இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday, 8 November, 2011

அப்பளம் தந்தது ஆறு மாதம் சிறை.

அப்பளம் நம் நாட்டில் அன்றாடம் அனைவர் வீட்டிலும் பயன்படுத்தும் ஒரு உணவுப்பொருள். எப்படி விடுவார்கள் அதில் மட்டும் கலப்படம் செய்யாமல்? பார்ப்போமா!

          மூன்று வருடங்களுகு முன் ஒரு நாள், தச்சநல்லூர் பகுதியில், ஆய்விற்குச் சென்றோம். அங்குள்ள பலசரக்குக் கடையில், அடுக்கடுக்காய் அப்பளக் கட்டுகள். எடுத்துப் பார்த்தால், அதில் அச்சிடப்படவேண்டிய விபரங்கள் பல இல்லை. 
             எந்த ஒரு உணவுப்பொருளை பாக்கட்டில் அடைத்து விற்பனை செய்வதென்றாலும், அந்த பாக்கட்கள் மீது, அந்த உணவுப்பொருளின் பெயர், தயாரிப்பு தேதி, என்னென்ன மூலப்பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது, எந்த தேதி வரை அந்த உணவுப்பொருள் பயன்படுத்த உகந்தது, அது சைவ வகை உணவா அல்லது அசைவ வகை உணவா என்பதற்கான குறியீடு, தயாரிப்பாளரின் முழு விலாசம், பாட்ஜ் எண் போன்ற விபரங்கள் கண்டிப்பாய் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
                   நாங்கள் அந்த கடையில் பார்த்த அப்பள பாக்கட்கள் மீது, அது அப்பளம்தான் என்றே குறிப்பிடப்படவில்லை. தயாரிப்பு தேதி இல்லை, எந்த தேதிவரை பயன்படுத்தலாம் என்ற விபரம் இல்லை, பாட்ஜ் எண் இல்லை, சைவ வகை குறியீடு இல்லை, இப்படி இல்லை, இல்லை ஏராளம். சரி, இந்த அப்பள பாக்கட்டை இன்று மாதிரி எடுத்து அனுப்பிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்தால், உணவு கலப்பட தடைச்சட்டத்தின் ஒன்பது பிரிவுகளில், வழக்கு தொடரலாமென்று, பகுப்பாய்வு முடிவு வந்தது.


                       தயாரிப்பாளர் விலாசம் பாளையங்கோட்டை என்றிருந்ததால், அவரையும் வழக்கில் ரொம்ப ஈஸியா சேர்த்திடலாமென்று எண்ணியிருந்தேன்.  தேடிச்சென்றபோதுதான் தெரிந்தது, அவர் அந்த பாக்கட்டில் கண்ட விலாசத்தில் தொழிலே செய்யவில்லையென்று. அந்த பகுதி மக்களிடம் விசாரித்தால், அவர்கள் அப்பளத் தயாரிப்பாளரைக் காட்டிக்கொடுக்க மனமின்றி, எங்கு இடம் மாறி சென்றுவிட்டாரென்றே தெரியாது என்று கூறிவிட்டனர். மிக நீண்ட விசாரணைக்குப்பின், அவர் பாளையங்கோட்டையில் மற்றொரு பகுதியில், அப்பளம் தயாரித்து வருவதைக்கண்டுபிடித்தோம். 

                                                 
         கடையின் விற்பனையாளர், உரிமையாளர் மற்றும் தயாரிப்பாளரை, சட்டத்தின் முன் கொண்டு நிறுத்தினோம்.எதிர் தரப்பிலிருந்து, கற்றறிந்த வழக்கறிஞர் இருவர்,கேள்விக்கனைகளால் என்னைத் துளைத்தெடுத்தனர். அரசு வழக்கறிஞர் திருமதி.ஜெயஜீவா தன் வாதத் திறமையால், அடுக்கடுக்காய் விவரங்களை எடுத்துரைத்தார். 
           திருநெல்வேலி நீதித்துறை நடுவர் மன்றம் எண்.4ல். எதிரிகள் மூவருக்கும், தலா ஆறு மாதம் மெய்க்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Follow FOODNELLAI on Twitter

66 comments:

nellai ram said...

nice article!

