இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 1 November, 2011

மழைக்கால நோய் தடுக்க மருத்துவ முகாம்.

                       கோடை வெயில் கொளுத்திய நெல்லையில், குளிர் மழையும் வந்தது. கூடவே, குளிர்கால நோய்களையும் கூட்டி வந்தது. தும்மல், இருமல், ஜலதோசத்தில் தொடங்கி, சகல நோய்களும் பவனி வந்தாச்சு. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முழு வீச்சில் செய்தாலும், இயற்கையை வெல்ல, நம்மால் முடியுமோ!
                    கல்லூரி மாணவர்கள் சிலர், கருத்தொருமித்து களமிறங்கினால் என்னாகும்? நான் கண்ட கட்சிகள் சில, உங்களின் பார்வைக்கு. ஜப்பானைச் சார்ந்த “ஹேப்பி சயன்ஸ்” அமைப்பு சமூக அக்கறையுடன் சில காரியங்களைச் செய்து வருகிறது. அது பற்றி எனது இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். அந்த அமைப்பின் தமிழகப்பிரதிநிதிகளாய், கல்லூரி மாணவர் பட்டாளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 
முகாமில் சேவை புரிந்த மருத்துவர்களுக்கு மரியாதை.
வலமிருந்து: விஷ்ணு,மோரி,முகமது ராஜா(நிகழ்ச்சி நாயகர்கள்)
                    அவர்களின் ஒரு மாத கால உழைப்பில் உருவானதுதான், மேலே நோட்டிஸில் கண்ட மருத்துவ முகாம். நெல்லையில் உள்ள ஒரு பின் தங்கிய பகுதியினைக் கண்டறிந்தனர். கிருஷ்ணப்பேரி எனும் அந்தப் பகுதியில், விவசாயம் சார்ந்த பணியினை மேற்கொள்ளும் உழைக்கும் மக்கள் குடியிருக்கின்றனர். ஒரு மாத காலம், அந்தப் பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி, அந்த அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவை என்ன என்பதை அறிந்து கொண்டனர். 
மருத்துவ முகாம்
                       அடுத்து, ஹேப்பி சயன்ஸ் அமைப்பின், இந்திய மேலாளர் திரு. மோரியுடன் பேசி, அங்கு ஒரு மருத்துவ முகாம் நடத்திட ஏற்பாடுகள் செய்தனர். நெல்லையின் பிரபல மருத்துவர்கள் திருமதி.பாக்கியம்பார்வதி,ஸ்வர்ணகமலா(பெண்கள்மருத்துவம்), திருவாளர்கள்.பரமசிவன்(சித்த மருத்துவம்),சார்லஸ் பிரேம்குமார்(பல் மருத்துவம்),முகம்மது ஈஸாக்(பொது மருத்துவம்) ஆகியோர் முகாமில் இலவசமாக சிகிச்சை வழங்க முன் வந்தனர்.
சுழற்கழக ராமலிங்கத்திற்கு பாராட்டு சான்று.
                     காலை பத்து மணிக்குத்துவங்கிய மருத்துவ முகாமில், அப்பகுதி மக்கள் முழுமையாகக் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.அதற்கான செலவையும் அந்த இளைஞர்களே ஏற்றுக்கொண்டனர்.


     
   இத்துடன் முடித்துக் கொண்டால் நன்றாக இருக்குமா? என்று நினைத்தார்கள் போலும். அன்று மாலையிலேயே, அந்த பகுதியில் ஒரு சமூக சேவை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்திட விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

                       அப்பகுதியிலுள்ள இரு மாற்றுத்திறனாளிகளுக்கு, கையால் ஓட்டும் மூன்று சக்கர சைக்கிள் தேவைப்பட்டது. அதனை, சகோதரி மனதோடு மட்டும்... கௌசல்யாவின் "EAST TRUST", இலவசமாய்த்தர இசைவு தந்தது.
 
