இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 22 April, 2010

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்போம்.தவித்த வாய்க்கு தரமான தண்ணீர்!

       தரமான தண்ணீர் தரக்கேட்டு தவிக்கின்ற மக்கள்.
       தரம் கெட்ட தண்ணீரை நிதம் வழங்கும் வேன்கள்.

ஆறு குளங்களிலுள்ள நீர் அப்படியே குடிப்பதற்கு ஏற்றதல்ல. அவற்றில் பல வகையான அசுத்தங்கள் கலந்திருக்கும். நம் கண்ணிற்குத் தெரிபவை சில. தெரியாதவை பல. தண்ணீரில் மிதக்கும் தூசிகள், கரைந்திருக்கும் மண் படிவங்கள், மனிதக் கழிவுகள் இவையே நீரைக் கலங்கலாக்கும் காரணிகள். இவை தவிர, மண்ணிலுள்ள தாதுக்கள் தண்ணீரில் கரைந்திருக்கும். அவை தண்ணீருக்குச் சுவையளிக்கும். இந்நீரை அப்படியே பருகினால் நீரினால் பரவும் நோய்கள் நம்மைத் தாக்கும்.
காசு கொடுத்து வாங்கி 
 கவலையின்றி அருந்தும்  
மாசுபட்ட நீர்  மஞ்சள் காமாலை
 டைபாய்டு போன்ற நோய்கள் கொடுக்கும்.
மாசுபட்ட நீர்  மட்டுமல்ல  
மண்ணிலுள்ள தாதுக்களும் நீரில் கரைந்து  
மனிதர்க்கு நோய்கள் தரும்
 நைட்ரஜன் கலந்த நீர் ரத்தத்தை பாழ்படுத்தி 
 நம் உடலெங்கும் நீல நிறமாக்கும்
 இரும்பு போன்ற தாதுக்கள் அதிகமிருந்தால்,  
விரும்பி நாம் உண்ணும் உணவை  
செறிக்காதிருக்கச் செய்து 
 நம்மை செயலிழக்கச்செய்யும்.  
புளுரைட் மிகுந்திருந்தால்,  
பற்களும் எலும்பும் பலமிழந்து போகும்

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், உணவுக்கலப்பட தடைச்சட்டத்தில், பாக்கட் குடிநீருக்கு ஐம்பத்தொரு வகை ஆய்வுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

       முத்திரை பெற இத்தனை கஷ்டங்களா
     இத்திரை அகற்ற எத்தர்கள் கண்டுபிடித்தனர்  
  மூலிகைத் தண்ணீர்.
  .எஸ். தர முத்திரை வேண்டாம்.  
 ஐம்பத்தொரு வகை டெஸ்டும் வேண்டாம்.  
எச்சரிக்கை தேவை. .
இவற்றில் பல போலி
 கிணற்று நீரைப்பிடித்து  
நறுமண திரவியம் கலந்து 
 மூலிகை நீரென்று நம் 
 முன் வைக்கின்றனர்

நாம் வாங்கும் ஒவ்வொரு குடிநீர்  பாட்டிலில்-பாக்கட்டில் இருக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள் என்னென்ன?

    தயாரிப்பு தேதி                         பேட்ச் எண்
   .எஸ்.. தர முத்திரை         
   தயாரிப்பாளாரின் முழு விலாசம்.
   எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது
       இந்திய தர அமைவனத்தின் வலைதளத்திலும், தரமுத்திரை பெற்ற நிறுவனங்களின் பட்டியல் காணலாம்.  
பார்த்து அறிந்து தரமான தண்ணீரைத் தேர்ந்தெடுத்து அருந்துவோம். தொல்லைகள் களைவோம்.
Follow FOODNELLAI on Twitter

Monday 19 April, 2010

உடல்நலக் குறிப்புகள் உங்களுக்கே!

அருமருந்தாகும் ஆரஞ்சுப் பழ ரசம்:துரித உணவுகளைத் துவம்சம் பண்ணுபவரா நீங்கள்?


விருந்தில் விதவிமாய் சாப்பிட்டபின் வயிற்றில் எரிச்சல் வருகின்றதா?


விருந்தில் படைக்கும் வித விதமான உணவுகளும், துரித உணவுகளும் “ரியாக்டிவ் ஆக்ஸிஜனை” உருவாக்குகின்றன. அவை இரத்தத் தமணிகளில் எரிச்சலை ஏற்படுத்தும்.


உணவில் சேர்க்கப்படும் மசாலாபொருட்களும் ரியாக்டிவ் ஆக்ஸிஜனை உருவாக்கும்.


இத்தகைய ரியாக்டிவ் ஆக்ஸிஜனால் நாளடைவில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்பட்டு பல இன்னலைத் தரும்.


அமெரிக்க ஆய்வு ஒன்று, ஆரஞ்சு பழ ரசத்தை இதற்கு அருமருந்தாய் அறிவித்துள்ளது.