மொக்கராசா said...

//எதிர் தரப்பிலிருந்து, கற்றறிந்த வழக்கறிஞர் ருவர்,கேள்விக்கனைகளால் என்னைத் துளைத்தெடுத்தனர்//

நீங்க தான் உண்மையான ஹூரோ....

FOOD said...

// nellai ram said...
nice article!//
அதிகாலை வருகைகு நன்றி

FOOD said...

// மொக்கராசா said...
//எதிர் தரப்பிலிருந்து, கற்றறிந்த வழக்கறிஞர் ருவர்,கேள்விக்கனைகளால் என்னைத் துளைத்தெடுத்தனர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நீங்க தான் உண்மையான ஹூரோ...//
இதுவும் எங்கள் பணியின் ஒரு பகுதி. நன்றி நண்பரே.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் ஆப்பீசர்,
நலமா இருக்கிறீங்களா?

புதுத் தளத்திற்கு மாறியிருக்கிறீங்க.

புது டொமைன் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

அப்பளம் தான் மலிவான ஒரு பொருளாக கிடைக்கும் என்றால்,
அதனையும் விட்டு வைக்கிறார்கள் இல்லையே...


நல்லதோர் சமூக சேவையினை மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆற்றியிருக்கிறீங்க.

வாழ்த்துக்கள் ஆப்பீசர்!
தொடரட்டும் தங்கள் பணி!

FOOD said...

// நிரூபன் said...
இனிய காலை வணக்கம் ஆப்பீசர்,
நலமா இருக்கிறீங்களா?

புதுத் தளத்திற்கு மாறியிருக்கிறீங்க.

புது டொமைன் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.//
எனது தமிழ் மற்றும் ஆங்கில வலைப்பூ இரண்டிற்குமே, பலே பிரபுவின் தளம் பார்த்து, டொமைன் வாங்கி விட்டேன். ஆங்கில தள்ம், டொமைனுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் மாறிவிடும். நன்றி.

FOOD said...

// நிரூபன் said...
அப்பளம் தான் மலிவான ஒரு பொருளாக கிடைக்கும் என்றால்,
அதனையும் விட்டு வைக்கிறார்கள் இல்லையே...
நல்லதோர் சமூக சேவையினை மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆற்றியிருக்கிறீங்க.
வாழ்த்துக்கள் ஆப்பீசர்!
தொடரட்டும் தங்கள் பணி!//
மூன்று வருடங்களுக்கு முன் எடுத்த உணவு மாதிரி. நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்து தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நன்றி நிரூ.

Chitra said...

பாளையங்கோட்டை அப்பளத்திலும் கலப்படமா? அவ்வ்வ்வ்.... :-(

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

உங்களால் நாங்கள்
தெரிந்தோ தெரியாமலோ .....
நற் பயன் பெறுகிறோம்.
பன்னாட்டு நிருவனங்கள் ..இன்று
பாய் போட்டு படுத்து கொண்டு
லாபம் சுரண்டுகிறது .
நமது சிறிய வியாபாரிகள்
கள்ளத்தனமாக மாறியது.......மாற்றியது.... அரசு .
கால கொடுமை ...
போகட்டும் ....
பட் உங்கள் நேர்மை எனக்கு பிடித்து உள்ளது .

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

உங்களால் நாங்கள்
தெரிந்தோ தெரியாமலோ .....
நற் பயன் பெறுகிறோம்.
பன்னாட்டு நிருவனங்கள் ..இன்று
பாய் போட்டு படுத்து கொண்டு
லாபம் சுரண்டுகிறது .
நமது சிறிய வியாபாரிகள்
கள்ளத்தனமாக மாறியது.......மாற்றியது.... அரசு .
கால கொடுமை ...
போகட்டும் ....
பட் உங்கள் நேர்மை எனக்கு பிடித்து உள்ளது .

Anonymous said...

