இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 28 July, 2010

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சென்னையில் நடைபெற்ற பயிற்றுநர் களுக்கான பயிற்சி நிகழ்வுகள்.


உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சென்னையில் நடைபெற்ற பயிற்றுநர்களுக்கான பயிற்சி நிகழ்வுகள்.

           மத்திய அரசு, உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது முந்தைய பதிவில் தெரிவித்திருந்தேன்.
           மத்திய அரசின், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு, தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி  மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சிறந்த முறையில் பணியாற்றிவரும் உணவு ஆய்வாளர்களில் தலா பத்து நபர் களைத் தேர்ந்தெடுத்து, சென்னையில் 26.07.10 முதல் 30.07.10 வரை நடத்தும் பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்பில், அதன் ஒருங்கிணைப்பாளார் டாக்டர்.டோங்ரா அவர்கள் எடுத்த பயிற்சி வகுப்பு மற்றும் நான் அரசு தரப்பிற்குத் தேவைப்படும் தீர்ப்புக்கள் குறித்து எடுத்த  வகுப்பின் படங்கள் கீழே உள்ளன.
     என்னையும் தீர்ப்புகள் குறித்து விளக்க அனுமதித்த அனைவருக்கும் நன்றி.
                        இறுதி நாளில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் சென்னை இயக்குனர் திரு. ஆர். விஜய் அவர்கள் கலந்து கொண்டு, அனைவருக்கும் சான்றுகள் வழங்கினார்.  
                          நான் சான்று வாங்க மேடை ஏறியபோது, டாக்டர். டோங்கரே, நான் தீர்ப்புகள் குறித்து ஒரு நாள் விளக்கியதை நினைவு கூர்ந்து சிலாகித்தார்.
 
PROCEEDINGS IN THE TRAINING OF TRAINERS PROGRAM OF SOUTHERN STATES’ FOOD SAFETY OFFICERS AT CHENNAI.

                        The Central Government is keenly taking steps to implement the Food Safety and Standards Act, 2006. In an effort in that way, the Food Safety and Standards Authority of India has organized a five days Training of Trainers Program for Food Safety Officers of Southern states viz. Tamilnadu, Karnataka, Kerala, AndhraPradesh, Pondichery and Andaman and Nicobar Island. 
                        The following subjects are discussed:
DAY-1: FOOD NUTRITION & FOOD SAFETY.
              FOOD PROCESSING &TECHNOLOGY
              EMERGING ISSUES IN FOOD PROCESSING
              CODES INDIA- ROLES &RESPONSIBILITIES 
DAY-2:FOOD SAFETY & STANDARDS ACT,2006
              FUNCTIONS,DUTIES&RESPONSIBILITIES OF FOOD SAFETY REGULATORS
              IMPLEMENTATION OF FSS ACT,2006
             OFFENCES IN FOOD TRIALS(CASE STUDY)&PROCEDURE TO LAUNCH     
             PROSECUTION.
            (AFTER HIS CLASS, FOOD INSPECTOR A.R.SANKARALINGAM DISCUSSED THE CASELAWS IN FAVOUR OF PROSECUTION)
DAY-3:INSPECTION OF FOOD ESTABLISHMENTS,MANUFACTURING UNITS
             SPECIAL ESTABLISHMENT INSPECTION.
            FIELD VISIT TO FOOD PROCESSING UNIT.
            (WE VISITED THE "FRUITNIK" COMPANY AT CHENNAI) 
                                          
DAY-4 SAMPLING OF FOOD ; FOOD LABORATORY,VISIT TO FOOD LAB
             We visited "Sargam Laboratories" at Chennai which is well  equipped with modern equipments to analyse food, food packaging materials, aflatoxins,etc. Dr.Annapoorani explained in detail. A very nice place to visit and a place which every one should visit.
DAY-5-CONCEPTS OF FOOD SAFETY & QUALITY MANAGEMENT
             FOOD SAFETY PLAN, FOOD SURVEILANCE, RISK ANALYSIS.
THIRU.VIJAY SARDANA AND MS.CHINMAYEE TOOK CLASSES ABOUT FOOD SURVEILANCE & CONCEPTS OF FOOD SAFETY & QUALITY MANAGEMENT RESPECTIVELY.
                                      