                       ஹேப்பி சயன்ஸ் அமைப்பு,அந்தப்பகுதியில் வசிக்கும் அனைத்து பள்ளிக்குழந்தைகளுக்கும், புத்தகப்பை+நோட்டுகள் வழங்க முன்வந்தது.ஏழை மகளிர் இருவருக்கு தையல் மெஷின்கள் வழங்கவும் மனமுவந்தது.சுழற்கழகமும் இந்நிகழ்ச்சியில் சுறு சுறுப்பான சேவை செய்தது. சுழற்கழகம் பற்றி சொல்லும்போது, திரு.ராமலிங்கம் சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அப்படி ஒவ்வொரு சுழற்கழக சேவையிலும் திரு.ராமலிங்கம் சாரின் பங்கு இருக்கும். இத்தனை சேவைகளுக்கும் வித்திடும் அவர், ஒரு அறுபது வயது இளைஞர். இந்த வயதிலும் அத்தனை சுறுசுறுப்பு. 
தையல் மெஷின்கள் வழங்குதல்
              முகாமில் இலவச சேவை செய்த மருத்துவர்களுக்கும், பங்கு பெற்றோருக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். கல்லூரி மாணவர்களால், சமுதாய சேவையும் செய்ய முடியுமென்று உணரவைத்த நிகழ்வு அது. விஷ்ணு மற்றும் முகமது ராஜா என்ற இரு இளைஞர்களின் ஈடு இணையற்ற சேவையுள்ளம் இந்த சமூக சேவையில் எதிரொலித்தது.
ஈஸ்ட் டிரஸ்ட் ஜோதிராஜிற்கு பாராட்டு சான்று


மழைக்கால முன்னெச்சரிக்கைகள்:
  • சூடான உணவுப் பொருள்களையே உண்ண வேண்டும்.
  • பருகுவதற்கு கொதிக்கவைத்து ஆறிய நீரையே பயன்படுத்த வேண்டும்.
  • முதல் நாளோ, நான்கு மணி நேரத்திற்கு முன்போ தயாரித்து மீதமான உணவை மீண்டும் பயன்படுத்தாதீர்கள். தேவைக்கேற்ப மட்டும் உணவு தயாரியுங்கள்.

  • உணவுப் பொருள்கள் உள்ள பாத்திரங்களை எப்போதும் மூடியே வைத்திருங்கள்.
  • உணவுப் பொருள் வைத்த பாத்திரங்களை, சோப்பு மற்றும் சுடு நீரினால் சுத்தமாகக் கழுவி உலர வைக்க வேண்டும்.
உணவு உலகம் சங்கரலிங்கத்திற்கு நற்சான்று
  • வீட்டின் தரைகளை, தினம் ஒரு முறையேனும் கிருமி நாசினி கலந்த நீரினால் சுத்தமாகத் துடைத்திடுங்கள்.
  • வீட்டின் தரை எப்போதும் சுத்தமாக உலர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
  • மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை, வெளியிலிருக்கும் கொசுக்கள் வீட்டிற்குள் படையெடுக்கும் காலமாதலால், வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வையுங்கள்.
 
  • வீட்டின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், நீரில் வாழும் தாவரங்கள் வைத்திருக்கும் பாட்டில்கள், குளிர்பதனப்பெட்டியின் நீர் வெளியேறும் பைப் லைன் போன்றவற்றில், கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க, வாரம் ஒரு முறை அதிலுள்ள நீரை உலர வைத்து கழுவிடுங்கள்.

  • வீட்டின் சுற்றுப்புறங்களில், பயனற்ற உரல், டயர்கள், சிரட்டை, தகர டப்பாக்கள் இருந்தால், அவற்றில் தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே, அவற்றில் நீர் தேங்காதவாறு அப்புறப்படுத்தி விடுங்கள்.
 சாரல்:  சேவைகள் தொடரத்தொடர, நானும் தொடர்கிறேன் . . .
Follow FOODNELLAI on Twitter

39 comments:

nellai ram said...

nice!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
உங்களது அரிய சேவைக்கு தலை வணங்குகிறோம்.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

கோவை நேரம் said...