ஒரு அப்பளத்திற்கு இந்த அக்கபோரா !!!!! முடியலப்பா

சகோ article சூப்பர் ..........

இராஜராஜேஸ்வரி said...

எச்சரிக்கை அளிக்கும் பகிர்வுக்கு நன்றி..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அப்பளத்திலுமா ? ஆவ்வ்வ்வ்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக

அமைதிச்சாரல் said...

இன்றைய அவசர யுகத்துல ஒவ்வொண்ணையும் வீட்ல செய்ய நேரமில்லாமத்தான் ரெடிமேட் உணவுப்பொருட்களை உபயோகிக்கறோம். அதுவும் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இஷ்டப்பட்டு சாப்பிடற ஒரு அயிட்டம்தான் அப்பளம். அதுல கலப்படம் செய்றவங்களை என்னன்னு சொல்றது.

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Prabu Krishna said...

நல்ல விஷயங்கள் அப்பா. இது போன்று மேலும் பல விஷயங்கள் செய்ய வேண்டும்.

ஆங்கில தளத்துக்கு .com டொமைன் வாங்குங்கள். முதல் ஆண்டுக்கு மட்டுமே .in இல் 100 ௦௦ ரூபாய். ஒரு ஆண்டுக்கு பின் .com மற்றும் .in இரண்டும் கிட்டத்தட்ட ஒரே விலையே. எனவே .com தான் பெட்டர்.

ஆமினா said...

பயமா இருக்கு..

இனி உப்பு பாக்கெட் கூட பயந்துட்டு வாங்கணும்.....

அப்பறம் அண்ணா
எண்ணெய் பாக்கெட்ல 60 ரூபாய்ன்னு இருக்கும். ஆனா பெரிய கடைகளில் 45ல இருந்து 50க்கு விக்கிறாங்க. ஆனா பெட்டி கடைல அதே விலை! பாக்குறவங்களுக்கு முன்னது விலைகுறைப்பு,அதிரடி தள்ளுபடி போலவும், அடுத்தது நியாயமா விற்கிறார்கள் என்பது போலவும் தோற்றம் உண்டாகுது... சூப்பர் மார்க்கெட்,மால்களில் இதனை பயன்படுத்தி தான் தங்கள் கடைக்கு விளம்பரன் செய்கிறார்கள். எல்லா பொருட்களின் மீதும் ஒரே விலை (நெகிழ்ச்சியற்றதாக) இருந்தால் பல மோசடிகள் நடக்காது இல்லையா?

பகிர்வுக்கு நன்றி அண்ணா!!!

கோகுல் said...

உங்கள் பணி தொடரட்டும்.
இனியும் கடைக்காரர்களும் தயாரிப்ப்பாளர்களும் அவசியமானவற்றை பூர்த்திசெய்வார்களா?

siva said...

என்னது அப்பளமுமா..கலப்படம்
avv..

என்ன சொல்வது தெரியவில்லை

நீங்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் அண்ணாச்சி

சென்னை பித்தன் said...

நன்று செய்தீர்கள்!தொடரட்டும் உங்கள் நற்பணி!

asiya omar said...

அப்பாவி மக்கள் அவசரத்திற்கு வாங்கும் அப்பளத்திலும் கலப்படம்,கலப்படம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்..

கே. ஆர்.விஜயன் said...

பப்படத்திலும் கலப்படம். என்ன கொடுமை சார் இது. நம்மவர்களுக்கு ஒரே நாளில் கோடீஸ்வரனாகவேண்டும் என்று ஆசை. அதுதான் பிரச்சனை.

MANO நாஞ்சில் மனோ said...