                              
                                 THE SESSION ENDED IN THE EVENING WITH VALEDICTION.TAMILNADU DIRECTOR THIRU.R.VIJAY DISTRIBUTED THE CERTIFICATES TO THE PARTICIPANTS. DR.DONGARE GAVE SPECIAL NOTES ABOUT MY PRESENTATION INFRONT OF THE DIRECTOR, WHILE I WENT TO RECEIVE THE CERTIFICATE. I'M VERY GRATEFUL TO HIM FOR HONOURING ME IN THE PRESENCE OF ALL PARTICIPANTS.

            DR.PANDIAN AND DR.SRINIVASAN FROM FSSAI,CHENNAI ALSO ENCOURAGED US THROUGHOUT THE PROGRAM.
                 OUR JOINT-DIRECTOR(PFA) DR. THIRU.SATHASIVAN IS COORDINATING THE PROGRAM AND HIS PRESENCE THROUGHOUT THE DAYS IS ENERGISING US. WE THANK THE J.D(PFA) & HIS ACCOMPANY Thiru.SOUNDARARAJAN,STATISTICAL OFFICER, WHO'S INVOLVEMENT ARE COMMENTABLE ONE.
               This is the foto of Dr.Jidentra P Dongare, the Co-ordinator, Thiru.Venkateswaran,Dr. Manvi sharma,explaining the Food Safety Officers about the latest developments of the Act.
             I AM THANKFUL TO THE DIRECTORATE OF PUBLICH HEALTH FOR HAVING MADE THIS WORTHY OPPURTUNITY FOR ALL OF US. 
                      I TAKE THIS OPPURTUNITY TO THANK OUR DIRECTOR OF MUNICIPAL ADMINISTRATION,CHENNAI AND THE CORPORATION COMMISSIONER, TIRUNELVELI FOR HAVING PERMITTED ME TO ATTEND THE TRAINING PROGRAM.

Follow FOODNELLAI on Twitter

Tuesday 27 July, 2010

விகடன் வரவேற்பறையில் “உணவு உலகம்”

                 விகடன் வரவேற்பறையில் “உணவு உலகம்”
                     உணவு உலகப்பதிவு ஒன்றில் கருத்துக்களைப் பதிவு செய்த நண்பர் ஒருவர் , தங்களின் “உணவு உலகம்”, விகடன் வரவேற்பறையில் இடம் பெற்றுள்ளதாகப் பதிவு செய்திருந்தார். எட்டே மாதத்தில் இத்தனை வளர்ச்சியா?  எங்கே போய்கொண்டிருகிறோம் நாம்! எட்டி எட்டிப் பார்த்து, பல “லிங்”குகளைத் தட்டிப்பார்த்து, “இளமை விகடனி”ன் வரவேற்பறை அடைந்தேன். “இளமைத்தளம்-படைப்பாற்றலுக்கான களம்” என்ற பக்கத்தில் “குட் ப்ளாக்ஸ்” வரிசையில் வந்தது--“உணவு உலகம்”. மகிழ்ச்சியான செய்தி. அதைவிட மகிழ்ச்சி, உங்கள் அனைவரின் மனதில் இடம்பிடித்தது. நன்றிகள் பல-விகடன் ஆசிரியர்  குழுவிற்கு-தங்கள் வரவேற்பறையில் தனியிடம் தந்ததற்கும், தகவல் அளித்த நணபருக்கும்.

அதன் லிங்கினை கீழே கொடுத்துள்ளேன்:
http://youthful.vikatan.com/youth/NYouth/Blogs6.asp


Follow FOODNELLAI on Twitter

Monday 26 July, 2010

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.


          சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.           இனிப்பு என்றால் இனிப்பது இளஞ்சிறார்க்கு மட்டுமல்ல. அதைக் கண்டால், ஐம்பதிலும் ஆசை வரும். ர்க்கரை நோய் வந்தவர்களுக்கோ, திருமண வீட்டில் பாயாசத்தைப் பார்த்தவுடன், அருந்தாமல் பந்தியிலிருந்து எழும்பவும் மனம் வராது. எத்தனை நாள்தான் இன்சுலினை ஏற்றுவது? பாயாசம் அருந்திவிட்டு, பலவித மருந்துகளை உள்ளே தள்ளுவது? மூச்சிரைக்க மூன்று மைல் துhரம் நடந்தாலும் ரத்தத்தில் ர்ககரையின் அளவு குறையாது.
           இதோ  உங்களுக்கான இனிப்பான செய்தியிது. கரும்பிலும் இனிப்பானது, இனிப்பு நோயாளிகளை இம்சிக்காது. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஸ்டீவியா என்றோர் மூலிகைச்செடி. பராகுவேயில் பயிரிடப்படும் இந்த மூலிகைச்செடியின் இலைகளைப் பறித்து காயவைத்து, இடித்து பொடியாக்கி இன்சுவைக்காய் அந்நாட்டு மக்கள் இன்றளவும் பயன்படுத்துகின்றனர். சர்க்கரையைவிட 200 மடங்கு இனிப்பானது.
           நறுமணம் மிக்க இச்செடியை நம் வீட்டுத் தோட்டத்திலும் பயிரிடலாம். 10 முதல் 32 டிகிரி  வெப்ப நிலையில் பக்குவமாய் வளரும். பராமரிப்பது மிக மிக எளிது. இதன் இலை மட்டுமல்ல, தண்டும் விதையும் இனிப்பிற்காக ஏங்கும் வாய்க்கு இனிக்கும் சர்க்கரையாகும். இதை உண்பதால் கலோரிகளில்லை. இன்னும் ஒருபடி மேலாய், இன்சுலின் சுரக்க உதவும். பக்க விளைவு பாதிப்புகளும் இல்லையென்பதால், நிச்சயம் ஒருநாள் ஸ்டீவியா நிலை கொள்ளும்.
Follow FOODNELLAI on Twitter

Friday 23 July, 2010

சிறுநீரகக்கல்லை சீராக்கும் எலுமிச்சை.

                                   சிறுநீரகக்கல்லை சீராக்கும் எலுமிச்சை.

                 எலுமிச்சை முதலில் தோன்றிய இடத்திற்குரி பெருமைஇந்தியாவைச்சேரும். பல விஷக்கடிகளுக்கு அருமருந்தாகும் எலுமிச்சை, நல்லதொருகிருமிநாசினியுமாகும்.


100 கிராம் எலுமிச்சையில்:
சக்தி                                 -  29 கி.கலோரி
கொழுப்பு                        -  0.3 கிராம் 
புரதம்                              -  1.10 கிராம்
நார்ச்சத்து                    -  2.8 கிராம்                    
ர்க்கரைச்சத்து        -  2.5 கிராம்
உயிர்ச்சத்து பி-1      -  0.040 மி.கி.
உயிர்ச்சத்து பி-2      -  0.020 மி.கி.
உயிர்ச்சத்து பி-3      -  0.100 மி.கி.
உயிர்ச்சத்து பி-6      -  0.080 மி.கி;
உயிர்ச்சத்து சி          -  53.00 மி;.கி;.
சுண்ணாம்புச்சத்து   -  26.00 மி.கி.
இரும்புச்சத்து             -  0.060 மி.கி.
மக்னீசியம்                   -  8.00  மி.கி.
பொட்டாசியம்            - 138.00 மி.கி
                                அண்மைய அமெரிக்க  ஆராய்ச்சியில், எலுமிச்சைச்சாறு சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுப்பதில் பெரும்பங்கு வகிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எலுமிச்சையிலுள்ள சிட்ரஸ், சிறுநீரகத்தில் கல் உருவாகுவதைத் தடுக்கிறது.  புளிப்புச் சுவையுள்ள பழங்களில், ஆரஞ்சிலும், எலுமிச்சையிலும் சிட்ரஸ் சத்து சற்று அதிகமாக உள்ளது. நாம் அன்றாடம் உண்ணும் உணவில் உள்ள உப்பு, கால்சியம், புரோட்டின் ஆகியவற்றின் பாதிப்பைக் குறைக்க எலுமிச்சைச்சாறு மிகவும் உதவுகிறது. உப்பிலுள்ள கால்சியம்தான் சிறுநீரகக்கல் உருவாக பெரும்பங்கு வகிக்கிறது.
        தினசரி  4 ஸ்பூன் எலுமிச்சைச்சாறை 2 லிட்டர் தண்ணீருடன்  சேர்த்து, சிறிது சிறிதாகக் குடிக்கச் செய்தபோது, அவ்வாறு குடிப்பவர்களின் சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்பு ஒரு பங்கிலிருந்து, 0.13 பங்காகக் குறைந்துள்ளது. உணவில் உப்பைக்குறைப்பதன் மூலமும், சிறுநீரகக்கல் உருவாகாமல் தடுக்கலாம்.


