இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday, 30 July, 2011

இந்தியாவில் தீவிரமடையும் உணவு பாதுகாப்பு சட்ட அமலாக்கம்.

                      உணவு பொருள்களில் கலப்படம் செய்யப்படுவதை முற்றிலும் ஒழித்திட, மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 05.08.2011ல், இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு வருகிறது. அன்று, இந்தியா முழுவதிலுமுள்ள உணவு ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக அறிவிக்கப்படுவார்கள். 

                       உணவு மற்றும் மருந்து கட்டுபாடு ஆகிய இரு முக்கிய துறைகள் உணவு பாதுகாப்பு ஆணையரின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, சில உணவு பொருட்களை, மருந்துப் பொருட்களென்றும், சில மருந்து பொருட்களை, உணவு பொருள் என்றும் எண்ணி, இரு துறை சார்ந்த அலுவலர்களும்(உணவு ஆய்வாளர் & மருந்து ஆய்வாளர்), தத்தம் துறை சாராதது என்றெண்ணி விட்டு வைத்த பொருள்களும், கலப்படத்தை ஆய்வு செய்வதிலிருந்து இனி தப்பாது.
                                       அரசிற்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில், நாம் அனைவரும் நம் கடமையை உணர்ந்து செயல்பட்டால், அது உணவென்றாலும் சரி, மருந்தென்றாலும் சரி, கலப்படத்தை கண்களில் படாமல் ஒழித்தே விடலாம்.
Follow FOODNELLAI on Twitter

Thursday, 28 July, 2011

முதல் போட்டு வாங்கின மோட்டார் சைக்கிளா? அப்ப படிங்க!

                   திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர்  ராணுவ வீரர் திரு.சங்கரநாராயணன். இவரது கண்டுபிடிப்பு ஒன்று, திருவில்லிபுத்தூரை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆம், மோட்டார் வாகனக்களுக்கு, செக்யூரிட்டி வெஹிகிள் ஸ்டார்ட்டரைக் கண்டுபிடித்துள்ளார். உணவு உலகம்
Follow FOODNELLAI on Twitter

Monday, 25 July, 2011

மனிதம் மரத்த மர(ரு)த்துவர்கள்.

                          இது எனக்கு ஏற்பட்ட ஒரு கொடிய அனுபவம். இனி ஒருவருக்குக் கூட, இந்தக்கொடுமை நிகழக்கூடாதென்பதே என் விருப்பம். மருத்துவ தொழிலின் மகத்துவம் அறிந்தவன்தான்  நானும். எனினும், சில மனிதம் மறந்த மருத்துவர்கள் செய்யும் கொடுமைகள் சொல்லாமல்  தீராது. 
Follow FOODNELLAI on Twitter

Thursday, 21 July, 2011

தரமான தண்ணீர் தரக்கேட்டு தவிக்கின்ற மக்கள்.

            தரமான தண்ணீர் தரக்கேட்டு தவிக்கின்ற மக்கள்.
                            தரம் கெட்ட தண்ணீரை நிதம் வழங்கும் வேன்கள்.

           ஆறு குளங்களிலுள்ள நீர் அப்படியே குடிப்பதற்கு ஏற்றதல்ல. அவற்றில் பல வகையான அசுத்தங்கள் கலந்திருக்கும். நம் கண்ணிற்குத் தெரிபவை சில. தெரியாதவை பல. தண்ணீரில் மிதக்கும் தூசிகள் கரைந்திருக்கும் மண் படிவங்கள்&மனிதக் கழிவுகள் இவையே நீரைக் கலங்கலாக்கும் காரணிகள். இவை தவிர, மண்ணிலுள்ள தாதுக்கள் தண்ணீரில் கரைந்திருக்கும். அவை தண்ணீருக்குச் சுவையளிக்கும். இந்நீரை அப்படியே பருகினால் நீரினால் பரவும் நோய்கள் நம்மைத் தாக்கும்.
Follow FOODNELLAI on Twitter

Tuesday, 19 July, 2011

மகளுக்கு பத்து மாமரம்.

பெண் குழந்தைகள் பிறந்தாலே, அது சாபமெனக்  கருதி, சட்டென்று அந்த உயிரைக் கொன்றுவிடும் சண்டாளர்கள் மத்தியில், வரமென்று வாழ்த்தி வரவேற்கவும், வாரி அணைக்கவும்,இந்திய நாட்டிலும் ஓர் கிராமம் இருக்கிறதென்றால் ஆச்சரியமாகத்தான் உள்ளது.
Follow FOODNELLAI on Twitter

Sunday, 17 July, 2011

ஏற்றமிகு இரண்டாமாண்டில் எமது சிபி!