சேவைக்கு வாழ்த்துக்கள் .

ஆமினா said...

இப்படியான இளைஞர்கள் முன்வருவதினால் வருங்காலத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்

மாற்றுதிறனாளிகளுக்கு உதவிய கௌசல்யாவுக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்

Chitra said...

Congratulations to everyone! Inspiring work.... Keep it up! :-)

சி.பி.செந்தில்குமார் said...

ரைனிங்க் டைமில் போடப்பட்ட டைமிங்க் போஸ்ட் . குட்

இராஜராஜேஸ்வரி said...

ஹேப்பி சயன்ஸ் அமைப்பின்,
அருமையான சேவைகள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

செங்கோவி said...

நல்ல முயற்சி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல செயல், முகாம் அமைப்பாளர்களுக்குப் பாராட்டுக்கள்...!

Happy Science said...

Hi to all bloggers ,I am'
Vishnu,
Representative,
Happy Science India Association.

I would like to thank Sankaralingam uncle for his contribution,Guidance and appreciation towards us.

We will be continuing our missionary projects with success always

Thanks for all

with love,
Vi$hnu

கூடல் பாலா said...

உன்னதமான சேவை ...கவுசல்யா தம்பதியினருக்கும் பாராட்டுதல்கள் !

கூடல் பாலா said...

தாங்கள் கூறிய மழைக்கால முன்னெச்சரிக்கைகளை கடை பிடிக்கிறோம் ..நன்றி!

Astrologer sathishkumar Erode said...

அருமையான சீசன் அறிவுறைகள் நன்றி

'பரிவை' சே.குமார் said...

உங்களது அரிய சேவைக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

சேவை மனம்கொண்டு செய்த உதவிகளுக்கு பாராட்டுகள்+வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

உங்களைப் போன்ற பல நல்இதயங்களை நண்பர்களாக, துணை புரிந்த இணையத்திற்கும் நன்றி,,

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இங்கு பதிவுச்செய்கிறேன்...

rajamelaiyur said...

நல்ல முயற்சி .. வாழ்த்துகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1

MANO நாஞ்சில் மனோ said...

எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

ஆபிசரின் அக்கறையான பதிவுக்கு மிக்க நன்றி...!!!

MANO நாஞ்சில் மனோ said...

இளம் தலைமுறையினர் இப்படியும் அசத்துவது மனதிற்கு நம்பிக்கை தருகிறது!!!!

செல்வா said...

மருத்துவ முகாமை ஏற்படுத்தி சிறப்பாகப் பணியாற்றிய மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளைக் கொடுத்து உதவிய ஈஸ்ட் ட்ரஸ்ட் சேவகர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் :)))

செல்வா said...

கண்டிப்பா மழைக்காலத்துல இந்த மாதிரி பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் எடுத்துட்டாத்தான் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். மழை எப்பத்தான் நிக்கும்னு இருக்குது சார்:)))

Unknown said...

நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் பாஸ்!

சென்னை பித்தன் said...

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பகிர்வு. உங்களது தன்னார்வ முயற்சிகளுக்கும், ஏழை மக்களுக்கு உதவிகள் புரிந்த தொண்டு நிறுவனங்களுக்கும் சகோ. கௌசல்யாவின் முயற்சிக்கும் பாராட்ட வார்த்தைகளே இல்லையெனலாம். அனைவருக்கும் எனது மனங்கனிந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும். நன்றி பகிர்வுக்கு.

Kousalya Raj said...

அண்ணா முதலில் மன்னியுங்கள், தாமதமான பின்னூட்டத்திற்கு.

மிக விரிவான பகிர்வுக்கு எப்படி நன்றி சொல்ல தெரியல...இந்த தொண்டின் பின்னணியில் உங்களின் ஆலோசனை மிக முக்கியமான ஒன்று. நன்றி அண்ணா.

