY.
என்னது கவுசலயாஅக்கா ஃபாரீன் டூர் போறாங்களா? 20 பதிவு தேத்திடுவாங்களே./. அவ்வ்வ்வ்வ்
naanum varen..
//சங்கர் நாராயண் @ Cable Sankar said...
naanum varen..//
இதோ..இன்னொரு குழந்தை மனம் கொண்ட பதிவர். நெல்லையில் 'மழலைப்பதிவர்கள்' சந்திப்பு வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Missed being there.....
Keep meeting!!!
இனிய சந்திப்பு.. 'மணி'யோட கூடிய பர்சுதானே கவுசல்யா அக்கா கொடுக்கப் போறாங்க?? :-))
me also missing.
வாழ்த்துக்கள் சார் ரொம்ப சந்தோசமா இருக்கு.. அயல்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் கௌசல்யா -ஜோதிராஜ் தம்பதியினருக்கு எங்கள் சார்பிலும் வாழ்த்துகளை சொல்லிடுங்க
சூப்பர்.
ஆமா அப்பா அந்த மணி பர்ஸ் மட்டும் அக்கா தராங்களா? இல்ல அதுல ஒரு ஆயிரம் ஐநூறு வச்சு தராங்களா? ஹி ஹி ஹி
அருமையான சந்திப்பு.அன்றுதான் முதல்முறை சந்தித்தாலும் பலநாள் பிரிந்த உறவுகளை சந்தித்தது போன்ற உணர்வு. இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.
சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பல துறைகளில் பிரகாசிப்பவர்கள் என்றாலும் நேரம் ஒதுக்கி சந்திப்பிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.
பகிர்விற்கு நன்றி சித்தப்பா சார்.
மினி மணி பர்ஸ் சகோதரிகளுக்கு மட்டுமா, அப்போ சகோதரர்களுக்கு ஒன்னுமே கிடையாதா கொஞ்சம் பணமாவது குடுக்கலாம் இல்லையா ஹி ஹி...
அடிக்கடி பதிவர் சந்திப்பு வைத்து கலக்கிறீங்க..
அனைவருக்கும் வாழ்த்துக்கள...
சி.பி.செந்தில்குமார் said...
எனக்கு தகவலே சொல்லலை, ஆஃபீசர் கா உங்களோட..//
எலேய் உனக்கு கில்மா படம் பார்க்கவே நேரம் பத்தாதே...?
சி.பி.செந்தில்குமார் said...
>>அயல்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் கௌசல்யா -ஜோதிராஜ் தம்பதியினர்,அன்பளிப்பாகக் கொடுப்பதாக சொல்லியிருக்கும் ’மினி’ மணி பர்ஸ். WISH YOU HAPPY JOURNEY.
என்னது கவுசலயாஅக்கா ஃபாரீன் டூர் போறாங்களா? 20 பதிவு தேத்திடுவாங்களே./. அவ்வ்வ்வ்வ்//
ஹா ஹா ஹா ஹா நல்லதுதானே அவங்க சுற்றுலா போனால் நமக்கும் பதிவில் அநேக தகவல்கள் கிட்டுமே...!!!
பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள் எல்லாருக்கும்...
பதிவும் படங்களும் மிக அருமை.
சுவாமி திவானந்தாவைப் பற்றி தெரியாத நெல்லைப்பதிவர்கள் நம் வட்டத்தில் இருக்க முடியாது. முதல் பதிவர் சந்திப்பிற்கு, திரைக்குப் பின்னால் நின்று தோள் கொடுத்தவர். அடுத்தடுத்த மினி பதிவர் சந்திப்பிற்கெல்லாம் அடைக்கலம்- அவரது ஜன்னத் ஹோட்டல்தான். என் இனிய நண்பர். பல சமூக சேவைகளைச் சத்தம் இன்றி செய்து வருபவர். அவர் வந்து அமர்ந்தவுடன், அனைவர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தெரியும். அந்தளவிற்கு, சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்//
உண்மையிலேயே திவான் அவர்கள் பதிவர் ஆகிவிட்டால் அவர் மிகவு பிரபலம் ஆகிவிடுவார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஒரு விஷயத்தை அவர் produce பண்ற விதம் மிகவும் நகைச்சுவையான மற்றும் வித்தியாசமான கோணத்தில் அனைவரிடமிருந்து மாறுப்பட்டு இருக்கிறது. விரைவில் அவரும் பதிவர் ஆக வாழ்த்துக்கள்.மேலும் ஒவ்வொரு பதிவர் சந்திப்பையும் மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய பிசியான அலுவலுக்கிடையில் இன்முகத்துடன் நடத்தும் ஆபீசர் சங்கரலிங்கம் அவர்கள் அர்பணிப்பு உணர்வு மிகவும் பாரட்ட மதித்துப்போற்றத்தக்கது. இவர்கள் இருவரையும் வளமுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
வாழ்த்த வயதில்லை எனினும்
இதுபோல ஆக்க பூர்வ பணிகளை
மேற்கொண்டு வரும்
ஆபிசர் அண்ணாவுக்கும்
அனைவருக்கும்
அன்பான வாழ்த்துக்கள்
வணக்கங்கள்
உங்க ஊர்ல மட்டும்தான் பதிவர் சந்திப்பு அடிக்கடி நடக்குது.வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பாஸ்! :-)
ஆஃபீசர் பதிவர் சந்திப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆயிடுவார் போலிருக்கே..
