இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 28 February, 2011

மக்கர் பண்ணும் மக்காத பிளாஸ்டிக்.


                                     பிளாஸ்டிக் பற்றி அடிக்கடி பதிவிடுகிறேன் என்று எண்ணுபவர்களுக்காக ஒரு சில தகவல்கள்:  
                                 ஓராயிரம் ஆண்டுகளானாலும்  ()ஒழியாது இந்த பிளாஸ்டிக். ஆம், பிளாஸ்டிக் பைகளை, உணவென்று  தின்று, இன்று பல விலங்கினங்கள் உயிரை மாய்க்கின்றன.  அந்த விலங்கினங்கள் மண்ணோடு மண்ணை மக்கி போனாலும், அவை உண்ட பிளாஸ்டிக் பைகள் மக்கி போவதில்லை. இறந்த விலங்குகளின் உடலை உண்ணும் உயிரினங்கள் தம்மை அறியாமல், அதனுடன் இருக்கும் பிளாஸ்டிக் பைகளை தின்று, அவையும் மாய்ந்து போகின்றன.  
Follow FOODNELLAI on Twitter

Sunday 27 February, 2011

ஆச்சரியம் ஆனால் உண்மை!


                                   செல்போனில் அதிக நேரம் பேசினால் மின் காந்த கதிர்களால், மூளைக்கு பாதிப்பு வரும் என்றே கேள்விப்பட்டுள்ளோம். அண்மைய  ஆராய்ச்சி ஒன்று, செல்போனில் தொடர்ந்து ஐம்பது  நிமிடங்கள் பேசினால், அதிலிருந்து வெளியாகும் மின்காந்த கதிர்கள் மூளை செல்களை வலுவாக்கி சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதாக சொல்கிறது. 
Follow FOODNELLAI on Twitter

Saturday 19 February, 2011

மார்பக புற்று நோய்க்கு புது மருந்து கண்டுபிடிப்பு.

                                  சகோதரிகளுக்கான சிறப்பு பதிவு. 
                                இது அவசர யுகம். ஆற அமர யோசிக்க நேரமில்லை. வீட்டில் உணவு தயாரிக்கவும், விருந்தினருடன் உட்கார்ந்து   சாப்பிடவும் நமக்கு நேரமில்லை. நம் நாட்டு உணவகங்களிலும்,  குறிப்பாக துரித உணவகங்களிலும், பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்தும்  எண்ணையினை ஒரு முறை, இரு முறை அல்ல, பல முறை மீண்டும், மீண்டும் சூடு படுத்தி பயன்படுத்துகின்றனர். 
Follow FOODNELLAI on Twitter

Thursday 17 February, 2011

அடுத்த தோசைக்கும், அவித்த இட்லிக்கும் மனம் ஆலாய் பறக்கும்!

                                   மல்லிகை பூப்போல் இட்லியும், மணக்கும் சட்னியும் எத்தனை வீடுகளில் காலை உணவாய் கமகமக்கும்!  ஆட்டு உரலில்  அரைத்த அரிசி மாவும், அதனோடு சேர்க்கப்படும் உளுந்த  மாவும், அளவான உப்பு சேர்த்து, அம்மாவின் கைகளால் பிசைந்து அடுத்த நாள் இட்லி, தோசையாக மலரும்போது, அடுத்த தோசைக்கும், அவித்த இட்லிக்கும் மனம் ஆலாய் பறக்கும். 
Follow FOODNELLAI on Twitter

Tuesday 15 February, 2011

இன்றைய நெல்லை-26-வேலைவாய்ப்பு தகவல்கள்.

