இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 18 May, 2012

சென்னை யூத் பதிவர் சந்திப்பு.

நல்ல முயற்சி-  நாமும் பங்கு பெறுவோம், பாராட்டுவோம்:


                           சென்னை யூத் பதிவர் சந்திப்பு பற்றி “மெட்ராஸ் பவன்” சிவகுமாரின் பதிவில் வந்த செய்தியை இங்கே மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்கள்


                வரும் ஞாயிறு சென்னையில் நடக்கவுள்ள யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இரு சாதனையாளர்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளதை மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
Follow FOODNELLAI on Twitter

Wednesday 16 May, 2012

சென்னையில் சிறு பதிவர் சந்திப்பு.

சத்யம் வளாகத்தில் சிவாவை எட்டி உதைத்த பெண்

இதன் முதல் பாகம் இங்கே
                               ஆம், அடுத்து என்னை சிவா அழைத்துச்சென்ற இடம். சத்யம் தியேட்டர்.வாங்க சார் படம் பார்க்கலாமென்று வழக்கு எண்.18/9ல்  வசமாய் சிக்கவைத்துவிட்டார். இப்போதெல்லாம், தியேட்டர் சென்று படம் பார்ப்பதென்பது, மிக அரிதாகிவிட்டது.ஆனால், சத்யம் வளாகம் சென்று சினிமா பார்த்ததும், ஓர் அனுபவம்தான். அத்தனை சுத்தம். விகடனில் 55 மார்க் வாங்கிய படம்.  இருக்கையை விட்டு எழுந்து செல்ல மனம் வரவில்லை. சத்யம் வளாகத்தில், புகைப்படம் எடுக்க அனுமதியில்லையாம். கிடைத்த கேப்பில், சிவாவை ஒரு நாட்டிய வால்போஸ்டருக்கருகில் நிறுத்தி நான் எடுத்தபடத்தைப் பார்த்தபோது, அப்பெண் சிவாவை எட்டி உதைப்பது போன்று அமைந்திருந்தது.
Follow FOODNELLAI on Twitter

Monday 14 May, 2012

சென்னையில் சிவாவுடன் ஒருநாள்.

பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவம்.
              சென்னைப்பக்கம் வந்து சில நாளாச்சு. ”மெட்ராஸ் பவன்”சிவாவிடம் பேசினேன். இந்த வார இறுதியில், என்னுடன் இருக்கவேண்டுமென அன்புக்கட்டளையிட்டார். சரி எங்கு, எப்போது சந்திப்பது என்று கேட்டவுடன், மகிழ்ச்சியில் மனம் மகிழ்ந்தார். சனிக்கிழமை காலை 8 மணிக்குள் தியாகராஜநகர் வாருங்கள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிற்கு செல்லலாமென்றார்.
Follow FOODNELLAI on Twitter

Friday 11 May, 2012

உணவுப்பொருளில் மரபணுமாற்றம். ஏற்றம் தருமா- ஏமாற்றம் தருமா?

இது ஒரு மீள் பதிவு:
உணவுப்பொருளில் மரபணுமாற்றம்.
ஏற்றம் தருமா- ஏமாற்றம் தருமா?

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரி  கலந்த உணவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவாகும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓராயிரம் மரபணுக்கள் உடலில் உண்டு. ஒவ்வொரு மரபணுவும் டி.என்.ஏக்களால் உருவானவை. உயிரினங்கள் தங்கள் வேலையைச் செய்யவும், தம்மைத்தாமே பழுது பார்த்துக்கொள்ளவும், இனப்பெருக்கம் செய்யவும் தேவையான தகவல்கள் டி.என்.ஏக்கள் மூலமே அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
Follow FOODNELLAI on Twitter