நெல்லை பதிவர் சந்திப்பில், பதிவுலகில், பல நாட்களாய் இரவு பகல் பார்க்காது விழித்திருந்து, பயணத்தில் இருந்தாலும், நண்பர்களிடம் கடவுசொற்களை அடகு வைத்தாவது பதிவுகள் போட்டு,பரபரப்பை ஏற்படுத்தி வரும் CP (அது COPY&PASTE என்று தவறாக புரிந்து கொண்டால், அது என் தவறல்ல),கோமாளி செல்வா, வம்ப வெலைக்கு வாங்குவோம்ல மணிவண்ணன், தமிழ்வாசி பிரகாஷ், வலைசரம் பொறுப்பாசிரியர் சீனா அய்யா மற்றும் கருவாலி ராமலிங்கம் ஆகியோரின் அறிமுக உரை:
டிஸ்கி-1: வீடியோவின் தொடக்கத்தில், சிபி கஷ்டப்பட்டு நிமிர்வது, வீட்டில் பெற்ற அடியினால் என்று எவரேனும் சிந்தித்தால் அதற்கு பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், பொறுப்பல்ல!
டிஸ்கி-2: சிபி, பெண் பதிவர்களிடம் பெற்றுக்கொண்ட பாவ மன்னிப்பு விரைவில்!