                              செய்தி-1:திருநெல்வேலியில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி. ஒவ்வொரு மாதமும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்,  தனியார் வேலை வாய்ப்பு சந்தை நடத்தபடுகிறது. இந்த மாதம்  பதினெட்டாம் தேதி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  அத்தகைய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில், தனியார் துறை வேலையளிப்போர்கள், வேலை நாடுவோரை நேரில் சந்தித்து தேர்ந்தெடுக்க உள்ளனர். நல்ல சந்தர்ப்பம். நாலு பேரிடம் சொல்லலாமே!
                              செய்தி-2: கங்கைகொண்டானில், தமிழ்நாடு எல்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டு வரும் தகவல் தொழில் நுட்ப பூங்காவை, தமிழக முதல்வர், வரும் பத்தொன்பதாம் தேதி வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைக்கின்றார். 
                                 நகரில் வேலை வாய்ப்பை உருவாக்கும் நல்ல செய்திகள் இவை.
Follow FOODNELLAI on Twitter

Monday 14 February, 2011

பிள்ளைகள் உணவில் பிளாஸ்டிக் கலப்படம்.

பிள்ளைகள் உணவில் பிளாஸ்டிக் கலப்படம்.

                                      இரு தினங்களுக்கு  முன், மாவட்ட அளவில்,நுகர்வோர் விழிப்புணர்வு தினம். பள்ளி மாணவியர் பலர் கலந்து கொண்டு அவர்களது பங்களிப்பை அளித்தனர்.
Follow FOODNELLAI on Twitter

Sunday 13 February, 2011

உப்பு- கரிக்கும் உள்ளேயும் தள்ளும்.

                                     உப்பிட்டவரை உள்ளளவும் நினை. உப்பில்லா பண்டம் குப்பையிலே! இப்படி எத்தனையோ பழமொழிகள் சொன்னாலும், என்னை பொறுத்தவரை, உப்பு - கரிக்கும் உள்ளேயும் தள்ளும் என்றே எண்ணுகிறேன்.  
Follow FOODNELLAI on Twitter

இன்றைய நெல்லை-25-கண்புரை அறுவை சிகிச்சையில் புதுமை.


                                  
                             நெல்லையில் புதிதாய் வந்துள்ள  தனியார் கண் மருத்துவ மனையில், இன்று கண்புரை நோயாளிகளுக்கு பயன்படும்,  'குளுட் ஐஒஎல்' (Glued IOL)அறுவை சிகிச்சைமுறை அறிமுகபடுத்தபட்டுள்ளது. நாடு முழவதும், கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளவர்களில், 55  சதிவிகிதம் பேர் கண் புரை நோயால் பதிக்கபட்டுள்ளவர்கள்.     
                                    அவர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் வந்துள்ளது இந்த சிகிச்சை. பதினைந்து நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும். நெல்லைக்கு முதன்முதலில் வந்துள்ளது. வரவேற்கலாம்.  மேலதிக தகவல்களுக்கு: http://videos.dragarwal.com/index.php?id=1 
                                  சாரி, நேற்று மாலை வரவேண்டிய தகவல். நேரமின்மை காரணமாய், இன்று இடம்பெற்றது. BETTER LATE THAN NEVER. 
                                    'உப்பு கரிக்கும்' ஒரு செய்தியுடன் விரைவில் உங்களை சந்திகின்றேன்.
Follow FOODNELLAI on Twitter

Friday 11 February, 2011

இன்றைய நெல்லை-24-பாம்பாட்டியை பாம்பு படுத்திய பாடு!


                                    நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியை சார்ந்தவர், சாத்தையா. இவர் தொழில், பாம்பு பிடிப்பது. இன்று, இவரை பாம்புக்கு பிடித்து விட்டது. ஆம், பாம்பு இவரை கடித்து விட்டது. சேரன்மாதேவி பகுதியில் மூன்று நல்ல பாம்புகளை பிடித்து ஒரு கூடையில் வைத்து கொண்டிருந்தார். அப்போது அவர் கையை, ஒரு நல்ல பாம்பு கடித்து விட்டது. உடனே மயங்கிவிட்டார். அங்கிருந்தவர்கள், அவரையும், அவர் அருகிலிருந்த பாம்பு கூடையையும்(பாம்புகளுடன்தான்!)  நெல்லை, மேட்டுத்திடல்,  அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில், பாம்பாட்டி இப்போது படுத்திருக்கிறார். தீயணைப்பு  படை வீரர்கள் வந்து பாம்புகளை மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்தது தனி கதை.
Follow FOODNELLAI on Twitter

Thursday 10 February, 2011

உணவு ஆய்வாளர் கலந்துரையாடல் கூட்டம்.

