இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 30 September, 2010

பிளாஸ்டிக் ஒழித்து பூமியைக் காப்போம்

                                    பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்தால், பூஉலகம் நாளை நம் சந்ததிக்கும்   நன்மை தரும். பூமியைக்காக்கும் புனிதம், புதிய வரலாறு படைக்கும். பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு, பூமியின் சுவாச பைகளாம் மரங்களை வேரறுக்கும். புரிந்து கொண்டதால், புறப்பட்டது "டீம் டிரஸ்ட்".  புரட்டாசி சனி கிழமைகளில், புண்ணியம் தேடி நவ திருப்பதிக்கும் பயணம் செய்யும் பக்தர்களுக்கென்று சிறப்பு பேருந்துகளை இயக்கியது அரசு பேருந்தின் திருநெல்வேலி கிளை. அதில் சென்ற பக்தர்களுக்கெல்லாம் பிரசாதம் பெற்று வர துணி பைகளை வழங்கி, பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் துன்பங்களை விளக்கி துண்டு பிரசுரங்களும் வழங்கியது மனித உரிமை கழகமும், டீம்  டிரஸ்ட்டும். 
 
                                   என் அன்பு நண்பர் திரு.T.மனோகர் அவர்கள். மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் மனமுவந்து சேவைகள் பல புரிந்ததால், பாராட்டுகள் , நற்சான்றுகள் பலவும் அவர்  பெற்றதுடன், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தவர். உதவிகள் செய்வதற்கு ஓடோடி வருபவர். இன்று பிரசுரங்களை வழங்க வந்திருந்தார்.    
                            துணி பைகளை வழங்கி, இனி பிளாஸ்டிக் பைகள்  வேண்டாம் என்று   கேட்டுக்கொண்டேன் நான். மூன்றாம் உலகப்போர் ஒன்று வருமென்றால், அது நீருக்கான போராய் இருக்குமென்பதில் ஐயமில்லை என்றார். பிளாஸ்டிக் பயன்பாடு  ஒழிக்காவிட்டால், வாழ பூமியிருக்கும்.  மரங்களிருக்காது. சுவாசிக்க காற்றும், பருக, பயன்படுத்த  நல்ல நீரும் இருக்காது.  புவி வெப்பமாதலை தடுக்க புதிய பயணம் தொடங்கியுள்ள திரு. திருமலைமுருகன் அவர்கள்  பணி சிறக்க மனமார வாழ்த்துவோம்.

 Follow FOODNELLAI on Twitter

இருக்கும்போது இரத்த தானம். இறந்த பின்னும் உடல் தானம்.

                                          இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது. இன்றும் வரலாம். நாளையும் வரலாம். இறந்த பின்னும் வாழ்வது என்பது சிலருக்கு மட்டுமே கிடைக்கும் சிறப்பு. 
                                                         உடல் உறுப்பு தானம் குறித்து செய்தி ஒன்று இன்று கண்டேன். மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இது வரை இருந்து வந்த நடைமுறை சிக்கல்களை  தீர்க்கும் வகையில் புதிய உத்தரவு வந்துள்ளது. 
                                           எனவே, இருக்கும் வரை இரத்த தானமும், இறந்த பின்னும் உடல் தானமும் செய்திட நாம் ஒவ்வொருவரும் முன்வந்தால், இறந்தும் உயிர் வாழ இனி ஒரு பிறவி எடுப்போம். 

Follow FOODNELLAI on Twitter

Sunday 26 September, 2010

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் விரைவில் அமலாகும்.

