ஈரான், ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் (பெஷாவர்),துருக்கி போன்ற வெளிநாடுகளிலும், இந்தியாவில், காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும், ஃபெருல்லா (FERULA ALLIACES, FERULA RURICAULIS)எனும் சிறு மரத்திலிருந்து வெள்ளை, கருப்பு,கருஞ்சிவப்பு நிறங்களில் கிடைக்கும் பிசினிலிருந்து தயாரிக்கப்படுகிறது காயம்.
தண்ணீரில் கரைத்தால், பால் நிறமாகும் என்பதால், பால் காயம் என்றோர் பெயரும் இதற்கு உண்டு. காரமான சுவையும் வீரியமும் காயத்தின் குணம். காயம் எளிதில் செரிப்பதுடன், உடனிருக்கும் உணவையும் எளிதில் செரிக்கச்செய்யும். பசியைத்தூண்டும். வயிறும் குடலும் சுறுசுறுப்பாய் வேலை செய்வதால், வாயுக்களை குடலில் தங்க விடாது. வயிற்று வலி, உப்புசம் வந்த வழியே திரும்பிப்போகும்.
வாயுக்கள் வயிற்றிலிருந்து வெளியேறுவதால், இதயமும், நுரையீரலும் நன்றாய்ச் சுருங்கி விரிந்து இதமாய்ச் செயல்படும்.
நாக்கில் சுவைத்தால், உரைக்கும். இதில், ஆறிலிருந்து இருபது சதவிகிதம் ஆவியாகும் எண்ணெயிருப்பதால், பெருங்காயத்தைத் தீயில் சுட்டால், முழுவதும் கற்பூரம்போல் எரிந்து விடும். எனினும், இதனை அப்படியே பயன்படுத்துவதைவிட, எண்ணெயில் பொரித்து பயன்படுத்துதல் சாலச்சிறந்தது.
கருப்பையைக் காக்கும் இந்த காயமென்பதால், பிரசவித்த தாய்மார்க்கு, காயத்தைப் பொரித்து, இஞ்சி, பூண்டு, பனைவெல்லம் சேர்த்துக் கொடுப்பது அருமருந்தாகும்.
கருப்பையைக் காக்கும் இந்த காயமென்பதால், பிரசவித்த தாய்மார்க்கு, காயத்தைப் பொரித்து, இஞ்சி, பூண்டு, பனைவெல்லம் சேர்த்துக் கொடுப்பது அருமருந்தாகும்.