                                   வருகின்ற 12.02.2011 அன்று காலை பத்து மணியளவில், திருவாரூர்,பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹோட்டல் செல்வீசின்  டயமண்ட் ஹாலில்     வைத்து, நாகபட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சார்ந்த்த உணவு ஆய்வாளர் நண்பர்கள்,மாநிலம் முழுவதுமுள்ள உணவு ஆய்வாளர் நண்பர்களை கூட்டி,  "உணவு ஆய்வாளர் கலந்துரையாடல் கூட்டம்" நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 9 February, 2011

இன்றைய நெல்லை-23- மாநில அளவில் நெல்லை மாணவர்கள் சாதனை.

                                   புதுகோட்டையில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையிலான மாநில குடியரசு தின விளையாட்டு போட்டிகளில், பாளையங்கோட்டை,அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில், பயிற்சிபெறும் மாணவ மாணவிகள் 27 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். 
       மாணவன் பெயர்.                 தங்கம்         வெள்ளி.     வெண்கலம்
      1   . சரத் சடையப்பன்                      3                     2                       -                      
      2 .   சேது மாணிக்கவேல்               2                     1                      -   
      3 .   ஆரோக்கியராஜ்                        2                     2                      1
      4 .   கார்த்திக்                                      2                     1                      -
      5 .   அரவிந்த்                                      2                     -                       1
      6.   ராபின்சிங்                                    1                     -                       -
      7.   ஜெயவிஜேஷ்                             -                      1                      1
      8.  இஸ்மான்சிங்                              -                      -                       1        
      9. அபிதா                                             -                      2                       1
     10. மீனா.                                               -                      -                       1
                              பாராட்டலாம் வாங்க.

Follow FOODNELLAI on Twitter

கலர்கலராய் கலக்கல் கலப்படங்கள்

                                   செயற்கை வண்ணங்கள் -நாம் தயார் செய்யும் உணவு பொருட்களுக்கு, தனித்தன்மை கொடுப்பதற்கு,  தாராளமாய் உணவில் சேர்க்கபடுபவை. (உ-ம்: பர்பி என்றால் - மஞ்சள் குளித்திருக்கும், ஜாங்கிரி என்றால் -ஆரஞ்சு நிறம் அப்பியிருக்கும்)
Follow FOODNELLAI on Twitter

Tuesday 8 February, 2011

இன்றைய நெல்லை-22-சில்லறைதனமான சிறுநீரக திருட்டு.


                                  செய்தி-1 : நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் புளியங்குடியை சார்ந்த சுடலைமாடன், அழகர்ராஜா மற்றும் காளிராஜன் ஆகியோர் பிழைப்பு தேடி அலைந்தனர். அவர்களை ஆசை வார்த்தைகள் கூறி, ஆந்திர மாநிலம் கடப்பாவிற்கு அழைத்து சென்றது ஒரு கும்பல். வேலையிலும் சேர்த்து விட்டனர், வினையும் வந்தது. வேளையில் இருந்தவர்கள் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கடத்தி சென்று, அவர்களின் சிறுநீரகத்தை களவாடி சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த பின்னரே, விஷயம் தெரிந்து, அதிர்ச்சியுற்றுள்ளனர். சுடலைமாடன் மட்டும்  அங்கிருந்து தப்பி, சொந்த ஊருக்கு வந்து, சிறுநீரக மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். மீதி இருவரை மீட்க காவல்துறை நடவடிக்கை தொடங்கியுள்ளது.என்ன கொடுமை சார் இது!
                                  செய்தி-2 : புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை  தொலைந்து போயிருந்தாலோ, கிழிந்தோ, பயன்படுத்த இயலாத நிலையில் இருந்ததாலோ, அதற்க்கு பதிலாக நகல் அடையாள அட்டை வழங்கும் முகாம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கென, நெல்லை மாவட்டத்தில், வரும்  19 மற்றும் 20ஆகிய தேதிகளில்,  சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. நகல் அடையாள அட்டை வழங்க, பதினைந்து ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.
Follow FOODNELLAI on Twitter

Monday 7 February, 2011

இன்றைய நெல்லை-21-இரு சக்கர வாகனங்களை இழுத்து சென்ற பேருந்து.