             ’அட்ரா சக்கை’ அதிபனே,
                 அட்டகாச சைட்களின் அரசனே!
             ’எட்றா அந்த அருவாளை’ 
                   என்ற மனோவின் நேசனே!
               லட்டு ஃபிகர்களைப் போட்டு, மிக
                   லட்சணமாய்ப் பதிவுகளைப் போட்டு
                எட்டுத் திக்கும் புகழ் பெற்றாய்,
                    எட்டாத ‘கனி’க்கெல்லாம் ஆசைப்பட்டாய்!
                திருப்பதி உண்டியல் நோட்டுக்கள் போல்
                     தினம் உன் பதிவிலே ஓட்டுக்கள்,எனினும்,
                திருப்தி இன்றி தினம் மூன்று பதிவிட்டாய்!
                     தி(க)ட்டத் தி(க)ட்ட, பதிவர் சந்திப்பில் பேசிவிட்டாய்!
                                              
                இண்ட்லி, தமிழ்-10 , தலை மறைவான தமிழ்மணத்திலும்
                    இருக்கின்ற போட்டிகளுக்கு நடுவில்
                அலெக்ஸா ரேங்கிங் எனக்கு ஆசையென்று
                    அல்லும் பகலும் அரும்பாடு படுவாய்
                கண்ணாடி அணிந்த உன் முகம்
                    கள்ளத்தனம் மறைக்கவோ! இல்லை
                கண்களைப் பார்த்தே கள்வனை அறியும்
                    பெண்களைத் தவிர்க்கவோ!
                ’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
                     கதறக் கதற அடித்தாலும்
                 உதறித்தள்ளுவது உன் குணம்!
                     உற்ற நண்பர் குழாம் உனக்கதிகம்!
                 உரலுக்கு ஒரு புறமென்றால்,
                     உடுக்கைக்கு இருபுறமும் அடி,
                 உனக்கோ செல்லும் இடமெல்லாம் அடி!
                     உதறித்தள்ளிவிட்டு ஃபீனிக்ஸ் பறவையாய்
 எழுந்து நின்றாய், என்றும் ஜெயித்து நிற்பாய்
 
                 பெண்கள் படமென்றால் பேயாய் அலைந்தாய்
                    பேசும்போதோ பெண்கள் என் தெய்வம் என்பாய்!                       
                 திருந்த மனமின்றி, பதிவர் சந்திப்பில், பல
                    திட்டுக்கள் பெற்றாய், இருந்தும்                       
                 மலர்ந்த உன் முகம் கண்டு பதிவுலகம் உன்
                     மனதைப் படித்தது, மலரைச் சொரிந்தது!                    
                 கணக்குப் பாடம் படித்ததாலோ, பல மனங்களைக்
                     கணக்குப் பண்ணக் கற்றுக்கொண்டாய்.
                ’விருந்தாளி’யில் தொடங்கியது உன் விறுவிறு விமரிசங்கள், 
                     சினிப்பிரியன் என்றொரு தளம்,  சினிமாவின் மீதொரு கரிசனம்.
                  தொடங்கிய ஆண்டில், பதிவுகள், இருநூறைத் தொட்டன 
                     தொடர்ந்த ஆண்டில் நானூறைத் தாண்டி விட்டன!
                  தலைப்பு வைப்பதில் தன்னிகரில்லாத் தலைவன்,
                      தனித்தே ரசிப்பது, வெள்ளிகிழமை விடிகாலைப் படங்கள்!
                  நினைவாற்றலில் நீ தனித்து நின்றாய்,
                       நிச்சயம் நீ ஜெயித்திடுவாய்!
                  இரண்டாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்தாய்,
                       இனியெல்லாம் உனக்கு ஏற்றம், இனியவனே!
                  இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
                       இனிதே வந்து நீங்களும் வாழ்த்துங்கள்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday, 13 July, 2011

திருநெல்வேலியில் தேர்த்திருவிழா.

