இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 26 March, 2010

இறைச்சி தரும் இன்னல்கள்.

இறைச்சி தரும் இன்னல்கள்.
             விடுமுறை நாளென்றால் அன்று சைவ உணவிற்கும் விடுதலை.
               விரும்பி உண்ண விடிகாலையில் சென்று வாங்கி வருவதோ ஆட்டிறைச்சி. 
                 விதம் விதமாய் விருந்து படைக்க வீட்டில் விரும்பிச் செய்வதோ பல ரகம்.

  என்றேனும் எண்ணி பார்த்ததுண்டா எப்படி கிடைக்கிறதிந்த  இறைச்சியென்று?                              
       ஆட்டிறைச்சி கடைக்காரர்  வாரச்சந்தையில் வகை பிரித்து வாங்கி வந்து, எடை பார்த்து  ஆடறுப்பு மனைக்கு ஓட்டி வந்து, அங்கிருக்கும் கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, ஆடு அறுப்பதற்குத் தகுதியானதுதான் எனச்சான்று பெற்று, ஓதி(ஹலால் முறையில்) அறுத்துச் சுத்தம் செய்து மீண்டும் கால்நடை மருத்துவரின் ஆய்விற்கு உட்படுத்தி, ஆட்டின் இடது தொடையில் உள்ளாட்சியின்  அனுமதி முத்திரை பெற்று, கடைக்குக்கொணர்ந்து எடை போட்டு விற்பது நடைமுறை. நடக்கிறதா?
சுத்தமற்ற இறைச்சி தரும் இன்னல்கள் எவை?

இறைச்சியை ஏந்தும் கைகளில் சுத்தம் இல்லையென்றால், தொடர்ச்சியாய் கொடுக்கும் நோய் . 
மனிதன் மலம் கழித்த பின் கிருமிநாசினி கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். சுத்தமாய்க் கழுவாத கைகளால், உருண்டைப்புழு, கொக்கிப்புழு உடனே பரவிவிடும். சால்மோனல்லா என்றொரு பாக்டீரியா சுத்தமின்றி சிறு கடைகளில்  விற்கப்படும் இறைச்சியில் இரண்டு முதல் 45 சதவிகிதம் இரண்டறக்கலந்திருக்குமென்றோர்  ஆய்வு அறிவிக்கிறதாம். வெட்டும் கத்தியில், வீற்றிருக்கும் மேஜையில், கட்டும் தாளிலும் கலந்திருக்கும் பாக்டீரியா உணவை நஞ்சாக்கும். உண்டவுடன் வயிற்றோட்டம் உருவாக்கும். 
                             சுத்தமற்ற நீரில் கழுவப்படும் இறைச்சி சத்தமின்றிக் கொடுக்கும் கொடும் நோய்கள். நீரினால் பரவும் நோய்கள் நிறைய உண்டு. டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை, அமீபியாஸிஸ், வைரஸ் வயிற்றோட்டம் அவற்றில் சில.
                     ஆடு மாடுகளுக்கு அளித்திடும் ஆன்டிபயாடிக், கால்நடைகளின் வளர்ச்சியை விரைவு படுத்தும் ஹார்மோன்கள் இறைச்சியின் வழியே இன்னல்கள் கொடுக்கும்.
Follow FOODNELLAI on Twitter

Thursday 25 March, 2010

தண்ணீருக்கு தடா!

நல்ல விசயமாய் இருப்பதால் உங்கள் முன் வைக்கிறேன்.
எந்த பாக்கெட்டில் கிடைக்கும் சுகாதாரமான குடிநீர்?
சுற்றுபுறம்  கெடுக்கும் - பிளாஸ்டிக் பைகள்
சற்றே சிந்தித்தால் சகலமும் நன்மையே.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 24 March, 2010

கலர் கலர் குளிர்பானங்கள் -சுடச்சுட நடவடிக்கைகள்.


கோடை வெப்பம் தணிக்கவென்று தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் தரத்தில் எப்படி? 