ஆபீசர்கிட்டே பப்பும் வேகாது பப்படமும் வேகாது, சூப்பர் நடவடிக்கை, பாராட்டுக்கள் ஆபீசர்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

Chitra said...
பாளையங்கோட்டை அப்பளத்திலும் கலப்படமா? அவ்வ்வ்வ்.... :-(//

பாளையங்கோட்டை சித்திரம் இப்பிடி அழுவுது ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

கே. ஆர்.விஜயன் said...
பப்படத்திலும் கலப்படம். என்ன கொடுமை சார் இது. நம்மவர்களுக்கு ஒரே நாளில் கோடீஸ்வரனாகவேண்டும் என்று ஆசை. அதுதான் பிரச்சனை.//

ஹா ஹா ஹா ஹா அதான் களி திங்க அனுப்பி வச்சிட்டார் ஆபீசர்...!!!

செங்கோவி said...

அப்பளத்திலும் கலப்படம் பண்ண முடியுமா...அட ஆண்டவா...

சேட்டைக்காரன் said...

அப்பளத்தில் கலப்படம் செய்தவர்களை உப்பளத்தில் போட்டு அவர்கள் உடம்பில் கொப்பளம் வரும்வரைக்கும் வெயிலில் காயப்போடணும்

விக்கியுலகம் said...

அண்ணே கலக்கிபுட்டீங்க...உங்களுக்கு ஒரு சல்யூட்!

NAAI-NAKKS said...

வணக்கம் தலைவா ...
அருமை....கலக்கல் ....
தொடரட்டும் தாங்கள் பணி ...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு அப்பளத்துல இவ்ளோ வில்லங்கமா?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள் ...

தமிழ்வாசி - Prakash said...

அப்பளம் நொறுங்கிப் போச்சே...

ஆபீசர் சார் குட் ஜாப்.


நம்ம தளத்தில்:
மதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க!

கக்கு - மாணிக்கம் said...

உங்கள் துறையின் செயல்பாடுகள் பெருமை பட வைக்கின்றன. தொடரட்டும்

FOOD said...

//Chitra said...
பாளையங்கோட்டை அப்பளத்திலும் கலப்படமா? அவ்வ்வ்வ்.... :-(//
பயப்படாதீங்க, ஒழிச்சிடலாம்.

FOOD said...

// யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
உங்களால் நாங்கள்
தெரிந்தோ தெரியாமலோ .....
நற் பயன் பெறுகிறோம்.
பன்னாட்டு நிருவனங்கள் ..இன்று
பாய் போட்டு படுத்து கொண்டு
லாபம் சுரண்டுகிறது .
நமது சிறிய வியாபாரிகள்
கள்ளத்தனமாக மாறியது.......மாற்றியது.... அரசு .
கால கொடுமை ...
போகட்டும் ....
பட் உங்கள் நேர்மை எனக்கு பிடித்து உள்ளது .//
என்ன இரட்டை யானையா வந்து மிரட்டறீங்க? கமெண்ட் டபுளா வருது பாருங்க.

FOOD said...

// கல்பனா said...
ஒரு அப்பளத்திற்கு இந்த அக்கபோரா !!!!! முடியலப்பா
சகோ article சூப்பர் ..........//
மாம்பழம்,ஒரு புராணமே உருவாக்கலையா, சகோ.

FOOD said...

// இராஜராஜேஸ்வரி said...
எச்சரிக்கை அளிக்கும் பகிர்வுக்கு நன்றி..//
நன்றி சகோ.

FOOD said...

// "என் ராஜபாட்டை"- ராஜா said...
அப்பளத்திலுமா ? ஆவ்வ்வ்வ்//
அப்பப்ப சொல்லிக்கிட்டே இருக்கிறேன்.

FOOD said...

// "என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று என் வலையில்

Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக//
வந்து பார்த்துட்டோம்ல.

FOOD said...

// அமைதிச்சாரல் said...
இன்றைய அவசர யுகத்துல ஒவ்வொண்ணையும் வீட்ல செய்ய நேரமில்லாமத்தான் ரெடிமேட் உணவுப்பொருட்களை உபயோகிக்கறோம். அதுவும் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இஷ்டப்பட்டு சாப்பிடற ஒரு அயிட்டம்தான் அப்பளம். அதுல கலப்படம் செய்றவங்களை என்னன்னு சொல்றது.//
கால விரயம் பார்ர்க்கும் நாம, உடலே வீணா போகுதுன்னு பார்க்கிறதில்லை, சகோ.

