பள்ளிப்படிப்பை முடித்து பல காலம் ஆன பின்பும், துள்ளிக் குதித்த நண்பர்களுடன் தொடர்ந்து நட்பிலிருப்பது வரமென்பேன். ஆம், அப்படித்தான் எங்கள் நட்பு நாளும் தொடர்கின்றது.
நேற்று காலை, நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின்னர், சுழற்கழக செயலர் திரு.பாலசுப்ரமணியன் சாரிடமிருந்து ஓர் அழைப்பு. எடுத்தவுடன், வணக்கம் பாலு சார் என்றேன். அவர்கள், நான் ரோட்டேரியன் பாலு பேசுறேன்னு சொன்னார்கள். வருடங்கள் பல ஆனாலும் இன்னும் அவர் எண் என் செல்லில் இருக்கிறது, அதனால்தான் வணக்கம் என்று உங்கள் பெயர் இணைத்துச்சொன்னேன் என்றேன். ஞாயிறன்று திருநெல்வேலி மத்திய சுழற்கழகத்தின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, “உணவு பாதுகாப்பு” குறித்து உரையாற்ற வேண்டுமென்றார்.
”உணவுப்பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு” என்ற எங்கள் துறையின் தாரக மந்திரத்தை கல்வி கற்பிக்கும் கல்லூரிகளுக்கே சென்று, ஒவ்வொரு தலைப்பில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர் உரையாற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பணி, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களில், கடைபிடிக்க வேண்டிய தர அளவீடு குறித்த வரைவு விதிமுறைகளை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டு உள்ளது.