The Food Safety and Standards Authority of India is taking innovative steps to implement the Food Safety and Standards Act in the country, with a view to provide the citizens a safe and standard food.  
               Already the FSSAI has given training to the Food Inspectors to act as Food Safety Officers. A ToT was conducted by the authorities for the F.I.s, at Chennai in the month of July-10. In turn, the trained F.I. trainers are imparting the training to the rest of their community, which will be successfully completed by the end of this month.
                     The FSSAI has planned to give ToT for Designated Officers at Delhi in the fourth week of this month.
                      For further details please visit:
                      http://www.fssai.gov.in/Website/Outreach/Trainings.aspx
               
                     My advance wishes to the F.S.O.s and D.O.s
                                    

அன்பு உணவு ஆய்வாளர் நண்பர்களே! 
                                   கடந்த ஜூலை மாதம் உணவு ஆய்வாளர்களில் ஒவ்வொரு  மாநிலத்திலும் சிலரை தேர்ந்தெடுத்து, டில்லியிலுள்ள, மத்திய அரசின்,  இந்திய  உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு, பயிற்றுனர்களுக்கான பயிற்சி வழங்கியது. அதில் பயிற்சி எடுத்துக்கொண்ட பயிற்றுனர்கள், அவரவர் மாநிலங்களில் மீதியுள்ள உணவு ஆய்வாளர்களுக்கும்  இந்த மாதம் பயிற்சி அளித்து வருவதும் தாங்கள் அறிந்ததே. 
                                   மத்திய  அரசு இந்த சட்டத்தை விரைவில் அமலாக்க அணைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சட்டம் அமலுக்கு வரும் தேதி தவிர பிற அனைத்து பிரிவுகளும் அமல் படுதப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுளதை அறிந்திருப்பீர்கள். 
                                      உணவு ஆய்வாளர்களுக்கு இதுவரை பதவி உயர்வு பெற இருந்த தேக்க நிலை மாற, அடுத்த பதவி உயர்விற்கு வழிகாட்டும், "DESIGNATED OFFICER"  க்கு  இந்த மாதமே டில்லியில் பயிற்ருனர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆரம்பமாகிறதென்ற நல்ல செய்தியினை "FSSAI" வலை தளத்தில் கண்டேன். நீங்களும் பார்க்க,  
                    http://www.fssai.gov.in/Website/Outreach/Trainings.aspx   
என்ற முகவரிக்கு செல்லுங்கள். நன்றி.
                                    சட்டம் விரைவில் அமலாகும். சங்கடங்கள் விலகும். அமலாக்கம் செய்திட ஆவலுடன் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும், அட்வான்ஸ் வாழ்த்துக்கள். 
                   
Follow FOODNELLAI on Twitter

ஆக்கிரமிப்பு அநியாயங்கள்.

                                             ஆசைக்கோர் அளவில்லை.  அன்று, ஆறடி மண் கேட்டான் வாமணன் உலகிலே. இன்றோ, நடை பாதை  எல்லாம் கேட்கின்றனர் நம்மூர்  வியாபாரிகள். பேருந்து நிலையத்திலே பயணிகள் நடக்க கூட வழியில்லை. நடை பாதை எங்கும் ஆக்கிரமிப்புகள். இவை போதாதென்று, இளம்பெண்களுக்கு  இடிராஜாக்களின் இம்சைகள் வேறு. 

                                    கடை எவ்வளவுதான் பெரிதென்றாலும், நடைமேடையில் கடை விரித்தால்தான், நஷ்டமின்றி  நன்றாய் நடக்குதாம் வியாபாரம்!  தொல்லை  தரா சிந்தனைகள்  தொலைத்து விட்ட இவர்களுக்கு  துயரங்கள்  தருவது ஒன்றே தலையாய சிந்தனை!
                                    பொழுதெல்லாம் பொதுமக்கள் புகார் வாசிக்க, ஆணையர் உத்தரவினை அடுத்து, அதிரடி நடவடிக்கைகள்  ஆரம்பித்தன.
                                   எந்தவித தலையீடுமின்றி எடுத்து முடித்தோம் ஆக்கிரமிப்புகளை. நிலையத்தில்    நின்றிருந்த மக்கள் முகத்திலோ  மகிழ்ச்சி. வியாபாரிகள் முகத்திலோ  விபரீத உணர்ச்சி.  எச்சரித்து வந்தோம் இனியும் தொடரவேண்டாமென்று.
                                  அன்பு வேண்டுகோள்: ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்த வேண்டாம். அதை அகற்றவும் வேண்டாம். இதைவிட இருக்குது பல இன்றிமையாத பணி.
Follow FOODNELLAI on Twitter

Sunday 19 September, 2010

மாசு படுத்தும் மருத்துவமனைகள்.