கரும்பு சாரிலும் சாக்கரின் - இனிப்பு கூட்ட  என்று அதற்கோர் விளக்கம். 
அத்தனையும் பிடித்தோம் அதிரடியாய் - அழித்துவிட்டோம் அன்றே. 
இத்தகைய  செயல் இனி தொடராதிருக்க விழிப்புடன் இருப்பதே விவேகம்.
Follow FOODNELLAI on Twitter

Monday 22 March, 2010

கலர் கலராய் குளிர்பானங்கள்-கலப்படம்தான் காணுங்கள்.


கலர் கலராய் குளிர்பானங்கள்-கலப்படம்தான் காணுங்கள்.
    
    கோடை வெயிலின் கொடுமை
       நாவறண்டு போனவுடன் நாடி நாம்
    கடைக்குப்போனால், கலர் கலராய் குளிர்பானங்கள்.
       கண்டவுடன் குடிக்கத் தோணும்.
    உடைத்துக்குடித்தால், உருவாகும் நோய்கள்
       என்னவென்று எடுத்துச் சொல்வேன்
    பிழைத்துக் கொள்வது உங்கள் திறமை:

1.   சுத்தமில்லாத குடிநீரி ல் தயாரிக்கப்படும் குளிர்பானங்களால்
 வாந்தி-பேதி, வயிற்றுவலி வந்து உடல் வற்றிப்போகும்.

2.   அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்கள்    
   சேர்க்கப்படுவதால், புற்றுநோயை உடலில் புதிதாய்த்  
    தோற்றுவிக்கலாம்.

3.   உணவுத்தரமில்லாத கவர்களில் குளிர்பானங்கள் 
   அடைக்கப்படுவதால் உருவாகும் வேதியியல் மாற்றத்தால்,
    உயிருக்கே அது உலை வைக்கலாம்.


என்ன செய்யலாம்?

தாகம் எடுத்தால் சுத்தமான நீரை அருந்தலாம்.

குளிர்ந்த நீரை விட சூடான தேநீரே தாகம் தீர்க்கும்.

துயில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1¼ லிட்டர் தண்ணீர்

தொடர்ந்து குடித்து வந்தால், வெயிலின் கொடுமை விலகிப்போகும்.

இளநீரைப்போல் இனிமை ஒன்றுமில்லை.

சித்த மருத்துவர் உரையில் செய்தி ஒன்று கேட்டேன்:

இளநீரை உணவுக்கு முன் அருந்தினால் விஷமாகும்.

உண்ட பின் அருந்தினால் அதுவே அமிர்தமாகும்.

நுங்கு சாப்பிடலாம்.

நுங்குடன் பதநீர் சாப்பிட்டால் - கவனம் தேவை.
பதநீரில் சாக்காரின் கலப்படம் செய்யப்படுகிறது.

நாங்கள் என்ன செய்கிறோம் - நாளை பார்ப்போமா!

Follow FOODNELLAI on Twitter

Friday 19 March, 2010

தூக்கம் தொலைத்தால் துவண்டு விடுவீர்.

Follow FOODNELLAI on Twitter

Thursday 18 March, 2010

கேசரி பருப்பு

                கேசரி பருப்பின் ஒருபுறம் சதுரமாகவும் மறுபுறம் சரிவாகவும் இருக்கும்.
                 இதன் மூலம்தான் கேசரி பருப்பை மற்ற பருப்பு வகைகளில் இருந்து வேறுபடுத்த இயலும். 
                 கேசரி பருப்பில் உள்ள நச்சு தன்மை வாய்ந்த க்ளுடாமெட், நரம்புகளை பாதித்து, நடக்கவே முடியாமல் செய்துவிடுகிறது.
                கேசரி பருப்பின் நச்சு தன்மையை நீக்கி, உண்ணுவதற்கு உகந்ததாய் மாற்ற, தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நாளைய பொழுது நல்லதாய் விடியட்டும்.  
 
Follow FOODNELLAI on Twitter

Wednesday 17 March, 2010

ஆண்களுக்கு வரும் நோய் தீர்க்கும் பெண் ஹார்மோன்.

Follow FOODNELLAI on Twitter

Tuesday 16 March, 2010

பருப்பிலும் பாழும் கலப்படம் பாரீர்.