FOOD said...

// Prabu Krishna said...
நல்ல விஷயங்கள் அப்பா. இது போன்று மேலும் பல விஷயங்கள் செய்ய வேண்டும்.
ஆங்கில தளத்துக்கு .com டொமைன் வாங்குங்கள். முதல் ஆண்டுக்கு மட்டுமே .in இல் 100 ௦௦ ரூபாய். ஒரு ஆண்டுக்கு பின் .com மற்றும் .in இரண்டும் கிட்டத்தட்ட ஒரே விலையே. எனவே .com தான் பெட்டர்.//
கருத்துக்களுக்கு நன்றி, பிரபு.
.com, நான் விரும்பிய பெயரில் இல்லையே.

FOOD said...

// ஆமினா said...
பயமா இருக்கு..

இனி உப்பு பாக்கெட் கூட பயந்துட்டு வாங்கணும்.....

அப்பறம் அண்ணா
எண்ணெய் பாக்கெட்ல 60 ரூபாய்ன்னு இருக்கும். ஆனா பெரிய கடைகளில் 45ல இருந்து 50க்கு விக்கிறாங்க. ஆனா பெட்டி கடைல அதே விலை! பாக்குறவங்களுக்கு முன்னது விலைகுறைப்பு,அதிரடி தள்ளுபடி போலவும், அடுத்தது நியாயமா விற்கிறார்கள் என்பது போலவும் தோற்றம் உண்டாகுது... சூப்பர் மார்க்கெட்,மால்களில் இதனை பயன்படுத்தி தான் தங்கள் கடைக்கு விளம்பரன் செய்கிறார்கள். எல்லா பொருட்களின் மீதும் ஒரே விலை (நெகிழ்ச்சியற்றதாக) இருந்தால் பல மோசடிகள் நடக்காது இல்லையா?
பகிர்வுக்கு நன்றி அண்ணா!!!//
உப்பு மட்டுமல்ல,ஒவ்வொரு உணவு பொருளிலும் எப்படில்லாம் கலப்படம் பண்றாங்கன்னு அப்பப்ப சொல்லிட்டே வருகிறேன். வந்து தெரிஞ்சுக்கோங்க.
உணவின் தரம் குறித்து மட்டும் நாங்க பார்க்கிறோம். விலை குறித்த உங்கள் பார்வை நியாயமானதுதான். இன்னும் நிறைய விழிப்புணர்வு வரவேண்டும், சகோ.

FOOD said...

// கோகுல் said...
உங்கள் பணி தொடரட்டும்.
இனியும் கடைக்காரர்களும் தயாரிப்ப்பாளர்களும் அவசியமானவற்றை பூர்த்திசெய்வார்களா?//
செய்யாட்டாலும்,மக்களைக் கேட்க வைப்பதே நமது நோக்கம்.

FOOD said...

// siva said...
என்னது அப்பளமுமா..கலப்படம்
avv..
என்ன சொல்வது தெரியவில்லை
நீங்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் அண்ணாச்சி//
உங்கள் அக்கறைகளை உள்வாங்கிக்கொள்கிறேன். நன்றி சகோதரரே>

FOOD said...

// சென்னை பித்தன் said...
நன்று செய்தீர்கள்!தொடரட்டும் உங்கள் நற்பணி!//
தொடரும் உங்கள் நல்லாசிகளுடன்.

FOOD said...

// asiya omar said...
அப்பாவி மக்கள் அவசரத்திற்கு வாங்கும் அப்பளத்திலும் கலப்படம்,கலப்படம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்..//
பாடங்கள் தொடரும், சகோ.

FOOD said...

// கே. ஆர்.விஜயன் said...
பப்படத்திலும் கலப்படம். என்ன கொடுமை சார் இது. நம்மவர்களுக்கு ஒரே நாளில் கோடீஸ்வரனாகவேண்டும் என்று ஆசை. அதுதான் பிரச்சனை.//
சீக்கிரமே கோடிக்குத் தள்ளிவிட்ருவோம்.