      (மகத்தான மருத்துவ சேவை செய்யும் பல மருத்துவர்களுக்கல்ல,
             மனசாட்சியில்லா ஒரு சிலருக்கு மட்டுமே)
            நோய்கள் தீர மருத்துவமனை சென்ற காலம் மாறி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பல நோய்களை மனிதனுக்கு மருத்துவமனைகளே  வாரிவழங்கும் காலமிது. இன்று இருக்கும் பல வசதிகள் இல்லாதபோது கூட, இன்னல்கள் பல தீர்த்த மருத்துவர்கள் உண்டு. மருத்துவத்துறையில் மகா உன்னதமான கண்டுபிடிப்புகள் உலா வந்தவுடன், இன்னல்களும் இனிதே உடன் வந்தன.
            தலைவலி, காய்ச்சல் என்றால் கூட, நம்மைத் தவிடு பொடியாக்கிட பட்டியலிடப்படும் பல சோதனைகள். இரத்தம், மலம்,நீர், கபம், எக்ஸ்ரே, ஸ்கேன் இன்னும் பல இத்யாதிகள். 
 
                                 உண்மையில், மனசாட்சிக்கு பயந்து இத்தனையும் எழுதாத மருத்துவர்கள் பலரை நோயாளிகளே சந்தேகிப்பதுமுண்டு, எழுத நிர்ப்பந்திப்பதுமுண்டு. எங்கு செல்கின்றன இதனால் உருவாகும். கழிவுகள்?
                             ஒருமுறை பயன்படுத்தி உதறுகின்ற சிரிஞ்சுகள், ஊசிகள், புண்களைத் துடைக்கும் பஞ்சு, காயங்களில் கட்டப்படும் துணிகள், அறுவைசிகிச்சை செய்யும்போது அகற்றப்படுபவை, பிரசவ காலத்தில் வெளியாகும் நஞ்சுக்கொடி என இவையனைத்தும் மருத்துவக்கழிவுகள். இவற்றை முறைப்படி அப்புறப்படுத்தாவிட்டால், மனிதனுக்கு இவையே எமனாகும்.
                          எத்தனை மருத்துவமனைகளில் அதற்குரிய வசதிகளுள்ளது? எத்தனை மருத்துவர்களுக்கு முறையாக அகற்றுவதற்கு மனமிருக்கிறது? மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், அதிர்ச்சி தகவலொன்று உண்டு. மருத்துவக்கழிவுகள் சட்டத்தின்படி, மருத்துவக்கழிவுகளை அழிப்பதற்கென்று வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதனை பின்பற்றும் மருத்துவமனைகள் மிகச்சில என்பதே அது. விளைவு: இந்தியாவில் சுமார் 15,000 மருத்துவமனகைளுக்கு, வாரியம் விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பியுள்ளது.
                               இந்தியாவில் தினசரி சுமார் 4 இலட்சம் கிலோ மருத்துவக்கழிவுகள் உருவாகுவதாக கணக்கிடப்பட்டிருக்கின்றது. அவற்றில் சுமார் 55சதவிகிதம் மட்டுமே விதிகளுக்கிணங்க அழிக்கப்படுகின்றன. மீதமுள்ளவை, வீதிகளில் எறியப்படுகின்றன அல்லது குப்பைத்தொட்டிகளில் கொட்டப்படுகின்றன.                 
                            சமீபத்தில் கூட நெல்லையிலுள்ள பிரபல மருத்துவமனைக்கு அருகிலுள்ள குப்பைத்தொட்டியில், மனித உறுப்பொன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கப்பட்டு, பின்னர் அதனை அவர்களே எடுத்துச் சென்ற நிகழ்வொன்று உண்டு. 
                                   அதற்கு அவர்கள் தந்த விளக்கம் அதனினும் கொடுமையானது. சர்க்கரை நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து அப்புறப்படுத்தப்பட்டதாம், அந்த உடலுறுப்பு. மருத்துவமனை துப்புரவுப்பணியாளர் கவனக்குறைவாய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்களென்று, விளக்கம் வேறு தந்தார்கள்.நாங்கள் விசாரித்து அறிந்துகொண்டதெல்லாம், அதிக எடையிருக்குமென்பதால் மட்டுமே,  அது குப்பைத்தொட்டிக்கு வந்ததென்று.
            தனியார் நிறுவனத்துடன், மருத்துவக்கக்கழிவுகளை அப்புறப்படுத்த ஒப்பந்தம் செய்துகொண்டால், கிலோவிற்கு ரூ.20 முதல் 40 வரை வசூலித்துக்கொண்டு, அதனை தனியார் நிறுவனம் முறையாக அப்புறப்படுத்த ,மாசுகட்டுப்பாட்டு வாரியம் வசதியளித்துள்ளது.
 