                        அதுமட்டுமல்ல, எலுமிச்சைச்சாறை சூடான நீரில் கலந்துகுடித்தால், வயிற்றுப்பொருமல். வாந்தி வருவதைத்தடுக்கும். மலச்சிக்கல்மறைந்து போகும். எலுமிச்சையிலுள்ள விட்டமின்-சி தோலைப்பளபளப்பாக்கும். தோலின் உள்ளிருந்து உயிரோட்டம் அளிப்பதால், முதுமைசற்றுத் தள்ளிப்போகும். முகம் முன்னிலும் பளபளப்பாகும்.


                        தொண்டையில் கிச் கிச்சா? தொடர்ந்து எலுமிச்சைச்சாறுகலந்தநீரில் வாய் கொப்பளித்து வந்தால் வந்த வழியே வைரஸ்ஓடிப்போகும். வெந்நீரில் தேனும் எலுமிச்சைச்சாறும் கலந்து தொடர்ந்துகுடித்து வந்தால், குண்டு உடம்பும் கொடி இடையாகும்.

                        உயர் இரத்த அழுத்தம், ஆஸ்த்துமா போன்றவற்றை ஓடஓடவிரட்டும். சிறுநீரைப் பெருக்குவதால், வாதநோய், மூட்டு வலிவராமல்போகும். எழுபதுக்கு மேல் எடையுள்ளவரெனில், ஒரு டம்ளர் தண்ணீரில், ஒருஎலுமிச்சம்பழத்தைப் பிழிந்து இருமுறை அருந்தலாம். அதைவிட எடைகுறைந்தவரெனில், ஒரு டம்ளர்  தண்ணீரில், பாதிஎலுமிச்சம்பழத்தைப் பிழிந்துஇருமுறை அருந்தலாம்.
                       அதைவிட  அருமை! எலுமிச்சை பழரசம் சேர்த்த தேநீர். பால் சேர்க்காத தேநீரில் சில துளிகள் எலுமிச்சம்பழ சாறு சேர்த்து அருந்தினால் அத்தனை சுவை. உடலுக்கும் நல்லது. உற்சாகமும் கூடவே வந்து சேரும்.

                            
Follow FOODNELLAI on Twitter

Saturday 17 July, 2010

பீர் குடித்தால் உற்சாகம் பீறிடுதாம்.

                                        பீர்  குடித்தால் உற்சாகம் பீறிடுதாம்.

                             குடி  குடியைக் கெடுக்கும்.
             குடிபழக்கம் குடும்பத்தை கெடுக்கும்.
 