ஹேப்பி சயின்ஸ் நிறுவனத்தின் பங்கு மிக மிக அதிகம்...அவர்களின் சமூக சிந்தனையும், செயலும் மிக பாராட்டுக்கு உரியது.

முக்கியமாக விஷ்ணு மற்றும் ராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வயதில் சிறியவர்களாக இருந்தும் அவர்களிடம் இருந்து அன்று நான் நிறைய கற்றுக்கொண்டேன். நிகழ்ச்சி தொடர்பான ஒருங்கிணைப்பு அவ்வளவு சிறப்பாக இருந்தது.அடுத்து நாங்கள் மேற்கொள்ளபோகும் ஒவ்வொன்றுக்கும் இவர்களின் வழிகாட்டுதல் எனக்கு உபயோகமாக இருக்கும்.

ரோட்டரி கிளப் அவர்களின் உதவியும் மிக பெரிது. அன்றைய தினம் அனைவரின் ஒத்துழைப்பும் சிறப்பாக்க இருந்தது.

அத்தனை நல்ல இதயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Kousalya Raj said...

இங்கே வந்திருந்து வாழ்த்திய உள்ளங்களுக்கு மகிழ்ச்சியுடன் என் நன்றிகள்.

Unknown said...

அண்ணே அருமையான பகிர்வு...நடை முறை உதவிகள் பெரிய விஷயம்னே!..அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

வைகை said...

நல்ல விசயம்.. நம்ம நாட்ல இன்னும்கூட சுகாதாரம் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லைனே சொல்லணும் அதவும் கிராமப்பகுதிகள் இன்னும் மோசம்... முன்னெடுத்து செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் :))

நிரூபன் said...

வணக்கம் ஆப்பிசர், சூப்பர் பதிவு, சமூக அக்கறையோடு சமுதாயம் நலம் பெறச் சேவை செய்வோரை வெளிச்சம் போட்டு காட்டு, இன்னும் வேகமாகச் செயற்பட வைக்கும் பதிவு!

கௌசல்யா அக்காவிற்கும், ஏனைய அன்பு உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

இராஜராஜேஸ்வரி said...

ஒவ்வொரு சுழற்கழக சேவையிலும் திரு.ராமலிங்கம் சாரின் பங்கு இருக்கும். இத்தனை சேவைகளுக்கும் வித்திடும் அவர், ஒரு அறுபது வயது இளைஞர். இந்த வயதிலும் அத்தனை சுறுசுறுப்பு. /

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

Prabu Krishna said...

நல்ல விஷயங்கள் அப்பா. இந்த சேவையில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துகள். கௌசல்யா அக்காவுக்கும்.

டொமைன்க்கு உங்களுக்கு ஸ்பெஷல் கங்க்ராட்ஸ்.

FOOD said...

// Prabu Krishna said...
நல்ல விஷயங்கள் அப்பா. இந்த சேவையில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துகள். கௌசல்யா அக்காவுக்கும்.

டொமைன்க்கு உங்களுக்கு ஸ்பெஷல் கங்க்ராட்ஸ்.//
அன்பின் பிரபு,
உனது தளத்திலிருந்து கற்றுக்கொண்டுதான், டொமைன் வாங்கினேன். நன்றி பிரபுவிற்கும், அதில் எழுதிய பதிவர் தமிழ்கிழம்

அம்பாளடியாள் said...

இந்த அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் .உங்கள் உயர்ந்த குணத்திற்க்குத் தலைவணங்குகின்றேன்.மிக்க
நன்றி சகோ பகிர்வுக்கு .

சிவகுமாரன் said...

Good effort
Congrats

Anonymous said...

ஈஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பாளர்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்.

Anonymous said...

மழைக்காலத்தில் அனுஷ்கா படங்களை பார்க்க அறிவுறுத்தும் நாஞ்சில் மனோவை கண்டித்து விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.