                  பருப்பில்லாமல் கல்யாணமா? - இது பெரியோர் வாக்கு. ஒருவரின் முக்கியத்துவத்தை குறிப்பிட இப்படி கூறுவார்கள். நீங்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடக்குமா என்பதைத்தான்  பருப்பில்லாமல் கல்யாணமா? என்று பெரியோர் கூறுவார்கள்.
                     அந்த பருப்பு அன்றாடம் நாம் சமயலுக்கு பயன்படுத்தும் பொருள். அதில் எப்படி கலப்படம் செய்வது, காசு பார்ப்பது? கண்டுபிடித்தான் ஒரு வழியை!
                      துவரம் பருப்பு போன்றிருக்கும் கேசரி பருப்பு -வட மாநிலங்களில் வகை தொகையின்றி விளைந்து  கிடப்பவை. துவரம்பருப்புடன் அதை கலந்து விட்டால் வித்தியாசம் தெரியாது. வினை நமக்குத்தான். 
                 கேசரி பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம் முன்நின்று நம்மை தாக்கும். முடிவில்- நடக்கவே முடியாது. 
                 அரசுக்கு  வந்தன அடுக்கடுக்காய் பல புகார்கள். இந்த மாதம் பருப்பின் தரம் பார்க்க வந்த ரெய்டு. 
                   எப்படி கண்டுபிடிப்பது? கண்களுக்கு புலப்படுமா இந்த கலப்படம்? உங்களில் எழும் இந்த கேள்வி கேட்கிறது எனக்கும். எழுதுகிறேன் நாளை. நன்றி.

Follow FOODNELLAI on Twitter

Monday 15 March, 2010

உணவே மருந்து - பாகற்காயும் பப்பாளியும்

நாம் உண்ணும் உணவே நம் உடலுக்கு மருந்தாகும். அன்று ஆன்றோர் சொன்ன வாக்கானாலும் இன்றும் அவை மெய்யென்று காண்கிறோம். அது குறித்த பத்திரிக்கை செய்திதான். வாசித்தேன் - வழங்குகிறேன்.
Follow FOODNELLAI on Twitter

Sunday 7 March, 2010

வருத்தம் தரும் வலி மாத்திரைகள்.

 
வலி மாத்திரைகளை வகை தொகை இன்றி விழுங்கி வைப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த அண்மைய ஆய்வு. நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள நாடினேன். நன்றி.
Follow FOODNELLAI on Twitter

Friday 5 March, 2010

உப்பை குறைத்தால் உயிர் வாழலாம்.

உப்பில்லா பண்டம் குப்பையிலே!-அன்று.
உப்பை குறைத்தால் உயிர் வாழலாம்- இன்று.
Follow FOODNELLAI on Twitter

Thursday 4 March, 2010

தள்ளாடும் செய்தி என்பதால் சிறிது தள்ளி வந்துவிட்டது.

Follow FOODNELLAI on Twitter

மக்காத பிளாஸ்டிக் முக்காலத்திலும் சோகம் தரும்.

தக தகவென உள்ளே செல்வர் , 
தள்ள வேண்டியதை உள்ளே தள்ளி , 
தள்ளாடி வெளியில் வருவர்!

அங்கிருக்கும் உணவு பொருட்கள் 
அத்தனையும்  சுத்தமானதுதானா? 
அதற்கென ஒரு ஆய்வு.

மக்காத பிளாஸ்டிக் முக்காலத்திலும் முடிவில்லா சோகம் தரும்.
மண்ணை காக்க மாவட்ட ஆட்சியர் எடுத்துள்ள முயற்சிக்கு 
மாநகராட்சியின் பங்களிப்பு. 
மக்களாய் பார்த்து ஒதுக்கும் வரை ஒழியாது பிளாஸ்டிக் 
ஒழித்து விடலாம் ஓடி வாருங்கள்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 3 March, 2010

சத்து மாத்திரைகளின் சித்து விளையாட்டு.


சத்து மாத்திரைகளின் சித்து விளையாட்டு.