              மதுபான பிரியர்களின் மனதைக்குளிர்விக்கும் மகிழ்ச்சியான செய்தியிது. அண்மைய ஆராய்ச்சி ஒன்றின் முடிவிது. மதுபானங்களிலேயே,
“உடலுக்கு உகந்ததென பீரைக் கூறலாம். அளவாய்ப் பீரைக்குடித்தால், அளவிலா இன்பமுண்டு. அதுவே, அளவிற்கு மிஞ்சினால், சொல்லொண்ணாத் துயரைத்தரும்”, என்பது அந்த ஆராய்ச்சியின் முடிவு.
                         மதுபானப்பிரியர்கள் மத்தியில், பீரென்றால் சற்றே தரம் தாழ்ந்ததென்றோர்  எண்ணம் உண்டு. இதை பெண்களின் பானமென்று கழிப்பவர்களுமுண்டு. பீரின் குணங்களறிந்தால், உற்சாகம் பீறிடும்.
                       பீரில், கொழுப்புச்சத்து இல்லை. பசியைத்தூண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். விமல்குமார் எனும் சமூகவியலார் , “பீர்  நம் நினைவுகளுக்கும், பேச்சிற்கும் இதமளிப்பதாக”; கூறுகிறார்.
                       பீரிலுள்ள உயிர்ச்சத்து பி-6, இதய நோய்களை ஏற்படுத்தும் அமினோ அமிலங்கள் உடலில் உற்பத்தியாகாமல் தடுக்கின்றன. இரத்தநாளங்கள் இனிதே இயங்கவும், உடலும் மனதும் உற்சாகமடையவும் செய்கின்றன. பீரிலுள்ள உயிர் சத்துக்கள், சரிவிகித சம உணவை நாம் உண்ண உதவுகின்றன. பீரிலுள் நார்ச்சத்தும், சிலிக்கான் சத்தும், முதுமையில் எலும்புத்தேய்வு நோய் நம்மை அண்ட விடாமல் தடுக்கின்றன.
                         இத்தனையும் ஒரு பாட்டில் பீரை உவகையுடன் குடிப்போர்க்கே. போதை தலைகேற வேண்டுமென பீர்  பாட்டில்கள் பல உள்ளே தள்ளினால் பானை வயிறும், பல வகை நோயும் வந்து பாடாய்ப்படுத்துமுங்கோ!
குடி  குடியைக் கெடுக்கும்.
             குடிபழக்கம் குடும்பத்தை கெடுக்கும்.
Follow FOODNELLAI on Twitter

Monday 12 July, 2010

சுத்தம் சோறு போடும் - பாகம்-2

  
                         மாநகர தூய்மை முகாம் மறுநாள் நடைபெற போவதாக  முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். முகாம் நன்றாய் நடைபெற்றது. பள்ளி குழந்தைகள் பிளாஸ்டிக்கை அகற்ற பெறும் பங்கு வகித்தனர்.

மறுசுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்களை இனி பயன்படுத்துவதில்லை என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துகொன்டனர்.
இருப்பதை அகற்றிவிட்டால் மட்டும் போதாது. 
இனி வருவதையும் தடுத்து நிறுத்த வேண்டுமே!  
மாநகர ஆணையர் அறிவுரையின் பேரில், புறப்பட்டோம் புது புயலாய்.
மாசு கட்டுபாட்டு துறை உதவி பொறியாளருடன்,
மாநகர உதவி பொறியாளரும்,
மற்றுமுள்ள சுகாதார ஆய்வாளர் நண்பர்களும்.
சனிக்கிழமை தொடங்கிய அதிரடி ஆய்வும் - மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதலும், திங்களன்றும் தொடர்ந்தது. 
பறிமுதலைவிட மறுசுழற்சிக்கு பயன்படாத பொருட்களை விற்க மாட்டோமென வியாபாரிகள் கொடுத்த உறுதி மொழிதான் 
எங்களின்  முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆனது. 

இருபது மைக்கிரானுக்கும் இளைத்ததை எல்லாம், முப்பதுக்கும் மேலானதென போலி முத்திரை குத்தி
வைத்திருந்த கடைகளும் உண்டு.  அவர்தம்
முகத்திரை கிழித்து எறிந்தோம்.
இப்பவும் சொல்றேன், இது மட்டும் போதாது.
இனி பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிந்தால்,
இன்பம் நம் அனைவருக்குமே. நன்றி.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 7 July, 2010

சுத்தம் சோறு போடும்.

