இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 31 August, 2011

ஈகைத்திருநாள் வாழ்த்து.

                                     சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்


                                       இனிய ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.

                                                   மிக்க அன்புடன்,
                                                   சங்கரலிங்கம்
                                                   காந்திமதி சங்கரலிங்கம்.
Follow FOODNELLAI on Twitter

Monday 29 August, 2011

யார் அந்த புண்ணியவான்? எச்சரிக்கைப் பதிவு.

                           எனது குடும்ப சூழல் காரணமாக, கடந்த ஒரு மாத காலமாகவே, நான் பதிவுலகம் பக்கம் சரியாக வரமுடியாமல் இருக்கிறேன். மிக அரிதாகவே, ஆன்லைனில் வர முடிகிறது. இந்த நிலையில், அதையும் கெடுக்க,யாரோ ஒரு புண்ணியவான், எனது yahoo மெயில் ஐ.டி.யை ஹாக் பண்ணி, அருவருப்பான ஸ்பேம் மெயில்களை  என் பெயரில் அனுப்பி வருகின்றார்.
Follow FOODNELLAI on Twitter

Thursday 25 August, 2011

புகையிலை போடு, பூமிக்குப் புண்ணியம் தேடு!

                
புகையிலைப் பழக்கம் சிலரை மட்டுமே அடிமையாக்கி வைத்திருந்த காலம் மாறி, புகையிலைப் பழகா இளம் சந்ததியினரே இல்லையென்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புகை - பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் நிற்பவர்களுக்கும் பகைதான்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 17 August, 2011

குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல உரை.

PEDICON-2011ல் குழந்தைகள் உணவில் கலப்படம் குறித்த உரை.
                       தமிழகத்திலுள்ள  குழந்தைகள் நல மருத்துவர்களின் 36 வது வருட  மாநில மாநாடு TAMIRABARANI PEDICON-2011, நெல்லையில், 12.08.2011 முதல் 14.08.2011 முடிய மூன்று தினங்கள் நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில், குழந்தைகள் உணவில் கலப்படம் குறித்து பதினைந்து நிமிடங்கள் பேச எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
Follow FOODNELLAI on Twitter

Saturday 13 August, 2011

பதிவுலகில் புதிர் போட்டி-புத்திசாலிகளுக்கு மட்டும்.


 பதிவுலகம் என்றாலே பக்கம் பக்கமாய் எழுதுவது, நேரம் பத்தலேன்னு சொல்லிக்கிட்டு, உள்குத்து பதிலொ(வொ)ன்றைப் போட்டு, பல தர்க்கங்கள் உருவாக்கிவிடுவது என்பதொன்றே  எழுதாத சட்டம் என்று இயற்றி வாழ்பவர்கள் மத்தியில், எழுத்துலக பிரபலங்கள்   பதினாறு பேர்          இணைந்து நடத்தும், டெரர்கும்மி என்ற வலைத்தளத்தில் ஒரு வித்யாசமான அறிவிப்பைப் பார்த்தேன்.
Follow FOODNELLAI on Twitter

Friday 12 August, 2011

பெண் சிசுக்களைக் கொல்லும் பேய்கள்.

அன்பு நெஞ்சங்களே, பதிவுலகில் இது என் முதல் படி. ஏற்றி விடுவதும், இறக்கி விடுவதும் ”உணவு உலகம்”  ரசிகர்கள் கைகளில்!
பெண்ணென்றால் பேயும் இறங்குமென்பர். ஆனால், பெண்சிசுக்களைக் கொல்லும் சில பேய்களும் இருக்கத்தான் செய்கிறதென்றால், நம்ப முடிகிறதா? ஆம், பெண் சிசுக்களை கொல்லும், மனிதப்  பேய்கள் அவை. சொல்வது உலக சுகாதார நிறுவனம் என்றால் ஜீரணிக்க சற்றே  சிரமமாகத்தான் இருக்கிறது.
Follow FOODNELLAI on Twitter

Monday 8 August, 2011

இளம் இயக்குநருடன் ஒரு இனிய சந்திப்பு

ரூஃபினா,கௌசல்யா,வடிவேல்,ஞானேந்திரன்,செல்வகுமர்,சீனா அய்யா,சங்கரலிங்கம்.


    டிஸ்கி-1: பதிவர் சந்திப்பு என்று சொன்னால்,நெல்லையில் எத்தனை பதிவர் சந்திப்பு என்றே, படையெடுத்து எங்களை உதைக்க வருது ஒரு கூட்டம்  என்பதால், இளம் இயக்குனர் சந்திப்பு என்று வைத்தேன் தலைப்பு.
Follow FOODNELLAI on Twitter

Sunday 7 August, 2011

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

                          அன்பு நண்பர்கள் அனைவருக்கும் 
                       நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
           
Follow FOODNELLAI on Twitter

Friday 5 August, 2011

பசித்திருப்போரைப் புசிக்க வைத்திடு!

                       
                         கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா மையம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ இல்லையோ, அழைத்து வந்து விட்டுச் செல்லப்படும் முதியவர்கள், மன நோயாளிகள் எண்ணிக்கை தினம் தினம் அதிகரிப்பது மட்டும் அன்றாடம் நடக்கும் கொடுமை. அப்படி விடப்படுபவர்கள் வெயிலிலும், மழையிலும், கடும் பனியிலும் படுவது காணாதென்று, பசியின் கொடுமையால், பிச்சை எடுத்துத் திரிவது கொடுமையிலும் கொடுமை.
Follow FOODNELLAI on Twitter

Monday 1 August, 2011

மட்டற்ற மகிழ்ச்சி மனதில் மலர்ந்திட!

மாஸ்டர் யோஷிஹிரோ மோரி உரை. அருகில் டாக்கி
                                     
கடந்த வாரத்தின் கடைசி நாள். மாலை வேளையில் ஒரு மகிழ்ச்சி தரும் விழா. வந்து கலந்திட வேண்டுமென்று, வாஞ்சையுடன் அழைத்த இரு இளம் உள்ளங்கள். என்ன நிகழ்ச்சியென்று கேட்டதற்கு, ”மனம் மகிழ்ச்சியாய் இருந்திட-கனவுகள் மெய்ப்பட” என்று மட்டும் சொன்னனர். மறக்காமல்,மனதோடு மட்டும் சகோதரி கௌசல்யாவிற்கும் தகவல் சொன்னேன்.தனது மன்னவனோடு வந்திருந்தார்.
Follow FOODNELLAI on Twitter