                                    அரசு பேருந்து என்றாலும் சரி, அது தனியார் பேருந்து என்றாலும் சரி, பேருந்து நிலையத்தில் நுழையும் போது சீறி பாய்ந்து கொண்டுதான் வரும். அப்படி ஓர் நிகழ்வு இன்று நெல்லையில்.
                                    புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த அரசு பேருந்து, சந்திப்பு பேருந்து நிலையம் அருகே சங்கடத்தை சந்தித்தது. பேருந்தின்   பிரேக்  பிடிக்கவில்லையாம்! பிறகென்ன, அகப்பட்டவர்கள் மனிதர்களல்ல(அந்த மட்டும் சந்தோசம்) ,ஆறு - இரு சக்கர வாகனங்கள். அரைத்து தள்ளி விட்டு தான் நின்றது அந்த பஸ். நினைத்து பாருங்கள், மாட்டியிருந்தால்,  மனிதனின் நிலைமையை!
Follow FOODNELLAI on Twitter

Sunday 6 February, 2011

இன்றைய நெல்லை-20-குறுக்குதுறையில் மலைப்பாம்பு

                                    நெல்லையில் புகழ் பெற்ற இடம் குறுக்குதுறை. இங்குள்ள ஆற்றங்கரையும், ஆறுமுகபெருமான் கோயிலும் அனைவரும் பார்க்க விரும்புமிடம். நெல்லை நகர பகுதியில் வாழும் மக்களுக்கு, குறுக்குதுறை ஆற்றில் குளிப்பதென்றால் குஷி. ஆன்மீகவாதிகளுக்கு, குறுக்குதுறையில் குளிக்கவும், முருகனை கும்பிடவும் முக்கிய இடம். மேலதிக தகவல் ஒன்று. நடிகர் ரஜினி காந்தின் ஆன்மீக குருவிற்கு, இந்த ஆற்றின் கரையில் ஒரு சமாதி உண்டு. 
                                  இத்தகைய சிறப்பு பெற்ற இந்த ஆற்றில் குளிப்பவர்கள் வயிற்றில் புளியை கரைக்கும்  நிகழ்வு ஒன்று இன்று நெல்லையில். இன்று காலை, நெல்லையை சார்ந்த ராமு என்பவர் இந்த ஆற்றில் விரித்திட்ட  வலையை அவரால் தனியே இழுக்க  முடியவில்லை. சரியான் வேட்டை இன்று என்றெண்ணி, நண்பர்களை அழைத்து வந்து வலையை இழுத்தால், வலையில் மீன்களுக்கு பதிலாய் வந்ததென்னவோ மலைப்பாம்பு. 
                                தீயணைப்பு துறையினர் வந்து மலைப்பாம்பை மீட்டு, வனத்துறையினர் வசம் ஒப்படைத்தனர். காடுகளை கணக்கின்றி நாம் அழிப்பதால், நம் வீடுகள் தேடி வனவிலங்குகள் வருகின்றன. களக்காட்டில் யானை! நெல்லையில் மலைப்பாம்பு! வரவேற்போமா! வனங்களை காப்போமா? 
                                 பின் குறிப்பு: பாம்பு என்றதும் என் நினைவில் வருவது: பலா பட்டறை சங்கரின் இந்த பதிவு:
                                          படித்துதான் பாருங்களேன். பாம்புகள் மீதும் பாசம் வரும்.
Follow FOODNELLAI on Twitter

ஆண் குழந்தை வேண்டுமா? அப்ப படிங்க!