                                  முறையாக அப்புறப்படுத்தப்படாத மருத்துவக்கழிவுகளால், காச நோய் உள்ளிட்ட கடும் நோய்கள் பரவுமென்பதால், தேசத்தின்மேல் நேசம் கொண்டு, தெளிவான நடைமுறைகளைப் பின்பற்றுவோம். 
                     நோய் தீர நாடுமிடமே, நோய்கள் தர வேண்டாமே!
Follow FOODNELLAI on Twitter

Tuesday 14 September, 2010

உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி

                                   அனைத்து உணவு ஆய்வாளர் நண்பர்களுக்கும் ஓர் நற்செய்தி. இந்த மாதம் இருபதாம் தேதி முதல் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆரம்பமாகிறது. நெல்லை, குமரி,தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள   உணவு ஆய்வாளர்களுக்கு மூன்றாவது  மற்றும் நான்காவது வாரங்களில் இரு பேட்ச்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி நெல்லையில் நடைபெற உள்ளது. நாங்கள் சென்னையில் அறிந்து வந்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். ஒரு பேட்ச்சில் நாற்பது நண்பர்கள் பயிற்சி எடுப்பார்கள். 
                         இயக்குனரகதிலிருந்து  இறுதி செய்யப்பட்ட அட்டவணை வெளியானதும், மேலும் விரிவான செய்திகளை வழங்குகிறேன்.
                                   அனைவரும் அக்டோபரில் உணவு பாதுகாப்பு அலுவலர்களாகி, அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்த நோக்கத்தை நிறை செலுத்த நெஞ்சம் நிமிர்வோம்.
SCHEDULE FOR TRAINING OF
FOOD SAFETY OFFICERS(FSO)


Period of Training
HUDs to be covered
Place of Trg.
Faculties

17&
18.09.10
20.09.10
to 22.09.10
1.Dindigul

Madurai


A.R.Sankara
lingam
S.Narayanan
M.A.Mariyappan
D.K.Jawaharlal ,
தட்டி. Govt.Analyst
G.Muthulakshmi,
A.P.P FAL
.Madurai
3. Palani
4. Paramakudi
5. Ramanathapuram
6.Sivaganga
7.Theni
மதுரையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பின் காட்சிகள் இங்கே:
          சாத்தூர் நாயகன் நாராயணன், சட்டத்தின் சாதக பாதகங்களை விளாசுகிறார்
  நான் அறிந்தவற்றை, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமங்கள் பெறுவது குறித்து உரை ஆற்றினேன்:
                                        
                  பொறுமை காத்து புண்ணியம் தேடி கொண்ட உணவு ஆய்வாளர்கள்.
                                   மதுரையில் நடை பெற்ற முதற்கட்ட பயிற்சி முகாம் இன்று இனிதே நிறைவுற்றது. உணவு கலப்பட தடை சட்ட இணை இயக்குனர் டாக்டர்.திரு.சதாசிவம் அவர்கள் நிறைவு நாள் உரை ஆற்றி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு வாயார வாழ்த்துக்களும், பணியில் முன்னேற்றம் அடைய வழிமுறைகள் குறித்து அறிவுரைகளும் வழங்கினார்கள். 