வயிறு புடைக்க உண்டாலோ, துரித உணவை துவம்சம் செய்தாலோ, ஆரஞ்சு பழ ரசம் பருகுங்கள். ரியாக்டிவ் ஆக்ஸிஜனை கட்டுப்படுத்தி ஜீரணத்தை எளிதாக்கும்.
புற்று நோயைக் குணப்படுத்தும் பப்பாளி இலைச்சாறு:
பப்பாளி இலைச்சாறு அருந்தினாலும், இலையை உலர்த்தி தேநீருடன் பருகினாலும் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகின்றது. அண்மைய ஜப்பானிய நாட்டு விஞ்ஞானி ‘நம்டங்’ அவர்கள் நடத்தியஆய்வின் முடிவு இது.

கல்லீரலைக் காக்கும் மஞ்சள்:
மைக்கேல் டிரானர் எனும் ஆஸ்திரிய நாட்டுப்பேராசிரியர் எலிகளை வைத்து நடத்திய ஆராய்ச்சியில், மஞ்சளில் உள்ள “குர்குமின்”, எலிகளின் கல்லீரலில் எரிச்சல், சேதம், செல்கள் அடைப்பு ஏற்படாமலிருக்கச் செய்வதைக் கண்டறிந்துள்ளனா; இனி கல்லீரல் நோய் களைய கண்டுபிடிக்கப்படும் மருந்துகளில், மஞ்சளுக்கும் பெரும் பங்கிருக்கும்.


மார்பக புற்றுநோயை உருவாக்கும் மல்டி விட்டமின்கள்:இது சுவிட்ச்சர்லாந்து சுவாரசியம். 49 முதல் 83 வயது வரையுள்ள 35,000 பெண்களுக்கு பத்தாண்டுகள் சத்து மாத்திரைகள் நித்தமும் வழங்கப்பட்டன. அவர்களில் 19 சதவிகிதம் பேருக்கு மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன.


சத்து மாத்திரைகளிலுள்ள ஃபோலிக் அமிலம், உடலின் உட் பகுதிகளில் ஏற்படும் கட்டிகளை வேகமாக வளரச் செய்வதை பல ஆய்வுகள் நிச்சயப்படுத்தியுள்ளன.

இயற்கையாய் நம் உணவிலிருந்து உடலில் சேரும் சத்துக்களே சாலச் சிறந்தது.

தூக்கம் தொலைப்பவரா? தொல்லைகள் உங்களுக்கே!

அதிகமாய் தூங்குவதும், தூக்கம் தொலைப்பதும் தொல்லைகள் தரும். உண்ணும் உணவைவிட, தூங்கும் நேரமே கொழுப்பை நம் உடலில் தேங்கச்செய்கிறது. நாற்பதைக் கடந்தவர்களிடம் காணாத இந்த பிரச்சனை, நாளும், இளைஞர்களை இம்சிக்கிறதாம். ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்குதல் நலம்.

காபி குடிக்க நல்ல காலம் எது?


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியிது. நண்பர்கள் புடை சூழ, நல்ல வெளிச்சத்தில் நாம் அருந்தும் காபி நம்மை சுறுசுறுப்பாக்கும். நாக்கின் சுவை அரும்புகள் நன்றாய் சுவையுணர காலை பதினொன்றே காபி குடிக்க ஏற்ற நேரம்.
Follow FOODNELLAI on Twitter

Sunday 11 April, 2010

புகையிலை உண்டால், புற்றுக்கு புது முகவரி அளிக்கும்.

புகையிலை உண்டால், புற்று நோய்க்கு 
புது முகவரி அளிக்கும்.
வகை வகையாய் வந்திறங்குது                   
வாசனை புகையிலை. 
வாங்கி உண்பதால் 
வந்து சேர்ந்திடும் வருத்தம் உங்களுக்கே. 
பான் என்றும் குட்கா என்றும் 
பல வகை உண்டு 
வாய் புற்று நோய் 
வருவது  அதனாலே.   

Follow FOODNELLAI on Twitter

Thursday 8 April, 2010

சாலையோர சாபங்கள்.