         நம் உடலில் வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது நம் உடம்பிற்கு ஒவ்வாத சில பொருட்கள் உருவாகின்றன. அதை நாம்  ப்hP ரேடிக்கல்(FREE  RADICAL)-ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகள் என்கிறோம். நச்சுப்பொருட்கள் நம் உடம்பில் சோ;ந்தால் அவையும் ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகளின் அளவை அதிகாpக்கின்றன. ஆக்ஸிஜன் எனும் பிராண வாயுவே நம் உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். நம் உடலின் செல்கள் பிராண வாயு எடுப்பதை தடுப்பவை- இந்த ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகள். அவை நம் உடலில் உருவாக்கும் பாதிப்புகளே ஒரு மனிதனின் இளமையைக் கொன்று முதுமையைக்கொணர  முதற்சங்கு ஊதுகின்றது. விரைவு படுத்துகின்றன. இரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் தமனிகளில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. நம் செல்களில் அவை உருவாக்கும் பாதிப்புகள் புற்றுநோய் உருவாகவும் வழிவகுக்கும்.
         நாம் இயற்கையாய் உண்ணும் உணவில் காணப்படும் வைட்டமின்-சி வைட்டமின்- செலீனியம் தாது மற்றும் கரோட்டினாய்ட்கள் பிராண வாயு எடுப்பதைத் தடுக்கும் ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகளை ஓட ஓட விரட்டும் தன்மை கொண்டவை. தாவரங்கள் பழம் மற்றும் பு+க்களுக்கு சிகப்பு ஆரஞ்சு மற்றும் அடர் மஞ்சள் நிறங்களைக் கொடுப்பது இந்த கரோட்டினாய்ட்கள். அடர் பச்சை நிறத்தாவரங்களிலும் கரோட்டினாய்ட்கள் அதிகம் காணப்படுகின்றது. கரோட்டினாய்ட்களில் பீட்டா கரோட்டின் அதிகம் அறியப்பட்ட ஒன்றாகும். இவையெல்லாம் இயற்கையாய் நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைத்தால் நம் உடலும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் சத்து மாத்திரை சாப்பிடுகிறேன் என ஸ்டைலாய் செயற்கையான வைட்டமின்- மற்றும் கரோட்டினாய்ட்களை அதிகளவில் எடுப்பவா;களுக்கு ஆபத்து காத்திருக்குது கவனம். வைட்டமின் மாத்திரைகளை அதிகளவில் எடுத்துக்கொள்வது எதிh;மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக அண்மைய ஆராய்ச்சிகள் அம்பலப்படுத்துகின்றன. அலட்சியப்படுத்த வேண்டாம்.
         புகைபிடிக்கும் பழக்கமுள்ளவா;கள்- செயற்கையாக பீட்டா கரோட்டின் செறிவு+ட்டப்பட்ட சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் அது புத்துயிரை ஊட்டுவதற்குப்பதில் புற்று நோயை அவருக்குள் புறப்படச்செய்யலாம். விஞ்ஞானிகளே வியக்கும் விந்தையிது. நித்தமும் விட்டமின்- மாத்திரைகள் 200 மில்லிகிராம் அளவில் உட்கொள்வது உடல்நலம் காக்கும். அதுவே தினசாp நாம் உட்கொள்ளும் விட்டமின்- 400 மி;ல்லிகிராமிற்கு மிஞ்சினால் இதய நோய்கள் உதயமாக உதவுமாம். விட்டமின்-சியும் செலீனியமும் விவகாரத்தில் சிக்கவில்லை. எனினும் செயற்கையாய் உருவாக்கப்பட்டவையெனில் குறைந்த அளவே எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
         கலர் கலர்; பழங்களும் சமைக்காத காய்கறிகளும் நம் உணவில் அதிக அளவில் இடம் பிடித்தால் விட்டமின்களும் பீட்டா கரோட்டினும் இயற்கையாய் உடலில் சேரும். முளைவிட்ட கோதுமை மற்றும் நவதானியங்களில் விட்டமின்-இயும் புளிப்புச் சுவையுள்ள பழங்களில் விட்டமின்-சியும் செறிந்துள்ளன. நாம் உண்ணும் உணவில் அதிக பழங்களும் காய்களும் இடம் பெற்றால் நம் வாழ்வும் பெற்றிடும் இனிமை. சத்து மாத்திரைகளை சற்றே தள்ளி வைப்போம்.
Follow FOODNELLAI on Twitter