                                    மதுரை, பகுப்பாய்வு கூட முதுநிலை பகுப்பாளர் திரு.ஈஸ்வரன் அவர்கள் உணவு மாதிரி எடுக்கும்போது பின் பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக உரை ஆற்றினார்கள்.  

                                  முடிவில், மதுரை, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நன்றி கூற,பயிற்சி முகாம் இன்று இனிதே நிறைவுற்றது. பயிற்சி நாட்களில் இரு நேரம் தேநீரும், இன்று மதிய   உணவும் மனமுவந்து வழங்கிய மதுரை மாநகராட்சி உணவு ஆய்வாளர்களுக்கு அனைவரும் நன்றிகளை தெரிவித்தனர்.
                                இரண்டாவது கட்டமாக நெல்லையில் நடைபெறும்  உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமிற்கான அட்டவணை  உங்களின் பார்வைக்கு இங்கே கொடுத்துள்ளேன்: 

HUD Covered

1. Kovilpatti
2. Nagercoil
3. Sankarankoil         
4. Sivakasi
5. Tirunelveli
6. Tuticorin
7. Virudhunagar
 

COMMENT: A new comment on the  post "உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி":


Dear Shri. Sankaralingam, it is really outstanding work being done by you. We at Food safety Authority really look forward to the people like you to achieve our vision and mission. Congaratulations. keep going!!! and we wish you all the best.
Dr. Jitendra P Dongare, FSSAI, New DelhiPosted by jitu to UNAVU ULAGAM at 27 September 2010 6:24 PM


                                  இடம்: பலநோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி மையம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை  வளாகம், நெல்லை.  


 Follow FOODNELLAI on Twitter

Saturday 11 September, 2010

நாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.

                                   கால்களாய் (நம்பிக்)கை.
                                   உடல் ஒரு பொருட்டல்ல, உள்ளம் உறுதியாயிருந்தால், ஊனங்கள் இங்கே உதாசீனப்படுத்தப்படும். ஆம், சீனத்தில் சீறும் சிங்கத்தின் சிறப்புதான் இது.
                                   பெங்சுலின் இவர்  பெயர். வயதொன்றும் அதிகமில்லை-எழுபத்தெட்டுதான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் இரு கால்களையும் தொலைத்தவர். இரண்டு ஆண்டுகால மருத்துவ சிகிச்சை இவருக்கு மறுவாழ்வுடன் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. அறுவை சிகிச்சைகள், இருக்கும் உறுப்புக்கள் இயங்க வைத்திருக்கின்றன. அவரது தற்போதைய உயரம் 2’7”. தன்னம்பிக்கையின் உயரம்-இமயத்தைவிட இன்னும் அதிகம். கைகளால் உடற்பயிற்சி செய்து, இருக்கும் உடலை இரும்பாக்கி இன்னமும் ஆரோக்கியமாய் வைத்திருக்கச் செய்துள்ளார்.
                                  அவருக்குதவ, பீஜிங்க் மறுவாழ்வு மையம் புறப்பட்டு வந்தது. உடைந்த பக்கெட் போன்று உருவாக்கப்பட்ட சாதனத்தில் உட்கார்ந்து கொண்டு, கேபிள்களால் இணைக்கப்பட்டிருக்கும் கால்களை இயக்குகிறார். இத்துடன் நிற்கவில்லை இவரின் சாதனை. “அரை மனிதனின் அரை விலை கடை” (HALF MAN'S HALF PRICE SHOP) என்ற பெயரில் பல்பொருள் அங்காடி ஒன்றையும் நடத்துவதுடன், “ஊனத்தை உதாசீனப்படுத்துவது” குறித்து மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி வகுப்பும் எடுத்துவருகிறாராம்.
                                 உள்ளம் உறுதியாயிருந்தால், ஊனம் ஒரு பொருட்டல்ல. இமயங்கள் தொடுவதும் - இல்லாமல் போவதும் இனி உங்கள் கைகளில்.
                                   நம்பிக்கைகள் நம்முள் வளரட்டும். 
                                   நாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.
Follow FOODNELLAI on Twitter