நெல்லையப்பர்  தேர்.
                                          திக்கெட்டும் புகழ் பரவும் திருநெல்வேலி சீமையிலே, நடந்தது தேர்த்திருவிழா. தமிழகத்தில், பல சிவசபைகள் உண்டு. அவற்றிலே, தாமிரசபை அமைந்துள்ள இடம் திருநெல்வேலி. அன்னை காந்திமதிக்கும், நெல்லையப்பருக்கும் தனித்தனி ஆலயங்கள் எழுப்பப்பட்டு,அவ்விரு ஆலயங்களும், கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாய் பல சிற்பங்கள் உள்ளன. அத்தகைய சிறப்பு மிக்க நெல்லையப்பர் ஆலயத்தில் ஆனித்தேரோட்டம்.
Follow FOODNELLAI on Twitter

Tuesday, 12 July, 2011

உடல் நலக் குறிப்புகள் உங்களுக்கே!



 பழம்:நம்மில்பலர், உணவருந்தியதும்,  வாழைப்பழங்கள் உண்பதை, வழக்கமாக்கி வைத்துள்ளோம். அது பற்றிய சிறு தகவல் ஒன்று. பழங்கள் உடல் நலனிற்கு உகந்தவைதான். ஆனால், அவற்றை எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பொருத்து, அவை நம் உடல் நலனிற்கு உற்ற துணையாவதும், ஊறு விளைவிப்பதும் நடைபெறும். 
Follow FOODNELLAI on Twitter

Saturday, 9 July, 2011

பிறந்த நாள் வாழ்த்து.

பதிவர் ’ எறும்பு’ ராஜகோபாலுக்கு இன்று பிறந்த நாள்:

     
    இனியவனே,  இன்று உன்னை, உன்
       இனிய அன்னை ஈன்றெடுத்த நாள்.
         சுறு சுறுப்பாய் இருப்பதற்கென்றே
           ’எறும்பு’ என்று வலைப்பெயர் வைத்தாய்!
              இன்றோ  பதிவுலகம் பக்கம் வாராமல்
                  நன்றாய்  ’பஸ்’ விட்டுக் கொண்டிருக்கின்றாய்!
                     திருமண வாழ்வில் இருமணம் இணைந்த
                         தருணத்தில் வசந்தங்கள் வரப்பெற்றாய்.
                           இல்லாளோடும், இனிய குழந்தை ஒன்றும்
                               இறைவன் வரமெனக் கொடுத்தார்.
                                  இந்த இனிய ’பிறந்த நாளில்’
                                      தந்திடுவேன் மனம் நிறைந்த வாழ்த்துக்களை,
                                         வாழிய பல்லாண்டு, வளம் நிறைந்து!           
Follow FOODNELLAI on Twitter

Thursday, 7 July, 2011

ஈ டிக்கெட் சேவை-இது ரொம்ப தேவை!

                               ஓரிடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு பயணம் செய்வதென்றால், பணம் இருந்தும், பயணம் செய்திட டிக்கெட்  கிடைக்காது திண்டாடும் நம்மில் பலரைப்  பார்க்கையில்,பணம் பத்தும் செய்திடும் ( பணம் இருந்தால் மட்டுமே, எல்லாம் முடிந்துவிடும்), என்று சொல்வதில் அர்த்தம் இல்லை என்றே எண்ணுகிறேன். 
Follow FOODNELLAI on Twitter

Monday, 4 July, 2011

மதிதா இந்து கல்லூரி பள்ளியில் மனம் மயங்கிய விழா.


நூற்றைம்பதாவது ஆண்டு விழா நுழைவு  வாயில்.
                 நெல்லைக்குப்  பெருமை சேர்க்கும், தொல்லைகள் களைய, துயரங்கள் தீர, எல்லையில்லாக் கல்வியை ஊட்டும், ம.தி.தா. இந்து கல்லூரி பள்ளியில், இனிதே நடைபெற்ற  நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழா கண்டு,  என் பள்ளி நாட்களை நினைத்து, மனம் மகிழ்வுற்றது. என்   மனம் மகிழ்ந்த நிகழ்ச்சி, உங்களுடன் பகிர்ந்திட:  
Follow FOODNELLAI on Twitter

Friday, 1 July, 2011

ATM மெஷின்கள் பயன்படுத்துப்வரா?எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதைங்க!

இன்று  முதல் வங்கி ATM களில்,அதாங்க தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில், பரிவர்த்தனை செய்யும்போது கவனமா இருங்க.   

Follow FOODNELLAI on Twitter