                                   இது முருங்கை காய் சமாச்சாரமல்ல! 
                                      சும்மா, சும்மா!  
                                          சமீபத்தில், உணவு உலகம், உணவு பற்றி கூறாமல், உலக நடப்புகளை பற்றி அதிகம் கூறிவருவதாக வந்த வசைமொழிகளை அடுத்து இந்த செய்தி. 
Follow FOODNELLAI on Twitter

Saturday 5 February, 2011

இன்றைய நெல்லை-19-மரம் நடுதல்.


                                        பாளையங்கோட்டை தீயணைப்பு துறை மண்டல அலுவலகத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, பயிற்சி இன்று தொடங்கியதை முன்னிட்டு, திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில், 133 மரக்கன்றுகளை நட்டனர். நல்ல துவக்கம். நாமும் பாராட்டலாம்.
Follow FOODNELLAI on Twitter

பட்டுகுட்டி பிறந்த நாள் -பதிவர்கள் அறிமுகம் ஆன நாள்.

                                                   கடந்த இரு நாட்களுக்கு முன்பு, அம்பாசமுத்திரத்தில் பதிவர்  ராஜகோபால்  (எறும்பு) மகளின் முதல் பிறந்த நாள் விழா. இவர் பிறந்தது உயர்- திருநெல்வேலி(இப்படித்தான் இவர் பதிவில் ஊர் பெயரை குறிப்பிட்டு இருப்பார்), வளர்ந்தது அம்பாசமுத்திரம், தற்போதைய இருப்பு சென்னை மாநகரம்.
Follow FOODNELLAI on Twitter

Friday 4 February, 2011

இன்றைய நெல்லை -19- அறிவிப்புகள்.

                                 அறிவிப்பு-1:நில மோசடி, கந்து வட்டி கொடுமைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க, தமது அலுவலகத்தில் சனி கிழமை தோறும் சிறப்பு முகாம் நடைபெறுமென்று அறிவித்துள்ளார்,  நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர். 
                                   அறிவிப்பு-2 : பிராணிகள் நல அமைப்பில் தூதுவராக உள்ள நடிகை திரிஷா, ஆதரவற்று தெருவில் திரியும் பிராணிகளை பாதுகாக்க, இல்லம் ஒன்றை, நண்பர்களுடன் சேர்ந்து துவக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
                                   நடக்கட்டும், நல்ல விஷயங்கள்.

Follow FOODNELLAI on Twitter

Thursday 3 February, 2011

இன்றைய நெல்லை-18- செல் போன் சிக்கல்கள்

இன்று செல் போன் சிக்கல்கள்:
                                       பாளை இன்னாசியார் கல்வியியல் கல்லூரி மாணவியர், சுற்று சூழல் பாதுகாப்பு, சாலை விபத்துக்கள், தீவிரவாத பிரச்னைகள் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, நிலை காட்சிகள் அமைத்திருந்தனர்.     பார்த்தவர் பாராட்டும் விதமாய் இருந்தது. அதில் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது  செல் போன் பயன்படுத்துவதால் விளையும் ஆபத்து குறித்த நிலை காட்சி அற்புதமாய் வந்திருந்தது. நல்ல முயற்சியை நாமும் பாராட்டலாமே!
                                     செய்தி-2 :    செல் போனில் அதிக நேரம் பேசினால், மூளை கேன்சர் வர 400 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாக மத்திய அரசின் ஆய்வுக்குழு அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது. விரிவான செய்தி விரைவில்.        

