இன்றெல்லாம் கடைக்குப் போனால், எல்லாமே ரெடிமேட்தான். ”ரெடி டூ ஈட்” வகை உணவுகள், நம்ம வீட்டு மஹாலக்ஷ்மிகளை, நச்சென்று கவர்ந்துவிடும். நம் முன்னோர்கள், வீட்டு வேலைகளுக்குக்கூட, பெண்களுக்கு உடல் வலுவேற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்,அதற்கான உபகரணங்களைப் படைத்துள்ளனர்.
வீடு பெருக்குவதும், முற்றம் தெளிப்பதும், கோலமிடுவதும், அம்மி அரைத்தலும், அவரவர் வேலையினூடாக அவர்களுக்குக் கிடைக்கும் உடற்பயிற்சி எனலாம். அவையெல்லாம், அவசர யுகத்தில், தேவையற்று, தேடிப்பிடிக்க வேண்டியது போதாதென்று, அன்றாடம் நம் உடல் நலத்தைக் குறி வைத்துத் தாக்கும் அணு குண்டுகளாய் வந்து இறங்குவன, துரித உணவுகள் என்லாம்.
நம்ம ஊர் பேக்கரியில, நாளும் செய்து வெளிவரும் ரொட்டிகள், நாலு நாள் இருந்தாலே, நார் நாரா, பூஞ்சக்காளான் புடிச்சிக்கும். ஆனா, இன்னைக்கு, பல சூப்பர் மார்க்கட் ஷெல்ஃபுகளை அலங்கரிக்கும், வண்ண வண்ண தாள்களில் பொதியப்பட்ட பிரட்களோ, பத்து நாட்களுக்கும் மேலாகவே, பிரஷா இருக்கே, அது எப்படி?
விஞ்ஞான வளர்ச்சியை, நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துறோமோ இல்லையோ, இது போன்ற படு பாதகச்செயல்களுக்கு, பயப்படாம பயன்படுத்துறோம். ஆம், ’பிரிசர்வேட்டிவ்ஸ்’ என்று சொல்லப்படும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியே, துரித உணவுகள் மற்றும் ரெடி டூ ஈட் உணவுகளின், உயிர்வாழும் காலத்தை உயர்த்துகிறார்கள்.
துரித உணவுகள் பலவற்றில், ’மோனோசோடியம் குளுடாமேட்’ (இதன் மார்கட் பெயர் சொன்னால் அனைவருக்கும் தெரியும்-அதை நான் சொல்வது கூடாது என்பதால் சொல்லவில்லை) எனும் சுவையூக்கி(TASTE IMPROVER) சேர்க்கப்படுகிறது. அதேபோல், ரொட்டி போன்ற பேக்கரி பொருட்களில், சேர்ர்க்கப்படும் சிலவகை வேதிப்பொருட்கள், அவை நெடு நாட்கள் கெட்டுப்போகாமல் வைத்திருக்கும். நல்ல விஷயம்தானே என்று சொல்லலாம்.ஆனால், சேர்க்கப்படும் பொருளின் பெயரும், பக்க விளைவுகளும் தெரிந்து கொண்டால், இத்தகைய கேள்வி எழாது.
பேக்கரிப் பொருட்கள் கெடாமலிருக்க, அவற்றில் காளான் படராதிருக்க, கால்சியம் ப்ரொபியோனேட் மற்றும் சோடியம் ப்ரொபியோனேட்(CALCIUM PROPIONATE & SODIUM PROPIONATE) என்ற இரு வேதிப்பொருட்கள் சேர்க்கின்றனர். அவைதான், ரொட்டி வகை உணவுகள் கெட்டுப்போகாமலிருக்கச் செய்கின்றன.அரசு அனுமதித்துள்ள அள்விற்கு அதிகமாகவே இதனைச் சேர்க்கின்றனர். ஆனால், இந்த வேதிப்பொருட்கள் அதிகம் கலந்த உணவினை நாம் உண்ணும்போது, அவை நம் வயிற்றிலுள்ள குடல் சுவற்றினை நிரந்தரமாக சேதப்படுத்தும்.