மன்னிக்கவும் மிகவும் தாமதமான ,
அன்பு கலந்த நெகிழ்வான
பணிவான வணக்கம் .
மதுரை(தாய் வீடு ) வரை சென்று வந்தேன்.
அதான் தாமதம் .
என்ன சார் ....!!! இப்படி...கலக்கல் .
என்னை பற்றி ....என் புகைப்படம்
பற்றி ..தங்களின் வார்த்தைகள் ...
என்ன சொல்ல .....
என் இதயம் நெகிந்த ..நெஞ்சம் மகிழ்ந்த ..
நன்றிகள் ..
கருத்துக்கள் சொன்ன அன்பு உள்ளங்கள்க்கும்
நன்றிகள் ..
பதிவு உலகில் அதன் நட்பை பாராட்டி..
சீராட்டி. ஒரு உன்னத குடும்ப உணர்வினை
வளர்க்கும் .தங்களின் மேலான நேரங்களையும்
உழைப்பையும் கொடுத்து ...எங்களை பெருமை படுத்தும்
திரு சங்கரலிங்கம் சார் வாழ்க பல்லாண்டு !பல்லாண்டு !
பதிவு உலகில் அதன் நட்பை பாராட்டி..
சீராட்டி. ஒரு உன்னத குடும்ப உணர்வினை
வளர்க்கும் .தங்களின் மேலான நேரங்களையும்
உழைப்பையும் கொடுத்து ...எங்களை பெருமை படுத்தும்
திரு சங்கரலிங்கம் சார் வாழ்க பல்லாண்டு !பல்லாண்டு !
இந்த மினி பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
துபாய் ராஜா ப்ளாக் ஆரம்பிச்சது 2005 இல் என்று சொன்னார். ரொம்ப அமைதியாக,ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கிறார். அவரது துணைவியாரும் அப்படியே. சந்திப்பு தொடங்கும் போது கூட்டம் இல்லாமல் இருக்கிறதே என்று நினைத்தேன் முடியுமுன் அழைத்தவர் அத்தனை பெரும் ஆஜர். அது தான் அன்பின் அடையாளம்
தொடர்ந்து கலக்குறீங்க!
சுவாரஸ்யமான பகிர்வு
உறவுகள் மலர
உன்னத வழி
வாழ்த்துக்கள்
இனி தமிழ்நாட்ல எங்க பதிவர் சந்திப்புன்னாலும் எல்லாரும் நெல்லை போய்டலாம் போல...... வாழ்த்துக்கள் ஆபீசர்......!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
வணக்கம் ஆப்பிசர், சுவாரஸ்யமான சந்திப்பு பற்றி சுவையாக எழுதியிருக்கிறீங்க.
படங்களும் நையாண்டி கலஎத வர்ணனைகளும் அருமை.
பகிர்வுக்கு நன்றி.ஜன்னத் ஹோட்டல் என்று சொல்லி சொல்லி அதன் சுவையை தேட வைத்து விட்டீர்கள்.ஜன்னத் ஹோட்டல் வந்து பலவருடமாகிறது.
அண்ணே அனைவருக்கும் வாழ்த்துக்கள்....உங்க பதிவு எனக்கு டேஷ்போடுல வரல...அதான் லேட்!
அருமையான சந்திப்பு .இவர்தான் ஆனைக் குட்டியா!...
வாழ்த்துக்கள் எல்லோருக்கும் அடுத்து அடுத்து இதுபோன்ற வாய்ப்புக்கள்
தொடர .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ......
அடுத்த ஆக்கத்தைக் காணவில்லையே ...! நலந்தான சகோ ?.....
present sir!
http://en.wikipedia.org/wiki/Maida_flour#cite_note-6
dear sir,
what is the truth about maida flour production.
regards
HB
மினி பதிவர் சந்திப்பு என்றாலும் எல்லோர் மனதும் நிறைய வைத்திருக்கிறது என்பது படங்கள் படம் போட்டுக் காட்டுகிறது சகோதரம்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution
வணக்கம் துபாய் ராஜா , தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக அறிகிறேன் , நானும் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவன் , தற்போது துபாயில் பணி . மேலும் விபரங்கள் பகிர்ந்து கொள்வோம் .தொடர்பு கொள்க.
--
Post a Comment