Follow FOODNELLAI on Twitter

Wednesday 2 February, 2011

இன்றைய நெல்லை-17

                                    செய்தி- 1 : நெல்லையில் இன்று மாரத்தான் ஓட்டம், அண்ணா விளையாட்டு அரங்கில் காலை ஆறு மணிக்கு துவங்கியது. பல மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்போட்டிகளில் கலந்து கொள்ள இருபத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் முன் பதிவு செய்திருந்தனர். ஆண்களுக்கான முழு மாரத்தான் தூரம் 42.20 கி.மீ., இருபாலருக்கும் அரை மாரத்தான் தூரம் 21.10 கி.மீ., மினி மாரத்தான் தூரம் - பத்து கி.மீ, மாணவர்களுக்கு ஐந்து கி.மீ. என்பது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும், முதல் பத்து இடங்களை பெறுவோர், சென்னையில் நடைபெற உள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளலாம்.   சென்னையில், முதல் பத்து இடங்களை பெறுவோர், ரூபாய் பதினேழாயிரம்   ரொக்க பரிசு பெறுவர்.
                                   செய்தி- 2 :நெல்லை  மாவட்டம், பாபநாசம், குறுக்குதுறை, தாமிரபரணி ஆற்றங்கரையோரத்திலும், திருசெந்தூர் கடற்கரையிலும்,  இன்று தை அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
Follow FOODNELLAI on Twitter

இன்று போல் என்றும் வாழ்க!

                                  பதிவர் "துபாய் ராஜா" வின் பிறந்த நாள் இன்று.  நேற்று மாலை எங்களுடன் இருந்தபோது கிடைத்த தகவல். வாழ்த்தலாம் வாங்க.
                                             MANY MORE HAPPY RETURNS OF THE DAY.
                              இவரும் நெல்லை பதிவர் என்பதால் நேசமாய் வாழ்த்த வந்தேன்.
Follow FOODNELLAI on Twitter

Tuesday 1 February, 2011

இன்றைய நெல்லை-16


                                   செய்தி-1:கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதாக புகார்களுடன்,நெல்லையில் உள்ள தனியார் பள்ளியொன்றை, இன்று பெற்றோர்கள் முற்றுகை இட்டனர். இந்த பள்ளிக்கு நெல்லையில் இரண்டு மூன்று இடங்களில் கிளைகள் உண்டு. அரசு, தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்த்வுடன், இப்பள்ளிகள் தளரவில்லை. மாறாக, மாற்று வழிகள் கண்டுபிடித்தனர். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மட்டுமே ரசீது. ஆனால், பெற்றோர் கட்ட வேண்டியதோ, அப்பள்ளிகள் நிர்ணயிக்கும் கட்டணத்தைதான். அது அவர்களின் தலையெழுத்து. மரத்தடியில் பள்ளிக்கூடம் ஆரம்பித்தவர்கள் எல்லாம், இன்று தன்னாட்சி பல்கலைகழகங்கள் பகட்டாய் ஆரம்பித்துள்ளனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்துவோம் என்று கூறும் பெற்றோரின் பிள்ளைகள் தீண்ட தகாதவர்கள் ஆகின்றனர். ஆம், அவர்கள் கடைசி பெஞ்சில்தான் உட்காரவேண்டும், அவர்களின் வீட்டு பாடங்கள் திருத்தபடாது. இதுகூட, துணிந்த பெற்றோர் ஒருவர் தெரிவித்ததுதான். 
       இன்னும் ஒரு சுதந்திர போராட்டம் இதற்கென்று  வரவேண்டும் போல!
                                செய்தி-2 : நாசரேத்தில், போலி நர்சிங் கல்லூரி நடத்தியவருக்கு, சாத்தான்குளம் நீதிமன்றம், இன்று மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்று சொல்லி, ஏராளமான மாணவியரை அக்கல்லூரியில் சேர்த்துள்ளார். இறுதியாண்டு முடித்தவர்களுக்கு, போலி சான்றிதழ் வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில், ஜெனட் என்ற மாணவி அளித்த புகார், அந்த போலியின் முகத்திரை கிழிதெறிந்துள்ளது.   
          சபாஷ் ஜெனட்!
              சிறப்பு செய்தி: இன்று காலை, நெல்லையை சார்ந்த இரு பிரபல  பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவர் "பலா பட்டறை சங்கர்" இவர் நெல்லையில் பிறந்து, கேரளத்தில் வளர்ந்து, மீண்டும் தமிழக தலைநகரில் தனி முத்திரை பதித்து வருபவர். மற்றொருவர்,  "எறும்பு". இவரும் உயர்-திருநெல்வேலியில் பிறந்து, சென்னையில் பல தொ(ல்)லைபேசிகளில்  தொடர்பை  துறப்பவர். இருந்ததென்னவோ இருபது நிமிடங்கள்தான். பல பதிவர்களை பற்றி,  கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம். இன்னும் இரு தினங்கள், இந்த இருவரோடு நானிருப்பேன்.  எங்கள் பகிர்வுகள், உங்கள் பார்வைக்கு விரைவில்.
Follow FOODNELLAI on Twitter