மாலை மயங்கும் வேளை. 
சாலை ஓரம் உணவகங்கள் 
சாரி சாரியாய் அணிவகுக்க 
தொடங்கிய வேளை. 
ஆணையரின் அறிவுறுத்தலில் 
 சாலையோர உணவகங்களை 
சற்றே பார்ப்போமென்று 
சக தோழர்களுடன் சென்றோம்.
மாநகர் நல அலுவலர் மரு. கலு சிவலிங்கமும் 
மனமுவந்து வந்தார். 
நாங்கள் கண்ட காட்சி! 
தேயிலையை தொட்டு பார்த்தால், 
தண்ணீர் விட்டு பார்த்தால்  
தரம் நிறம் மங்கிய சக்கையில் செயற்கை 
நிறம் ஏற்றியே நித்தம் நம்மை ஏமாற்றும் சிலர். 
அப்படியே பறிமுதல் செய்து அழித்துவிட்டோம்.
சுவையூட்டி என்று கூறி மோனோ சோடியம் க்ளுடாமேட் 
வகை தொகை இன்றி துரித உணவில் தூவபடுகிறது. 
செயற்கை நிறமேற்றும் செப்படி வித்தைகென 
இயற்கைக்கு மாறாய் இன்னும் பல.
புற்றுக்கு புது பாதை அமைக்கும் 
எத்தனையோ அவலங்கள்.    
பறிமுதல், பப்ளிசிட்டி பேப்பரில், அழித்தல், அபராதம் 
படித்தாவது தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். 
உண்ணும் முன் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து உண்ணுங்கள்.நன்றி.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 6 April, 2010

நேற்று மாலை நெல்லையில்

நேற்று மாலை நெல்லையில் நடந்த ரோட்டரி மீட்டிங்.
கலப்படம் எப்படிஎல்லாம்  கவலை அளிக்கிறதென்று
 கால் மணி நேரம் பேசினேன். அதன் பின் அவசரம் அவசரமாய்
கேள்வி நேரம். நான் பேசியதை விட சந்தேகங்களே அதிகம். அத்தனைக்கும் பதில் சொல்லி வந்தேன். அதன் நினைவுகள் உங்களோடு பகிர்ந்துகொள்ள.
Follow FOODNELLAI on Twitter

Monday 5 April, 2010

வெயிலில் காயும் காவலர்க்கு குளுகுளு அறை


                       சனிகிழமை சாயங்காலம் கடைதெருவிற்கு போனேன்.  கண்டேன் ஒரு செய்தி ஜூவியில். நண்பர் ! ( வயதானாலும் வாலிபர் அவர்) திரு .லயோலா ஜோசப் அவர்கள் நல்ல பல விசயங்களை ரசித்து செய்பவர். சென்றுதான் பாருங்களேன்
http://foodindia.org.in/images/traffic-police-kiosk.
                       வெயிலில் காயும் காவலர்க்கு குளுகுளு அறை. கொளுத்தும் வெயிலில் காத்து கிடக்கும் காவலர்க்கு கனவு திட்டம். செய்துவிட்ட நேர்த்தி. மதுரை சென்ற பொது நானும் நேரில் பார்த்தேன். 
                      இதுவும் உடல்நலத்திற்கு தொடர்புடையதுதான். 
Follow FOODNELLAI on Twitter

Sunday 4 April, 2010

மெழுகு பூசிய ஆப்பிள்கள் மெல்ல கொல்லும் நிஜங்கள்.


மெழுகு பூசிய ஆப்பிள்கள் மெல்ல கொல்லும் நிஜங்கள்.  
அன்று ஆட்டிறைச்சியில் அநியாயங்கள் பார்த்தோம்.  அடுத்ததாய் ஆப்பிள் பழங்களில் அதிரடி சோதனை.   
                இந்திய ஆப்பிள்கள் விளைச்சலில் இளைத்ததால்  வந்திறங்கின வெளி நாட்டு ஆப்பிள்கள். பழங்கள் மட்டுமா வந்தன! அத்தனை  பழங்களையும் அழுகாமல் வைத்திருக்க மெழுகு பூசி மினுமினுக்க வைக்கும்    வித்தையும்  வந்திறங்கின. தேன் மெழுகு பூசினால் வேறொன்றும் செய்யாது. பெட்ரோலிய கழிவாய் வரும்  மெழுகை அல்லவா பூசுகிறார்கள். 
          இந்த பெட்ரோலிய கழிவு மெழுகு மெல்ல கொல்லும் இது நிஜம். வீடுகளில் ஏற்றுகின்ற மெழுகுவர்த்தி   செய்ய பயன்படும் மெழுகை மனிதன் உண்ணும் ஆப்பிள் மீது பூசுவதால், அவை குடலில் தங்கி விடும். குடல் அழற்சி உருவாகி புற்று நோயை புறப்பட்டு வர செய்யும். 
         எனவே, எச்சரிக்கை தேவை. ஆப்பிள் பழங்களை அப்படியே கடித்து சாப்பிட வேண்டாம். தோல் சீவி உண்பதே இப்போதைக்கு பாதுகாப்பு.  


                           தெரிந்ததை சொல்லி விட்டேன். தெரிவு செய்வது உங்கள் திறமை.
                          சாலையோர உணவகங்களில் சாயங்கால வேளை சாப்பிடும் விரைவு உணவு விபரீதங்களை  விரைவில் பாப்போம்.
                         நன்றி எல்லாம் நாட்டு மக்களுக்கு நாளும் இதை எடுத்து சொல்லும் பத்திரிக்கை துறை நண்பர்களுக்கே. 
Follow FOODNELLAI on Twitter