                       
                                                சுத்தம் சோறு போடும்.
                        நம் வீட்டில் சேரும் குப்பையை எதிர் வீட்டு வாசலில் கொட்டுவது நாம் அன்றாடம் செய்யும் செயல். வீதியில் நாம் கொட்டும் குப்பையை அள்ள ஒரு ஜீவன் தெருவில் வருவதை பார்த்திருக்கிறோம். என்றாவது அவர் படும் சிரமம் பார்த்ததுண்டா? 
                           சரி, அவர் எடுத்து செல்லும் குப்பை என்னவாகிறது?
                       குப்பை என்ற சொல் குதர்க்கமாய் இருப்பதால், திடக்கழிவு என்றதற்கு திருநாமம் சூட்டப்பட்டது. வீட்டில் சேரும் திடக்கழிவை, மக்கும் குப்பை என்றும், மக்காத குப்பை என்றும் இருவிதமாய்ப் பிரித்து, வருகின்ற பணியாளாரிடம் கொடுத்தால், மக்காத குப்பையிலிருந்து, மறு சுழற்சிக்குப் பயன்படும் பொருட்களைப் பிரித்தெடுப்பது சுலபமாகும்.                                  வீட்டில் உருவாகும் காய்கறிக்கழிவுகளை வீட்டுத் தோட்டம் போட்டு, வீணாய்ப்போவதை பணமாய் மாற்றலாம்.
                                      
                                வீட்டில் உருவாகும் திடக்கழிவு வீதியில் எறியப்பட்டால், வீதி கூட்டும் பணியாளரால் சேகரிக்கப்பட்டு லாரியில் ஏற்றப்படும்

                                  அந்த லாரி உரக்கிடங்கிற்குச் செல்லும். அங்கு ஈக்கள் உருவாவதைத் தடுக்க, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு கொட்டப்படும்.


                              இங்கே மலைபோல் குவிந்து கிடப்பதைப் பாh;த்தால், பெரும் மலைப்பாய் இருக்கும். அவையனைத்தும் நகர்ப்புறத்தில் சேகரிக்கப்பட்ட திடக்கழிவுதான் - வேறொன்றுமில்லை.
                           இந்த திடக்கழிவை ஆறு மாதங்கள் மக்க விட்டு, சலித்தால் கிடைக்கும் உரத்தில், மரம், செடி, கொடி வளர்த்தால் மண்ணும் பொன்னாகும். மக்காத குப்பையைப் பிரிக்காதிருந்தால், உரம் தயாரிக்க உத்தரவாதமில்லை.   
            
                      இதோ நீங்கள் பார்ப்பது, சோலையல்ல. திடக்கழிவிலிருந்து வெளியாகும் வாயுக்களால் சுற்றுப்புறம் மாசு படுவதைத் தடுக்கும் மண்ணிண் சுவாசப்பைகள் - மரங்கள். கலவை உரக்கிடங்கைச் சுற்றி நடப்பட்டுள்ள மரங்கள், சேர்த்து வைத்துள்ள திடக்கழிவு, மக்களின் கண்களில் படாதிருக்க உதவுவதுடன், மாசற்ற காற்றையும் வழங்குகின்றன.     
                        பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுத்தால் அவற்றை சிமெண்ட் ஆலையில் ரிபொருளாய்ப் பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தால், அடுத்த தலைமுறையின் வாழ்நாள் குறைந்துவிடும். அனைவருக்கும், அன்னை பூமி விடுக்கும் அன்பான எச்சரிக்கை இது
                                    எனவே, பசுமை உலகம் படைக்கப் பாடுபடுவோம். உலகைக் காக்க ஒன்றுபடுவோம்.  
              நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நீங்களும் உங்கள் பங்குக்கு ஒத்துழைத்தால், சுத்தம் நிதம் சோறு போடும்.

                               நாளை, நெல்லை நகரமெங்கும் "மாநகர தூய்மை முகாம்" நடைபெற உள்ளது. நாமும் கலந்து கொண்டு நாளைய சந்ததிக்கு நன்மை செய்வோம்.        
Follow FOODNELLAI on Twitter