ஓய்வறியா உற்ற நண்பர் ஓய்வு பெற்றார்.


                                    உள்ளாட்சி பணி என்பது, பலருக்கு உதவும் ஒரு உயரிய பணி. ஒரு உயிர் பிறப்பது முதல் வையம் புகழ வாழ்வது, பிறரை வாழவைப்பது, வந்த வேலை முடிந்து விட்டால், மரணிப்பது வரை ஒவ்வொரு கட்டத்திலும் உள்ளாட்சியின் பங்கு மிக அதிகம். குழந்தை பிறந்தவுடன் பதிவு செய்யுமிடம் உள்ளாட்சி. இன்னும் சொல்லபோனால், அந்த குழந்தை கருவிலிருக்கும் போதே, குழந்தையின் தாய் நலம் பேணும் பணிகளும் உள்ளாட்சியில் உண்டு. பின்னர், மனிதன் வாழ வீடு, நடமாட வீதி, பயில பள்ளிக்கூடம், . . . . .  . இப்படி உள்ளாட்சியின்  பங்கை சொல்லிகொண்டே போகலாம். மனிதன் இறந்த பின்னர் அத்தனை பதிவு செயுமிடமும் உள்ளாட்சிதான். இத்தகைய உள்ளாட்சி பணியில், உயிரோட்டத்துடன் உழைப்பவர் சிலரே.                                           
பணி ஓய்வு பெறும் நண்பருக்கு பாராட்டு.     


நால்வர் அணி.
                                      அந்த சிலரில், திங்களன்று ஓய்வு பெற்ற நண்பரும் ஒருவர். இவரை பற்றி எனது "முற்பகல் செயின்" என்ற பதிவிலும்  (நால்வர் அணியில் ஒருவர் என்று ) குறிப்பிட்டு சொல்லியுள்ளேன். இவர் ஒரு பொறியாளர்.  எங்கள் நால்வரில், எதிர்மறை கேள்விகளுக்கு பெயர்பெற்றவர். ஒரு முக்கிய பணி எங்களுக்கு வரும்போது, அதனை பாசிடிவ் ஆக பார்ப்பவர் நண்பர் அரசகுமார்.அதையே, எதிர்மறை கோணத்தில் பார்ப்பவர் இவர்.   பாசிடிவ் பிளஸ் நெகடிவ் சேர்ந்து, நடுநிலையான ஒரு முடிவு பிறக்கும். பணி காலத்தில், மொத்த மாநகராட்சியின், தண்ணீர் விநியோகமும் இவருக்கு அத்துபடி. எங்கேனும் பிரச்சனைகள் என்றால், அதனை தீர்த்து வைக்க அகமகிழ்ந்து முன்வருவார். வாகன பராமரிப்பு பிரிவில், வகை வகையாய் முத்திரை பதித்தவர், இவர். அத்தைகைய குணாதிசயங்கள் கொண்ட பொறியாளர் திரு.இசக்கிமுத்து, மாநகராட்சி பணியிலிருந்து  ஓய்வு பெற்றார்.
                                  இன்று முதல், அவர் சுதந்திர பறவை.
                                     இனிய புது திறமைகள்  திறக்கும் கதவை. 
அலுவலக பணியாளர்கள் அனைவரும் அணிதிரண்டனர்.
                                             
Follow FOODNELLAI on Twitter