அதிலும், குடல் அழற்சி(ULCER) உள்ளவர்களென்றால், அவற்றிற்கு கூடுதல் குஷி. ஆம், நம் வயிற்றில் வாயுக்கள் உருவாகவும், அழற்சியை அதிகப்படுத்தவும் வல்லவை இந்த வேதிப்பொருட்கள். இதன் பயனாக, குடல் அழற்சி மட்டுமல்ல,தலைவலி, சிறு குழந்தைகளின் தூக்கமின்மை, கவனமின்மை போன்ற பல பிரச்சனைகளும் உருவாகும். துரித உணவுகள் மற்றும் பேக்கரி பொருட்கள் மட்டுமின்றி, காய்ந்த பழவகைகள், பால் பொருட்கள், பழச்சாறுகள், ரெடி டூ ஈட்- சப்பாத்தி, பூரி என்று இதனைப்பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது
இவையும் ஒரு வகை கலப்படமே. எனவே, அடுத்த முறை கடைக்குப்போகும்போது, அந்த உணவுப்பொருள் பாக்கட்டின் மீது, என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அச்சிட்டிருப்பதைப் படித்துப் பார்த்து, உடல் நலத்தைக்கெடுக்கும் இத்தகைய வேதிப்பொருட்கள் கலந்திருந்தால், அவற்றைத் தவிர்த்திடுங்கள். தவிர்ப்பது ஒன்றே நமக்கும், நம் குடும்பத்தினருக்கும், நம் சந்ததிக்கும் நன்மை பயக்கும்.
24 comments:
இன்றைய இளைய தலைமுறை சமூக கலாச்சார முன்னேற்றத்தை காரணம்காட்டி தன்னுடைய உணவு பழக்கத்தையும் மாற்றிக்கொண்டுள்ளது...
நம்முடைய உணவுப்பழக்கங்கள் யாவும் நமக்கும் நம் உடலுக்கும் நன்மை பயக்குபவை...
அதை விடுத்து இதுபோன்ற துரித உணவு மோகங்களை தவிர்த்தல் வேண்டும்
///////
உணவுப்பொருள் பாக்கட்டின் மீது, என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அச்சிட்டிருப்பதைப் படித்துப் பார்த்து, உடல் நலத்தைக்கெடுக்கும் இத்தகைய வேதிப்பொருட்கள் கலந்திருந்தால், அவற்றைத் தவிர்த்திடுங்கள்
///////
இதையெல்லாம் யார் ஐயா பார்க்கிறார்கள்...
இன்னும் விரிவான விழிப்புணர்வு தேவை...
இன்றைய வாழ்க்கை முறையின் அவலம் இது.மிகத் தேவையான பகிர்வு.நன்று.
அண்ணே ரெண்டு நாள் முன்னே ஒரு நண்பர் வீட்டுக்கு போயி இருந்தேன்...வீட்டுக்கு நான் வரேன்னு சொன்னதும்..மேசை மேல பல துரித உணவுகளை கொண்டாந்து வச்சிருந்தாங்க...பாத்திட்டு டென்சன காட்டிக்காம..வெறும் கிரீன் டீ மட்டும் குடிச்சிட்டு எழுந்து வந்துட்டேன்..அப்புறம் என் நண்பருக்கு ஒரே அர்ச்சனை தான் அவரு வீட்ல..அந்த வீட்டு பசங்க வீட்டு சாப்பாடே சாப்பிட மாட்டாங்களாம்..என்னத்த் சொல்ல சொல்லுங்க!
வணக்கம் சார்!உண்மைதான்!பாரம்பரிய வீட்டு உபயோகப் பொருட்கள்(கருவிகள்)பரணில் தூங்குகின்றன.பெண்கள் சீரியலில் மூழ்கி..............................!
Thanks..sir.....
எங்க பார்த்தாலும் இந்த துரித உணவு தான் சார்
......
//கவிதை வீதி... // சௌந்தர் // said...
இன்றைய இளைய தலைமுறை சமூக கலாச்சார முன்னேற்றத்தை காரணம்காட்டி தன்னுடைய உணவு பழக்கத்தையும் மாற்றிக்கொண்டுள்ளது...
நம்முடைய உணவுப்பழக்கங்கள் யாவும் நமக்கும் நம் உடலுக்கும் நன்மை பயக்குபவை...
அதை விடுத்து இதுபோன்ற துரித உணவு மோகங்களை தவிர்த்தல் வேண்டும்//
ஆமாம், அதில் ஆசிரியரின் பங்கு நிறைய இருக்கிறது. ஆசிரியர் கூறும் விழிப்புணர்வு, குழந்தைகளிடம் உடனே சென்றடையும். நன்றி.
//கவிதை வீதி... // சௌந்தர் // said...
///////
உணவுப்பொருள் பாக்கட்டின் மீது, என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அச்சிட்டிருப்பதைப் படித்துப் பார்த்து, உடல் நலத்தைக்கெடுக்கும் இத்தகைய வேதிப்பொருட்கள் கலந்திருந்தால், அவற்றைத் தவிர்த்திடுங்கள்
///////
இதையெல்லாம் யார் ஐயா பார்க்கிறார்கள்...
இன்னும் விரிவான விழிப்புணர்வு தேவை...//
நான் என் பங்கை செய்துள்ளேன்.