FOOD said...

// MANO நாஞ்சில் மனோ said...
ஆபீசர்கிட்டே பப்பும் வேகாது பப்படமும் வேகாது, சூப்பர் நடவடிக்கை, பாராட்டுக்கள் ஆபீசர்...!!!//
நன்றி மனோ. ஆனால், எனக்கொரு சந்தேகம்:பப்பை வேகவைக்கலாம்,பப்படத்தை எப்படி வேக வைப்பது? :))

FOOD said...

// செங்கோவி said...
அப்பளத்திலும் கலப்படம் பண்ண முடியுமா...அட ஆண்டவா...//
உங்கள் நேசம் ஒன்றுதான் கலப்படமில்லாதது. நன்றி.

FOOD said...

// சேட்டைக்காரன் said...
அப்பளத்தில் கலப்படம் செய்தவர்களை உப்பளத்தில் போட்டு அவர்கள் உடம்பில் கொப்பளம் வரும்வரைக்கும் வெயிலில் காயப்போடணும்//
யாரங்கே, மன்னரின் உத்தரவை அப்படியே செயல்படுத்துங்கப்பா.

FOOD said...

// விக்கியுலகம் said...
அண்ணே கலக்கிபுட்டீங்க...உங்களுக்கு ஒரு சல்யூட்!//
சல்யூட் பலமா இருக்கே. இதுக்கொரு கிச்சிளிக்காஸ் போடமாட்டீங்களே!

FOOD said...

// NAAI-NAKKS said...
வணக்கம் தலைவா ...
அருமை....கலக்கல் ....
தொடரட்டும் தாங்கள் பணி ...//
வாங்க நண்பரே, உங்களைப்போன்றவர்களின் கருத்துக்கள் உற்சாகமளிக்கும்.

FOOD said...

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஒரு அப்பளத்துல இவ்ளோ வில்லங்கமா?//
ஒரு அப்பளம் இல்லை,ஒவ்வொரு வகையிலும் இப்படி வில்லங்கம் இருக்கு.

FOOD said...

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
வாழ்த்துக்கள் ...//
நன்றி கருண்.

FOOD said...

// தமிழ்வாசி - Prakash said...
அப்பளம் நொறுங்கிப் போச்சே...
ஆபீசர் சார் குட் ஜாப்.

நம்ம தளத்தில்:
மதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க!//
நன்றி, தமிழ்வாசி.
அந்த படங்கள் அருமை.

FOOD said...

// கக்கு - மாணிக்கம் said...
உங்கள் துறையின் செயல்பாடுகள் பெருமை பட வைக்கின்றன. தொடரட்டும்//
நீண்ட இடைவேளைக்குப் பின் வருகையும் வாழ்த்தும்-தித்திக்கிறது. நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

அடப்பாவமே

ஆஃபீசர்.. டாட் காம் மாறுனதுக்கு பார்ட்டி எப்போ? ஹி ஹி

FOOD said...

நெல்லைக்கு வாங்க.வச்சிட்டா போச்சு-ஒரு பதிவர் சந்திப்பும்,பார்ட்டியும்.

Rathnavel said...

பதவி உயர்வுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.
வியாபாரிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் அக்கறை இல்லை. மக்கள் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
மிக்க நன்றி.

FOOD said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் ஐயா.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்களுக்காக இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்

அம்பாளடியாள் said...

விழிப்புணர்வூட்டும் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .
வாழ்த்துக்கள் ...........

அம்பாளடியாள் said...

உங்கள் அடுத்த ஆக்கத்தைக் காண ஆவலுடன் வந்தேன் .காணவில்லையே !...

FOOD said...

// அம்பாளடியாள் said...
உங்கள் அடுத்த ஆக்கத்தைக் காண ஆவலுடன் வந்தேன் .காணவில்லையே !...//
தங்கள் ஆர்வத்திற்கு நன்றி, சகோ. பணிப்பளுவின் காரணமாய், வாரம் ஒரு பதிவு மட்டுமே. நாளை புதிய பதிவு வரும்.