ரொம்ப நல்ல பதிவு ஆபிசர். எளிதாக கிடைப்பது, அதிக சுவை, கவர்ச்சியான தோற்றம் இவையே துரித உணவுகளை விரும்ப வைக்கிறது. அரசும் இதில் இன்னும் கொஞ்சம் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும்.
தவிர்ப்பது ஒன்றே நமக்கும், நம் குடும்பத்தினருக்கும், நம் சந்ததிக்கும் நன்மை பயக்கும்.
Thank you for useful sharing..
உபயோகமான பல ஆலோசனைகள் நன்றி ஐயா..
என்ன தான் வேகமான உணவானாலும் கைப்பக்குவம் போல வராது அல்லவா...
ப.ரா அண்ணனுடையதுதான் எனது கருத்தும்.
என்ன இருந்தாலும் அதன் சுவையும், மணமும் ஈர்த்தேவிடுகிறது :)))
தேவையான பகிர்வு.
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
துரித உணவு சாப்பிட்ட உடன் முதல் விளைவு - வயிற்று வலி & மலச்சிக்கல் - பின்பு மற்றவை தொடர்ச்சியாக.
மிக்க நன்றி.
இந்த உணவுகளை தவிர்ப்பதே அனைவருக்கும் நல்லது. பகிர்வுக்கு நன்றிகள் ..
துரித உணவை துரிதமாக வாங்கும் அவசரத்தில் அதில் எழுதியுள்ள விளக்கங்களை எவரும் படிப்பதில்லை..அதுதான் பிரச்னை.
Sir,
Wonderful, informative article.
Due to eating those fast foods, many people are falling sick , with chronic illness.
It is home food that is comfort giving and good for family health.
In the olden days, the woman of the house was treated as Annalakshmi , for good reason.
While buying stuff from market, we do read labels, but in India, the dubious manufacturers do not even write all the ingredients. At least in Cities , this problem can be solved ,, but towns and villages suffer a great deal, due to second rate food stuff flooding there.
இந்த ரசாயன பொருட்களுக்கு E numbers ன்னு ஒரு விஷயம் இருக்கு. அந்த நம்பர்களை தெரிஞ்சு வெச்சிகிட்டா ஓரளவுக்கு சமாளிக்கலாம். ஆனா அவசரத்துல வாங்குற நேரம் அத யாரும் பாக்கமாட்டாங்க. Mono sodium glutamate
னால புற்று நோய் ஆபத்து இருக்கா இல்லையாங்குறது இன்னும் சர்ச்சைக்குரியதாவே இருக்குது.
ஆபீசர் நானும் இதோ வந்துட்டேன் வணக்கம்....!!!
வீடு பெருக்குவதும், முற்றம் தெளிப்பதும், கோலமிடுவதும், அம்மி அரைத்தலும், அவரவர் வேலையினூடாக அவர்களுக்குக் கிடைக்கும் உடற்பயிற்சி எனலாம்.//
பிள்ளைகளின் துணிகளை துவைப்பதால் நல்ல உடல்பயிற்சி கிடைக்குமென நினைத்து மனைவி கேட்டும் வாஷிங் மெஷின் வாங்கி கொடுக்காமல் இருந்தேன். இந்தமுறை ஊர் வந்தபோது வற்புறுத்தி வாங்கிவிட்டாள், ம்ம்ம்ம் இதுதான் நம்ம வீட்டு மகாலட்சுமிகள் என்னத்தை சொல்ல போங்க....!!!
விஞ்ஞான வளர்ச்சியை, நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துறோமோ இல்லையோ, இது போன்ற படு பாதகச்செயல்களுக்கு, பயப்படாம பயன்படுத்துறோம்//
விஞ்ஞானம் வளர்ந்ததும் மனிதனின் அழிவும் தொடங்கியாச்சு....!!!
சிறப்பான ஆரோக்கிய பதிவு ஆபீசர் நன்றி....!!!
மோனோ சோடியம் குளுடாமேட் என்பது மார்க்கெட்டில் அஜினோ மோட்டோ என்று சொல்லப்படும். எங்கள் ஊரில் கல்யாண விருந்துகளில் இதை உபயோகிக்கக் கூடாது என்று கல்யாண வீட்டுக்காரர் சென்னால் சமையல்காரர் ரொம்ப பணிவாக சரி என்று சொல்லிவிடுவார்.
லிஸ்ட்டில் இந்தப் பெயர் இருக்காது. ஆனால் அவர் தன் சொந்தக் காசில் இதை வாங்கிவந்து சமையலில் சேர்த்து விடுகிறார். இது பதார்த்தங்களின் சுவையைக் கூட்டுவதால் அதைப் போடாவிட்டால் அந்த சமையல்காரரின் புகழ் மங்கும்.
இந்த மாதிரி அக்கிரமங்களும் நடைபெறுகின்றன.
Post a Comment